TAMIL

முகேஷ் அம்பானியின் சொகுசு பங்களா ஆன்டிலியா... அந்த இடத்தில் முதலில் என்ன இருந்தது தெரியுமா?

Mukesh Ambani Mansion Antilia: நாட்டின் முன்னணி கோடீஸ்வரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் 'ஆன்டிலியா' இல்லம் மும்பையில் அமைந்துள்ளது. முகேஷ் அம்பானியின் ஆன்டிலியா இல்லம் இந்தியர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அறியப்படும் ஒன்றாகும். அமெரிக்காவின் பெர்கின்ஸ் மற்றும் வில் என்ற கட்டடக்கலை நிறுவனம் ஆன்டிலியா இல்லத்தை வடிவமைத்தது. 27 தளங்களை கொண்ட ஆன்டிலியா இல்லத்தில், ஒவ்வொரு தளமும் வெவ்வேறு திட்டங்கள் மற்றும் வடிவமைப்புகளை கொண்டுள்ளது. அதன் உட்புறம் தாமரை மற்றும் சூரியன் வடிவங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஆன்டிலியா இல்லத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு அம்பானி குடும்பத்தினர் குடியேறினர். சுமார் ஒரு வருடத்திற்கு பின்னர், ஆன்டிலியா இல்லம் வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில் கட்டப்படவில்லை என்பதற்காக சில பரிகாரங்கள் மேற்கொள்ள 50 பூசாரிகளால் பூஜை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஸ்பெயின் - போர்ச்சுகல் நாடுகளின் அருகே இருந்ததாக கூறப்படும் ஒரு புராணத் தீவின் பெயர்தான் 'ஆன்டிலியா' ஆகும். அதன் பெயரையே இந்த வீட்டிற்கு பெயரிட்டுள்ளனர். ஆன்டிலியாவின் கட்டுமானச் செலவு முகேஷ் அம்பானியின் ஆன்டிலியா இல்லத்தை அமெரிக்க கட்டடக்கலை நிறுவனமான பெர்கின்ஸ் மற்றும் வில் வடிவமைத்துள்ளனர். இந்த கட்டடத்தில் பூகம்ப எதிர்ப்பு அம்சங்களை இணைக்கப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 8.0 வரையிலான நிலநடுக்கங்களை தாங்கும் வகையில் ஆன்டிலியா வடிவமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறப்படுகின்றன. மேலும் படிக்க | முகேஷ் அம்பானிக்கு மிகவும் பிடித்த சிற்றுண்டி வகைகள் இவை தான்..! ஆன்டிலியா இல்லத்தின் கட்டுமானச் செலவு சுமார் ரூ.6000 கோடியாகும். மும்பையின் கும்பாலா மலையில் உள்ள அல்டாமவுண்ட் சாலையில் அமைந்துள்ள ஆன்டிலியா கட்டடம் 1.120 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ளது. ஆன்டிலியா கட்டடத்தின் கட்டுமானம் 2006ஆம் ஆண்டில் தொடங்கி, 2010ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. ஆன்டிலியாவின் மொத்த மதிப்பு மருத்துவ வசதிகள், தனியார் தியேட்டர், நீச்சல் குளம், ஹெலிபேட், ஜிம், ஸ்பா, மொட்டை மாடித் தோட்டம், நீச்சல் குளம், ஹெலிபேட், கோயில் மட்டுமின்றி பல்வேறு சிறந்த ஆடம்பர வசதிகளும் இந்த கட்டடத்தில் உள்ளது. வானளவிற்கு உயரமான அந்த கட்டிடத்தின் மதிப்பு சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய் என மதிப்பிடப்படுகிறது. இத்தனை மதிப்பு வாய்ந்த கட்டடம் அமைந்துள்ள நிலம், அம்பானி யாரிடம் இருந்து வாங்கினார் என்பது உங்களுக்கு தெரியுமா? அன்டிலியா அங்கு கட்டப்படுவதற்கு முன் அங்கு என்ன இருந்தது என்பது உங்களுக்கு தெரியுமா? அதுகுறித்து தற்போது தகவல் வெளியாகி உள்ளது. ஆன்டிலியா நிலம் யாருடையது? கோஜா இஸ்லாமியச் சமூகத்தைச் சேர்ந்த ஆதரவற்றோருக்கு அங்கு ஒரு ஆதரவற்றோர் இல்லம் இருந்தது. கர்ரிம்போய் இப்ராஹிம் யதீம்கானா என பெயரிடப்பட்ட இந்த ஆதரவற்றோர் இல்லம், 1895ஆம் ஆண்டில் பணக்கார தொழிலதிபரான சர் ஃபசல்பாய் குரிம்போய் இப்ராஹிம் என்பவரால் கட்டப்பட்டதாகும். எவ்வளவு தொகைக்கு அம்பானி வாங்கினார்? இந்த ஆதரவற்றோர் இல்லம் வக்ஃபு வாரியத்தால் கவனத்தில் கொள்ளப்பட்டது. 2002ஆம் ஆண்டில், முகேஷ் அம்பானியின் ஆண்டிலியா கமர்ஷியல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு விற்க வாரியம் அனுமதி பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அந்த நிலத்திற்கு $1.5 பில்லியன் சந்தை மதிப்பு என தெரிவிக்கப்பட்டது. ஆனால், முகேஷ் அம்பானி அவர்களுக்கு சுமார் $2.5 மில்லியன் செலுத்தியதாக கூறப்படுகிறது. அதன் பின்னர், அம்பானி குடும்பத்தினர் அந்த நிலத்தில் தங்களின் பிரமாண்ட வீட்டைக் கட்ட அனுமதி கோரினர். தொடர்ந்து, ஆன்டிலியா கட்டடத்தின் திட்டம் 2003ஆம் ஆண்டில் மும்பை மாநகராட்சியால் அங்கீகரிக்கப்பட்டது. மேலும் படிக்க | உங்களுக்கு தெரியுமா? இந்த நிறுவனங்களும் முகேஷ் அம்பானியுடையது தான்! சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.