TAMIL

புது போன் வாங்க பிளானா....2025 ஜனவரியில் அறிமுகமாகும் சில சூப்பர் போன்கள் விபரம் இதோ

2025 ஜனவரியில் அறிமுகமாகும் ஸ்மார்ட்போன் விபரம்: ஸ்மார்ட்போன்களைப் பொறுத்தவரை 2024 மிகவும் நல்ல ஆண்டாக இருந்தது. ஐபோன் 16 சீரிஸ், கூகுள் பிக்சல் 9 சீரிஸ் உள்ளிட்ட பல சிறந்த ஃபோன்கள் 2024ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டன. அதேபோல 2025ம் ஆண்டில் அதிக அளவில் போன்கள் சந்தைக்கு வரப் போகின்றன. ஸ்மார்ட்போன்கள் அத்தியாவசிய சாதனமாக மாறிவிட்ட நிலையில், வாடிக்கையாளர்களை அதிக அளவில் கவர்வதற்கான ஆயத்தங்களை நிறுவனங்கள் தொடங்கிவிட்டன. 2025 ஜனவரியில் சந்தைக்கு வர உள்ள புதிய போன்கள் பற்றி அறிந்து கொள்ளலாம். நீங்கள் புதிய மொபைல் வாங்க திட்டமிட்டிருந்தால் இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். Samsung Galaxy S25 Series சாம்சங்கின் கேலக்ஸி எஸ்25 சீரிஸ் வகை போன்களுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இது ஒரு ஃபிளாக்ஷிப் தொடராக இருக்கும்.ஜனவரி 22ம் தேதியன்று நடைபெறும் கேலக்ஸி அன்பேக்ட் நிகழ்வில் நிறுவனம் இதனை அறிமுக செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வரிசையில் Galaxy S25, Galaxy S25 Plus மற்றும் Galaxy S25 Ultra ஆகிய மூன்று மாடல்கள் அடங்கும். OnePlus 13 Series OnePlus நிறுவனம் OnePlus 13 மற்றும் OnePlus 13R ஸ்மார்ட்போன்களை ஜனவரி 7 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்த தயாராக உள்ளது. இவை பிரீமியம் ஸ்மார்ட்போன்களாக இருக்கும். இது பல லேட்டஸ்ட் அம்சங்களுடன் வரக்கூடியது. இதில் சிறந்த கேமரா மற்றும் புகைப்படம் எடுப்பதற்கான நல்ல செயலியைப் பெறலாம். மேலும் படிக்க | BSNL வழங்கும் புத்தாண்டு பரிசு... 277 ரூபாயில் 120GB டேட்டா... மகிழ்ச்சியில் பயனர்கள் Oppo Reno 13 5G Series Oppo நிறுவனம் அதன் Reno 13 5G ஆகிய போன்களை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இருப்பினும், அதன் அறிமுக தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஆனால், ஜனவரியில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொடரில் இரண்டு Oppo Reno 13 5G மற்றும் Oppo Reno 13 Pro 5G இருக்கலாம். Poco X7 Series Poco அதன் சமீபத்திய X7 தொடரை ஜனவரி 9 ஆம் தேதி அறிமுகம் செய்யலாம். இந்தத் தொடரில் இரண்டு மாடல்கள் இருக்கலாம். அவை Poco X7 மற்றும் Poco X7 Pro என இருக்கலாம் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. இது ஒரு இடைப்பட்ட வகை ஸ்மார்ட்போனாக இருக்கும். இது பல சமீபத்திய அம்சங்களைக் கொண்டிருக்கலாம். Redmi 14C ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ரெட்மி தனது ரெட்மி 14சி போனையும் 2025 ஜனவரி மாதத்தில் அறிமுகப்படுத்தலாம். இது பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போனாக இருக்கலாம். இது இரட்டை சிம் 5G செயல்பாட்டுடன் வரலாம் ன எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் படிக்க | iPhone 16 வாங்க அட்டகாசமான வாய்ப்பு: ரூ.16,000 தள்ளுபடியுடன் கிடைக்கிறது சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.