TAMIL

இது 77ஆவது சுதந்திர தினமா? அல்லது 78ஆவதா?... குழப்பமே வேண்டாம் - ஈஸியா புரிந்துகொள்ளலாம்!

77th or 78th Independence Day: சுதந்திர தினம் என்றாலே சிறுவயதில் இருந்து மாறுவேட போட்டி, பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி ஆகியவைதான் பலருக்கும் நியாபகம் வரும். சுதந்திரம் தினம் அன்று விடுமுறை என்றாலும் கூட காலையில் பள்ளியில் கொடியேற்றிய பின்னர்தான் இந்த போட்டிகள் அனைத்தும் நடைபெறும். பள்ளி பிற்பகலில் நிறைவடைந்த போகும்போது அனைவருக்கும் சாக்லேட் கொடுப்பார்கள். அப்படியே பள்ளி முடித்து வீடு திரும்பினால் டிவியில் அர்ஜூன் இயக்கி நடித்த ஜெய்ஹிந்த் படம் மேட்னி ஷோவாக போட்டிருப்பார்கள். மேலும், பல்வேறு தொலைக்காட்சிகளில் அன்று பட்டிமன்றம் உள்பட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள், திரைக்கு வந்த சில மாதங்களே ஆன புத்தம் புதிய சூப்பர் ஹிட் திரைப்படங்கள் அனைத்தும் ஒளிப்பரப்படும். காலையில் ஆரம்பித்தால் இரவு வரை தொலைக்காட்சிக்கு முன்னாடியே சுதந்திர தினத்தை செலவிட்டுவோம். இது நாளாக நாளாக மாறிவிடும், மாறிவிட்டது எனலாம். எப்போதும் வரும் குழப்பம் ஆனால், இன்றும் சுதந்திர தினம் என்றால் மாறாமல் இருப்பது ஒன்று இருக்கிறது. அது என்னவென்று தானே யோசிக்கிறீர்கள்... அதைதான் இங்கு விரிவாக பார்க்கப் போகிறோம். அதற்கு முன் இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க... தற்போது கொண்டாடப்படும் இந்த சுதந்திரம் தினம் (Independence Day 2024) இந்தியாவின் 77ஆவது சுதந்திர தினமா அல்லது 78ஆவது சுதந்திர தினமா...? இணையத்தை பார்க்காமல் டக்குனு பதில் சொல்ல முடிந்ததா...? மேலும் படிக்க | 78வது சுதந்திர தினம் 2024: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள்..! இல்லை அல்லவா... நிச்சயம் இந்த கேள்வியால் பலருக்கும் குழப்பமே ஏற்படும். ஆனால், சரியானது எது என தெரிந்துவைத்துக்கொள்வதன் மூலம் மீண்டும் இந்த குழப்பம் ஏற்படாது. அதுமட்டுமின்றி, அதை எப்படி எளிமையாக நினைவில் வைத்துக்கொள்வது என்பது குறித்தும் இங்கு காணலாம். இது 78ஆவது சுதந்திர தினம் - ஏன்? அரசின் அறிவிப்புபடி, இது 78ஆவது சுதந்திர தினமாக கொண்டாடப்படுகிறது. அது ஏனென்றால், இந்தியாவுக்கு சரியாக 1947ஆம் ஆண்டு ஆக. 15ஆம் தேதி ஆங்கிலேயரின் காலனியாதிக்கத்தில் இருந்து சுதந்திரம் கிடைத்தது. அப்படியென்றால், இந்தியாவின் முதல் சுதந்திரம் தினம் என்பது 1947ஆம் ஆண்டிலேயே கொண்டாடப்பட்டுவிட்டது. அந்த வகையில், 1947ஆம் ஆண்டையும் சேர்த்து இப்போது வரை நீங்கள் கணக்கிட்டால் 78 ஆண்டுகள் வரும். அதன்படியே இது 78ஆவது சுதந்திர தினமாகும். அதேபோல், 1948ஆம் ஆண்டில் சுதந்திரம் அடைந்து முதலாம் ஆண்டு நிறைவு பெற்றிருக்கும். அதன்படி பார்த்தோமானால் 1948இல் இருந்து இப்போது வரை கணக்கிட்டால் 77 ஆண்டுகள் வரும். இது 77ஆவது ஆண்டு நிறைவாகும். எனவே, 78ஆவது சுதந்திர தினம் என்று சொல்வதே சரியானது. இதே கணக்கீடுதான் உங்கள் வயதுக்கும் வரும். இதை மனதில் வைத்துக்கொண்டால் அடுத்த முறை உங்களிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பும்போது குழப்பமே வராது. மேலும் படிக்க | சிறையில் முதல்வர் கெஜ்ரிவால்... டெல்லியில் தேசிய கொடியை ஏற்றப்போவது யார் தெரியுமா? சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.