TAMIL

MCG டெஸ்ட் வரலாறு: அதிக ரன்களை அடித்த டாப் 5 இந்திய பேட்டர்கள் - முதலிடத்தில் யார் தெரியுமா?

India vs Australia Latest News: மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் வரும் டிச. 26ஆம் தேதி இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்ட்ர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் (Border Gavaskar Trophy) 4ஆவது டெஸ்ட் போட்டி தொடங்க இருக்கிறது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் தொடரை வெல்லும் முனைப்பில் காத்திருக்க இந்த 4ஆவது போட்டி மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் (Melbourne Cricket Stadium) சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் ஒரு நேரத்தில் அமர்ந்து போட்டியை காண முடியும். இங்கு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் நடைபெறும் இந்த பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி மிகவும் பிரபலமானதாகும். பார்வையாளர்களின் ஏகோபித்த வரவேற்புடன் இங்கு ஆஸ்திரேலிய அணி தனது முழு ஆதிக்கத்தை செலுத்தும் என்றாலும் கடந்த 2018ஆம் ஆண்டு மெல்போர்னில் நடைபெற்ற பாக்ஸிங் டே டெஸ்டில் 137 ரன்கள் வித்தியாசத்திலும், 2020ஆம் ஆண்டு மெல்போர்னில் நடைபெற்ற பாக்ஸிங் டே டெஸ்டில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. MCG-இல் டாப் 5 பேட்டர்கள் எனவே, இந்திய அணி இங்கு ஹாட்ரிக் வெற்றி வெறியுடன் காத்திருக்கிறது. இதுவரை இங்கு 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள இந்திய அணி 4 முறை வென்றுள்ளது. 2018, 2020 மட்டுமின்றி 1977ஆம் ஆண்டில் 222 ரன்கள் வித்தியாசத்திலும் மற்றும் 1981ஆம் ஆண்டில் 59 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றிருக்கிறது. மேலும் 2 முறை டிரா செய்துள்ள இந்தியா இங்கு 8 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்திக்கிறது. அந்த வகையில், டெஸ்ட் அரங்கில் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய அணி சார்பில் அதிக ரன்களை அடித்த டாப் 5 பேட்டர்களை இங்கு காணலாம். மேலும் படிக்க | Champions Trophy 2025: பறிபோகும் சுப்மான் கில் இடம்! ஒருநாள் அணிக்கு வரும் ஜெய்ஸ்வால்! 5. ராகுல் டிராவிட் ராகுல் டிராவிட் இங்கு 4 போட்டிகளில் 8 இன்னிங்ஸ்களில் விளையாடி 263 ரன்களை குவித்துள்ளார். அதிகபட்சமாக 92 ரன்களை அடித்துள்ளார். அவரின் சராசரி 30.09 ஆகும். இங்கு 2 அரைசதங்களை மட்டுமே இவர் அடித்துள்ளார். 4. வீரேந்தர் சேவாக் வீரேந்தர் சேவாக் 2 போட்டிகளில், 4 இன்னிங்ஸ்களில் விளையாடி 280 ரன்களை அடித்துள்ளார். அவரின் சராசரி 70.00 ஆகும். அதிகபட்சமாக 195 ரன்களை அவர் அடித்துள்ளார். இதில் 1 சதம், 1 அரைசதம் அடக்கம். 3. விராட் கோலி விராட் கோலி இங்கு இதுவரை 3 போட்டிகளில் விளையாடி உள்ளார். இந்த 6 இன்னிங்ஸ்களில் 316 ரன்களை அவர் குவித்துள்ளார். அவரின் சராசரி 52.66 ஆக உள்ளது. இங்கு அவர் 2 அரைசதங்கள், 1 சதம் அடித்துள்ளார். வரும் டிச.26ஆம் தேதி நடைபெறும் போட்டியில் விராட் கோலி விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது. 2. அஜிங்கயா ரஹானே ராஹானே கடந்த முறை கேப்டனாக இருந்து இங்கு வெற்றி பெற்று தந்தது மட்டுமின்றி சதமும் அடித்து மிரட்டினார். இவர் இங்கு 3 போட்டிகளில் விளையாடி 6 இன்னிங்ஸ்களில் 369 ரன்களை குவித்துள்ளார். அவரின் சராசரி 73.80 ஆகும். இங்கு மொத்தம் 2 சதங்களை ரஹானே அடித்துள்ளார். துரதிருஷ்டவசமாக ரஹானே தற்போது இந்திய அணியில் இடம்பெறவில்லை. 1. சச்சின் டெண்டுல்கர் சச்சின் தான் இங்கு அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடியவர் ஆவார். அவர் 5 போட்டிகளில் 10 இன்னிங்ஸ்களில் விளையாடி 449 ரன்களை குவித்துள்ளார். சராசரி 44.90 ஆகும். ரஹானே, விராட் கோலியை விட குறைவான சராசரி ஆகும். மூன்று அரைசதங்கள், 1 சதத்தை இங்கு அடித்துள்ளார். மேலும் படிக்க | இந்திய அணிக்கு ஜாக்பாட் தான்... சாம்பியன்ஸ் டிராபியை அடிக்க சூப்பர் வாய்ப்பு! சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.