TAMIL

குறைந்த எரிபொருளில் நீண்ட தூரம் செல்லும் பைக் எது? அதிகபட்ச மைலேஜ் கொண்ட பைக்குகளின் லிஸ்ட்!

பைக்குகள் ஓட்டுவது பலருக்கும் பிடித்தமானது. அதிலும், குறைந்த எரிபொருளில் நீண்ட தூரத்தை கடக்கக்கூடிய சில மாடல்கள் மைலேஜ் கொடுப்பதில் பிரபலமானவை. தினமும் சராசரியாக 30-40 கிலோமீட்டர் பயணம் செய்தால், மாதம் ஒருமுறை டாங்கை நிரப்பினால் போதும். ஒரு மாதம் வரை மீண்டும் டேங்கை நிரப்ப வேண்டிய அவசியம் இருக்காது. அதிக மைலேஜ் தரும் பைக்குகள் அதிகபட்ச மைலேஜ் தரும் அருமையான பைக்குகளின் பட்டியலில் முதலில் வருவது பஜாஜ் என்றால், அதனை அடுத்து டிவிஸ், ஹீரோ ஹோண்டா என பல பைக்குகள் பட்டியலில் இருக்கின்றன. பஜாஜ் பிளாட்டினா 110 ஒரு லிட்டர் எரிபொருளுக்கு தோராயமாக 70-75 கிலோமீட்டர் வரை செல்லும் பஜாஜ் பிளாட்டினா பைக்கின் எஞ்சின் 115 சிசி கொண்டது. இதில் வசதியான சஸ்பென்ஷன், டியூப்லெஸ் டயர்கள் உள்ளது. DTS-i இன்ஜின் தொழில்நுட்பம் கொண்ட அருமையான பைக் இது. டிவிஎஸ் ஸ்போர்ட் ஒரு லிட்டர் எரிபொருளுக்கு தோராயமாக 70-75 கிலோமீட்டர் வரை செல்லும் டிவிஎஸ் ஸ்போர்ட் பைக்கின் எஞ்சின் 110 சிசி ஆகும். Ecothrust இயந்திரம், நேர்த்தியான வடிவமைப்பு மற்றும் குறைந்த எடை கொண்ட தரமான பைக் இது. ஹீரோ ஸ்ப்லெண்டர் ஐஸ்மார்ட் (Hero Splendor iSmart) ஒரு லிட்டர் எரிபொருளுக்கு தோராயமாக 70 கிலோமீட்டர் மைலேஜ் கொடுக்கும் ஹீரோ ஸ்ப்லெண்டர் ஐஸ்மார்ட் பைக்கின் எஞ்சின் 113 சிசி கொண்டது. i3S தொழில்நுட்பம் (இயந்திரம் தானாகவே அணைக்கப்படும்/ஆன் ஆகும்), ஸ்டைலான தோற்றம் என கலக்கும் பைக் இது ஹோண்டா சிடி 110 ட்ரீம் தோராயமாக 65-70 கிமீ/லி செல்லும் ஹோண்டா சிடி 110 ட்ரீம், 109.51 சிசி என்சின் கொண்டது. Honda Eco Technology (HET), உயரமான மற்றும் வசதியான இருக்கை என கலக்கும் பைக் இது. ஹீரோ எச்எஃப் டீலக்ஸ் தோராயமாக 65-70 கிமீ/லி வரை செல்லும் ஹீரோவின் எச்எஃப் டீலக்ஸ் எஞ்சின் 97.2சிசி கொண்டது. i3S டெக்னாலஜி, சைலண்ட் ஸ்டார்ட் கொண்ட நல்ல பைக் இது. மேலும் படிக்க | அதிநவீன விவோ வி40 5ஜி போன் மார்க்கெட்டுக்கு வந்தாச்சு! அறிமுகச் சலுகை விலை எவ்வளவு தெரியுமா? இந்த பைக்குகல் அனைத்துமே, பணத்தை மிச்சப்படுத்துவது மட்டுமின்றி, மீண்டும் மீண்டும் எரிபொருள் நிரப்பும் தொல்லையில் இருந்தும் விடுதலைக் கொடுக்கிறது. பொதுவாக சரியான வாகன பராமரிப்பு, வழக்கமான சர்வீசிங் மற்றும் முறையாக வாகனத்தை செலுத்துவது என்பது வாகனத்தில் மைலேஜை பராமரிக்க அவசியம் ஆகும். பொதுவாக பைக்குகளின் மைலேஜை அதிகரிப்பது எப்படி என்பதைத் தெரிந்துக் கொண்டால், உங்கள் வாகனம் உங்களுடைய நண்பனாக இருக்கும். பைக் இன்ஜினை தவறாமல் சர்வீஸ் செய்யுங்கள். எஞ்சின் எண்ணெயை அவ்வப்போது மாற்றி, காற்று வடிகட்டியை சுத்தம் செய்யவும் அல்லது மாற்றவும். மைலேஜை அதிகரிப்பதில் டயர் அழுத்தத்தை பராமரிப்பது முக்கிய பங்கு வகிக்கிறது. டயரில் காற்று குறைந்திருந்தால், எஞ்சின் கடினமாக உழைக்க வேண்டும், இது எரிபொருள் செலவை அதிகரிக்கும். திடீர் முடுக்கம் மற்றும் பிரேக்கிங்கைத் தவிர்க்கவும். படிப்படியாக வேகத்தை அதிகரித்து, சீராக சென்றால், எஞ்சினின் அழுத்தம் குறையும். மைலேஜ் அதிகரிக்கும். கிளச் பயன்படுத்துவது தேவையில்லாமல் கிளட்ச்சைக் கீழே பிடிப்பது அல்லது கிளட்ச்சை பாதியில் அழுத்தி ஓட்டுவது மைலேஜைக் குறைக்கும், எனவே, கிளட்சை சரியாகவும் குறைவாகவும் பயன்படுத்துவது நல்லது. கார்பூரேட்டரின் டியூனிங் உங்கள் பைக்கில் கார்பூரேட்டர் இருந்தால், அதை சரியாக டியூன் செய்ய வேண்டும். எரிபொருள் மற்றும் காற்றின் கலவை சரியான அளவில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மேலும் படிக்க | ஓலா மின்சார மோட்டார் சைக்கிள்! ரோட்ஸ்டர் சீரிஸில் 3 புதிய பைக்குகள் அறிமுகம்! விலை சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.