TAMIL

காதலர்கள் அதிர்ச்சி! இனி OYO-வில் ரூம் போட முடியாது - வருது பெரிய மாற்றம்

OYO Check-In Rules Changes Latest Updates: அடிக்கடி சுற்றுலா செல்பவர்கள், வெளியூர் பயணம் மேற்கொள்பவர்களுக்கு எப்போதுமே போகும் ஊர்களில் ஓரிரு நாள்களுக்கு தங்கும் வசதியை தேடுவது பெரிய வேலையாக இருக்கும். முன்பெல்லாம் லாட்ஜ், ஹோட்டல் ஆகியவற்றை தேடிய அலைய வேண்டும். வழிபாட்டுத் தலங்கள் இருக்கும் ஊர்களில் அந்த நேரத்தில் தங்குமிடத்தை கண்டுபிடிப்பதும் கடினம். அதேபோல், முகூர்த்த நாள்களிலும் சாதாரணமாக யாருக்குமே ரூம் கிடைக்காது. அப்படியிருக்க, பலரும் முன்பதிவு செய்துகொள்வார்கள். தங்களின் பயணத்திட்டத்தின் அடிப்படையில் ரூம்களை முன்பதிவு செய்துகொள்வதன் மூலம் எவ்வித கவலையும் இன்றி சுற்றுலாவுக்கு மேற்கொண்டு திட்டமிடலாம். அந்த வகையில், தற்போது நவீன காலகட்டத்தில் இதுபோன்று தங்குமிடங்களை முன்பதிவு செய்துகொள்ள ஏராளமான நிறுவனங்கள் வந்துவிட்டன. அவற்றின் செயலி/இணையதளத்தின் வழியாகவே நீங்கள் லாட்ஜ், ஹோட்டல் அறைகளை முன்பதிவு செய்துகொள்ளலாம். Check In விதிகளில் மாற்றம்? அறைகளை முன்பதிவு செய்துகொள்ள உங்களின் அடையாள அட்டைகள் கேட்கப்படும். அது சரிபார்க்கப்பட்ட பின்னரே அறையை ஒதுக்குவார்கள். அதேபோல் ஒரு தம்பதி தனியாக அறை எடுக்க வேண்டும் என்றால் திருமணமாகியிருந்தால் மட்டுமே அவர்களுக்கு அனுமதி கிடைக்கும். ஆனால், ஒரு தம்பதி திருமணமாகாவிட்டாலும் வழக்கம்போல் அரசு அடையாள அட்டையை மட்டும் சமர்பித்து அறை முன்பதிவு செய்துகொள்ளலாம் என பழைய நடைமுறையை மாற்றியது OYO நிறுவனம் . மேலும் படிக்க | முகேஷ் அம்பானியின் சொகுசு பங்களா ஆன்டிலியா... அந்த இடத்தில் முதலில் என்ன இருந்தது தெரியுமா? இதனால், OYO அறைகள் இளைஞர்கள், காதலர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்தது. இந்தியாவில் ஹோட்டல், லாட்ஜ் அறைகள் முன்பதிவு செய்வதில் OYO நிறுவனம் பிரபலமடைந்து முன்னணியில் இருக்கிறது எனலாம். அப்படியிருக்க, OYO நிறுவனம் அதன் Check-In கொள்கையில் பெரிய மாற்றத்தை கொண்டுவர முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இனி இந்த ஆவணங்கள் தேவை... அதாவது தம்பதிகள் திருமணமாகியிருந்தால் மட்டுமே இனி அறைகள் வாடகைக்கு விடப்படும் என OYO நிறுவனம் அறிவித்துள்ளது. இது முன்பதிவு செய்வோருக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த முன்னெடுப்பு உத்தர பிரதேசத்தின் மீரட்டில் மட்டும் புத்தாண்டு முதல் செயலாக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீரட்டில் உள்ள அனைத்து OYO அறைகளிலும் இதை உடனடியாக பின்பற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது. களத்தில் இந்த புதிய முன்னெடுப்புக்கான வரவேற்பு எப்படி இருக்கிறது என்பதை பொறுத்து இத்திட்டம் மற்ற நகரங்களுக்கும் விரைவில் கொண்டுவரப்படும் என்றார். இனி தம்பதிகள் அறை வாடகைக்கு எடுக்க தங்கள் இருவரும் கணவன் - மனைவிதான் என்பதை உறுதிசெய்யும் வகையில் ஆவணம் ஒன்றை சமர்பிக்க வேண்டும் என OYO தெரிவித்துள்ளது. திருமணமாகாத தம்பதிகள் OYO ஹோட்டல்களை அதிகம் பயன்படுத்துவதாகவும், இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீரட்டில் மட்டுமின்றி பல்வேறு நகரங்களிலும் இதுகுறித்த புகார்கள் எழுந்துள்ன. பயணிகளின் பாதுகாப்பை கருதியே இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. OYO-வின் பிற முன்னெடுப்புகள் OYO நிறுவனத்தின் வட இந்திய பிராந்தியத் தலைவர் பவாஸ் ஷர்மாவின் கூறுகையில்,OYO நிறுவனத்தின் இந்த முன்னெடுப்பானது குடும்பங்கள், மாணவர்கள், வணிகம், மதம் மற்றும் தனிப் பயணிகளுக்கு பாதுகாப்பான அனுபவத்தை வழங்கி, பழமைவாத கருத்துகளை மாற்றி ஒரு பிராண்டாக தன்னைத்தானே முன்னிறுத்துவதே நோக்கமாகக் கொண்டது. நாடு முழுவதும் காவல்துறை மற்றும் ஹோட்டல் உரிமையாளர்களுடன் பாதுகாப்பான விருந்தோம்பல் நடைமுறைகள் குறித்து கூட்டு கருத்தரங்குகளை நடத்துதல், OYO நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி அங்கீகரிக்கப்படாத ஹோட்டல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது மற்றும் சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் ஹோட்டல்களை கண்டறிந்து அவற்றை தடுப்புப்பட்டியலில் சேர்த்தல் போன்ற பல நாடு தழுவிய முயற்சிகளை OYO முன்னெடுத்துள்ளது" என்றார். மேலும் படிக்க | காவல் நிலைய கழிவறையில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த காவலர்! வைரலான வீடியோவால் பரபரப்பு.. சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.