TAMIL

திடீர் ஓய்வை அறிவித்த இந்திய அணி முக்கிய ஆல்-ரவுண்டர்! ரசிகர்கள் அதிர்ச்சி!

இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரிஷி தவான் வைட் பால் கிரிக்கெட்டில் இருந்து மட்டும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஹிமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்தவர் கிரிக்கெட் வீரர் ரிஷி தவான். தற்போது 34 வயதான அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து முழுவதுமாக ஓய்வு பெறாமல் வைட் பால் கிரிக்கெட்டில் இருந்து மட்டும் ஓய்வை அறிவித்துள்ளார். உள்நாட்டு கிரிக்கெட்டில் பல சாதனைகள் படைத்துள்ளார். இதுவரை ரிஷி தவான் சர்வதேச அளவில் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு டி20 போட்டி என மொத்தம் 4 போட்டிகளில் விளையாடி உள்ளார். 2016ம் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் இந்திய அணியில் அறிமுகமானார். மேலும் படிக்க | IPL 2025: குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் பதிவியில் இருந்து சுப்மான் கில் நீக்கம்? சர்வதேச அளவில் ஓய்வை அறிவித்த போதிலும், ரிஷி தவான் முதல் தர கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவேன் என்று தெரிவித்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் ரஞ்சி டிராபி தொடரில் இமாச்சல பிரதேச அணிக்காக விளையாட உள்ளார். தற்போது குரூப் பியில் இரண்டாவது இடத்தில் உள்ள ஹிமாச்சல் காலிறுதிப் போட்டியில் உள்ளது. கடந்த சீசனை போலவே இந்த சீசனிலும் சிறப்பாக விளையாடி வருகிறார் ரிஷி தவான். ஐந்து போட்டிகளில் 79.40 சராசரியில் 397 ரன்கள் குவித்துள்ளார் மற்றும் 28.45 சராசரியில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ரிஷி தவான் தனது ஓய்வை சமூக ஊடகங்களில் அறிவித்துள்ளார். கனத்த மனதுடன் இந்த பெரிய முடிவை எடுத்துள்ளதாகவும் ஆனால் எந்த வருத்தமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். A post shared by Rishi Dhawan (@rishidhawan19) "எனக்கு எந்த வருத்தமும் இல்லை என்றாலும், இந்திய கிரிக்கெட்டிலிருந்து (லிமிடெட் ஓவர்) ஓய்வு பெறுவதை நான் ஒரு கனத்த இதயத்துடன் அறிவிக்க விரும்புகிறேன். கடந்த 20 வருடங்களாக என் வாழ்க்கையில் இருந்தது கிரிக்கெட். எனக்கு எல்லாவற்றையும் கிரிக்கெட் தான் கொடுத்தது. அளவிட முடியாத மகிழ்ச்சி மற்றும் எண்ணற்ற நினைவுகள் எப்போதும் என் இதயத்திற்கு மிக நெருக்கமாக இருக்கும். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்கம் (எச்பிசிஏ), பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எனக்கு வாய்ப்பு வழங்கினார்கள். அவர்களுக்கு எனது நன்றி. எனது தேசத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்தது" என்று தவான் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியுள்ளார். உள்நாட்டு கிரிக்கெட்டில் ரிஷி தவான்! ரிஷி தவான் இதுவரை 134 லிஸ்ட் ஏ போட்டிகளில் விளையாடி, 29.74 சராசரியில் 186 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதே சமயம் 1 சதம் உட்பட 38.23 சராசரியில் 2906 ரன்களைக் குவித்துள்ளார். 135 டி20 போட்டிகளில் 26.44 சராசரியிலும், 7.06 என்ற எகானமி ரேட்டில் 118 விக்கெட்டுகளை எடுத்துள்ளார், அதே நேரத்தில் 121.33 ஸ்ட்ரைக் ரேட்டில் 1740 ரன்கள் குவித்துள்ளார். இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி உள்ளார். 39 போட்டிகளில் மொத்தமாக 25 விக்கெட்டுகள் மற்றும் 210 ரன்கள் எடுத்தார். இருப்பினும், இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் ரிஷி தவான் விற்கப்படாமல் போனார். மேலும் படிக்க | இந்திய அணியின் அடுத்த கேப்டன்... ரோகித் சர்மா கொடுத்த சிக்னல் சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.