TAMIL

சீனாவில் வேகமாக பரவும் புதிய HMPV வைரஸ்.... அதிர்ச்சியில் உலக நாடுகள்

சீனாவில் கடந்த 2019ம் ஆண்டு கொரோனா வைரஸ் பெருந்தொற்று கண்டறியப்பட்ட நிலையில், கொரோனா வைரஸ் என்னும் கோவிட்-19 உலகம் முழுவதும் மின்னல் வேகத்தில் பரவி உலகையே முடக்கி விட்டது. கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு இந்த வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டு உலகம், அதன் தாக்கத்தில் இருந்து விடுபட்ட நிலையில், 5 ஆண்டுகள் கழித்து, சீனாவில் புதிய வகை வைரஸ் ஒன்று வேகமாக பரவி வருவதாக வெளியாகி இருக்கும் செய்தி உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சீனாவில் நிரம்பி வழியும் மருத்துவமனைகள் சீனாவை தாக்கி வரும் மர்ம நோய் காரணமாக அங்குள்ள மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. பல இடங்களில் தகனம் செய்யும் இடங்களில் இடப்பற்றாக்குறை ஏற்படும் அளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டது. இந்த நிலை, கொரோனா தொற்றுநோய் காலகட்டத்தின் திவீர நிலையை மக்களுக்கு நினைவூட்டம் வகையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நோய் என்ன, இது எவ்வளவு ஆபத்தானது மற்றும் உலகம் மீண்டும் லாக்டவுன் போன்ற சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்ற கேள்வி பலர் மனதில் எழுந்துள்ளது. சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்தும் வைரஸ் சீன ஊடகங்கள் மற்றும் சுகாதார நிபுணர்களின் இது குறித்து கூறுகையில், இந்த முறை பிரச்சனையின் மையம் 'Human Meta-Pneumo Virus (HMPV)' என்ற ஒரு வைரஸ் என்றும் இது முக்கியமாக சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது என்றும் கூறுகின்றனர். இந்த வைரஸ் நோய், எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள குழந்தைகள் மற்றும் வயதானவர்களை அதிகம் பாதிக்கிறது. என்றாலும், இந்த வைரஸ், கொரோனாவைப் போல ஆபத்தானது அல்ல என்று நிபுணர்கள் நம்புகிறார்கள். ஆனால் அதன் அறிகுறிகள் மற்றும் வேகமாக பரவும் திறன் ஆகியவை கவலைக்குரிய விஷயமாக உள்ளது என்கின்றனர். ஆர்எஸ்வி மற்றும் இன்ஃப்ளூயன்ஸா பாதிப்பு HMPV தவிர, பிற வைரஸ்களும் சீனாவில் பரவுகின்றன, அவற்றில் RSV (சுவாச ஒத்திசைவு வைரஸ்) மற்றும் காய்ச்சல் ஆகியவை முக்கியமானவை. இந்த வைரஸ்கள் அனைத்தும் சேர்ந்து நோய்த்தொற்றின் விகிதத்தை அதிகரித்து நிலைமையை மேலும் மோசமாக்குகின்றன. HMPV பாதிப்பின் அறிகுறிகள் மற்றும் பாதிப்புகள் HMPV தொற்றின் அறிகுறிகள் இருமல், காய்ச்சல், தொண்டை வலி, மூச்சுத் திணறல் மற்றும் பலவீனம் போன்ற பொதுவான சளி போன்ற அறிகுறிகளை காட்டுகிறது. ஆனால் இது கடுமையான சந்தர்ப்பங்களில், குறிப்பாக குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு நிமோனியா மற்றும் மூச்சுக்குழாய் அழற்சியை ஏற்படுத்தும். இந்த வைரஸுக்கு தற்போது குறிப்பிட்ட தடுப்பூசி அல்லது மருந்து எதுவும் இல்லை என்பதால், அறிகுறிகளைக் கட்டுப்படுத்துவதன் அடிப்படையில் மட்டுமே அதன் சிகிச்சை செய்யப்படுகிறது என்கின்றனர் மருத்துவர்கள். மேலும் படிக்க | யோகாசனங்கள்: கீழ் முதுகு வலியைக் குறைக்கும் UPAMPBK யோகாசனம் வழங்கும் ரகசிய பலன்கள்! சீனாவில் மோசமடையும் நிலைமை சீனாவின் பல பெரிய நகரங்களில் உள்ள பெரிய மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பியுள்ளன. மருத்துவர்கள், செவிலியர்கள் 24 மணி நேரமும் பணியாற்றி வருகின்றனர். தகன மைதானத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. HMPV மற்றும் பிற வைரஸ்களின் தாக்கம் தற்போது பிராந்திய அளவில் மட்டுமே இருப்பதாக நிபுணர்கள் நம்புகின்றனர். இருப்பினும், மற்ற நாடுகள் இதைக் கண்காணித்து தங்கள் சுகாதார சேவைகளை தயார் நிலையில் வைத்திருப்பது முக்கியம் எனவும் கூறப்படுகிறது. மேலும் படிக்க | கேரட் மட்டுமல்ல... இந்த சூப்பர் உணவுகளும் பார்வையை கூர்மையாக்கும் சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.