TAMIL

இரவில் சாப்பிடவே கூடாத 5 உணவுகள்.... உஷார் - ஆபத்து அதிகம்..!

உணவில் மட்டும் ஒருவர் கவனம் செலுத்தவில்லை என்றால் ஆரோக்கியம் கெட்டுவிடும். எனவே, அன்றாட உணவில் மிக கவனமாக இருக்க வேண்டும். பெரும்பாலும் காலை, மதிய உணவுகள் குறித்து தெளிவாக இருப்பவர்கள் பலரும் இரவு உணவு மீது அக்கறை கொள்வதில்லை. காலை மற்றும் மதிய உணவுகளைவிட இரவு நேரத்தில் தான் எந்த உணவுகளை சாப்பிட வேண்டும், எந்த உணவுகளை சாப்பிடக்கூடாது என்பதை தெளிவாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஏனென்றால் இரவு தூங்கும் நேரத்தில் வயிற்றில் அசௌகரியம் மற்றும் ஆரோக்கிய பாதிப்புகள் இரவு உணவுகளால் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அந்தவகையில் ஊட்டச்சத்து நிபுணர் சாக்ஷி லால்வானி இரவு உணவு பற்றி தெரிவித்துள்ள முக்கிய டிப்ஸை தெரிந்து கொள்ளுங்கள். இரவு நேரத்தில் நீங்கள் சாப்பிடக்கூடாத உணவுகள் கீரை அதிக நார்ச்சத்து மற்றும் இரும்புச்சத்து இருப்பதால், கீரையை இரவு நேர உணவில் சேர்த்துக்கொண்டால், அது மெதுவாக ஜீரணமாகி, வயிற்று உப்புசத்தை ஏற்படுத்தும். மேலும் கீரையை இரவில் சாப்பிடுவதால் வயிற்றில் அசௌகரியம் ஏற்படும். பழங்கள் பழங்கள் காலை, மதியம் மற்றும் மாலை நேரங்களில் சாப்பிடலாம். எந்த பழமாக இருந்தாலும் அதனை ஜூஸ் போட்டும் குடிக்கலாம். ஆனால் நீங்கள் எந்த உணவை சாப்பிடுகிறீர்கள் என்பதை பொறுத்து பழங்களையும், ஜூஸ்களையும் குடிக்க வேண்டும். சில உணவுகளுக்கு சில பழங்கள் ஒவ்வாமை என்பதால், அவற்றை சாப்பிடும்போது வயிற்றில் இயல்பாகவே செரிமானம் உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர்கொள்வீர்கள். குறிப்பாக இரவு நேரத்தில் பழங்களில் இருக்கும் அதிக சர்க்கரை உள்ளடக்கம் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இது தூக்கத்தையும் பாதிக்கிறது. எனவே இரவில் சாப்பிட வேண்டாம். பச்சை வெள்ளரி வெள்ளரி மற்றும் பீட்ரூட் இரவு உணவில் பலர் சேர்த்துக் கொள்கிறார்கள். உண்மையில் இந்த உணவுகளை இரவில் சாப்பிடக்கூடாது. ஏனென்றால் இவற்றின் இயல்பு குளிர்ச்சியை கொடுக்கக்கூடியது. இவற்றைச் சாப்பிட்டதும் இரவில் வயிற்றில் சூடு குறையத் தொடங்குகிறது. இது குடல் இயக்கத்தை பாதிக்கும். அதனால் இந்த உணவுகளை இரவில் சாப்பிடாமல் இருப்பது நல்லது. மேலும் படிக்க | ஆஸ்டியோபோரோஸிஸ் முதல் இரத்த சோகை வரை... வெறும் வயிற்றில் ஊற வைத்த 4-5 பேரீச்சம்பழம் போதும் முளைகட்டிய பயிர்கள் முளைகட்டிய பயிர் உணவுகள் மிகவும் ஆற்றல் வாய்ந்தவை. பச்சைப்பயிறு, சுண்டல் உள்ளிட்ட பயிர்களை முளைகட்ட வைத்து சாப்பிடுவது மிகச் சிறந்த விஷயமே. குறிப்பாக காலை நேரத்தில் சாப்பிட்டால் உடலுக்கு தேவையான இரும்புச் சத்து, புரதம், நார்ச்சத்து உள்ளிட்டவை கிடைக்கும். நாள் முழுவதும் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கலாம். ஆனால், முளைகட்டிய பயிர் உணவுகளை இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாது. முளைகட்டிய பயிர் உணவுகளில் ஏற்கனவே கூறியது போல நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதன் காரணமாக, அவற்றை இரவில் சாப்பிட்டால், வயிற்றில் வாயு ஏற்படும். அது வயிற்றில் அசௌகரியம் ஏற்படுத்தும். தயிர் தயிர் என்றாலே பிடிக்காதவர்கள் இருக்க மாட்டார்கள். இதில் பல ரெசிப்பிக்கள் செய்துவிடலாம். அதுவும் குறுகிய நேரத்தில் உணவுக்கு தயார் செய்யக்கூடிய ரெசிபிக்களில் தயிரும் ஒன்று. இதனாலேயே வேலைக்கு சென்று திரும்பும் பலரும் தயிரில் ஏதேனும் ஒரு ரெசிபி செய்து இரவு உணவை முடித்துவிடுகிறார்கள். உண்மையில் தயிர் இரவில் சாப்பிடக்கூடாது. இது செரிமானத்தை பாதிக்கும். சளி உருவாக முக்கிய காரணமாக இருக்கும். எனவே இரவு நேரத்தில் தயிர் சாப்பிடுவதை நிறுத்தவும். (பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். Media இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.) மேலும் படிக்க | இந்த குப்பை உணவுகளுக்கு குட்பை சொல்லுங்கள்...! புத்தாண்டு உறுதிமொழி வெல்லட்டும் சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.