TAMIL

'கிறிஸ்துவர்கள் ஓட்டு விஜய்க்கு போகக் கூடாது என உதயநிதி இதை செய்கிறார்' - ஹெச். ராஜா பளீர்

Tamilnadu Latest News Updates: பிராமணர்கள் பாதுகாப்பு சட்டம் கோரி மதுரையில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா பங்கேற்று உரை ஆற்றினார். அவர் பேசியதாவது,"திராவிட இயக்கம் என்றாலே அடிமுட்டாள்கள் கூட்டம். அந்நிய கைக்கூலிகளின் அடிமைகள். நாட்டில் பிரிவினையை ஏற்படுத்தி ஜாதிய மோதலை உருவாக்கினார்கள். இன்றைக்கு உதயநிதி ஸ்டாலினே நான் கிறிஸ்தவன் என்பதில் பெருமைப்படுகிறேன் என சொல்கிறார். இது அவர்களின் வீட்டிற்குள்ளேயே மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை காட்டுகிறது. தேசிய சிந்தனை இருப்பவர்களை தேச விரோதிகளுக்கு பிடிக்காது. இன்று நான் பேசுவது என்னுடைய வார்த்தை அல்ல. நேரு, ஈவெரா பேசியதை நான் பேசுகிறேன். காவல்துறை வழக்கு போட வேண்டுமென்றால் அவர்கள் மீது தான் வழக்கு போட வேண்டும். பிராமணர்களை கொல்ல வேண்டும் என இனப்படுகொலைக்கு அழைப்பு விடுத்த தந்தை பெரியாரின் மகன்களின் ஆட்சி இன்று நடைபெறுகிறது என பெரியாரின் புத்தகத்தில் உள்ளதைதான் சுட்டிகாட்டுகிறேன்" என்றார். 'கிறிஸ்துவர்களின் ஓட்டு...' தொடர்ந்து பேசிய ஹெச்.ராஜா,"பிரதமர் மோடி அனைவருக்கும் சேர்ந்த அனைவருக்குமான மேம்பாடு என்ற திட்டத்தை அமல்படுத்தியுள்ளார். ஆனால் இந்த திராவிட அரசு அதை ஏற்க மறுக்கிறது. இந்தியா ஒரு குண்டூசி கூட தயாரிக்க முடியாது என்று சொன்னார்கள். ஆனால் இந்தியா 100 செயற்கை கோள்களை ஏவியுள்ளது. வளர்ந்த நாடுகள் என்று சொல்லும் ஜெர்மனி, இத்தாலிக்கு கூட இந்தியாதான் செயற்கைகோளை அனுப்ப உதவியது. நான் பேசியது எல்லாம் ஆதாரபூர்வமானது. மேலும் படிக்க | எடப்பாடி பழனிசாமிக்கு விரைவில் மிகப்பெரிய பிரச்சனை வரப்போகுது - டிடிவி தினகரன் கிறிஸ்தவ சமுதாயத்தின் ஓட்டுகள் விஜய்க்கு போய்விடக்கூடாது என்பதற்காகத்தான் உதயநிதி நானும் கிறிஸ்தவன் என்று கூறுகிறார். உண்மையை பேசுவதற்காக வழக்கு போடுவேன் என்றால் போட்டுக் கொள்ளுங்கள். தமிழகத்தில் உள்ள விஷயங்களை பார்த்தால், பஞ்சாபை விட மோசமான நிலைக்கு சென்றுவிட்டது. இங்கு போதைப் பழக்கங்கள் அதிகரித்து வருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. தமிழகத்தில் என்ன நடக்கிறது. எல்லா சமூகத்தினரும் வரக்கூடிய எதிர்கால சமுதாயத்தை காப்பாற்ற வேண்டும்" என உரையை நிறைவு செய்தார். 'யூதர்கள் போல் பிராமணர்கள்...' தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஹெச்.ராஜா,"பிராமணர்கள் சமுதாயத்தை பற்றி பொய்களை பரப்பி அவர்களுக்கு எதிராக வன்முறையை தூண்டுகின்ற விதமாக நடந்து கொள்கிறது திராவிட மாடல் அரசு. குறிப்பிட்ட சமுதாயத்தினரை பாதுகாக்க பிசிஆர் சட்டம் உள்ளதுபோல் பிராமண சமுதாயத்திற்கும் பாதுகாப்பு சட்டம் தேவை. எப்படி யூதர்களால் ஜெர்மனியர்கள் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்களோ, அதுபோல் தமிழகத்தில் ஒரு சமுதாயமான பிராமணர்களை திராவிட மாடல் அரசு நடத்துவது கண்டிக்கத்தக்கது. பிராமணர் சமுதாயத்திற்கு ஆதரவாக அனைத்து சமுதாயமும் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்கிறார்கள். 1957ல் ஈவெரா நடத்திய சாதி ஒழிப்பு மாநாட்டில் ஆயிரம் தமிழ் பிராமணர்களை கொல்ல வேண்டும் என பேசினார். அதற்கு அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு, ஈவெரா பேசியதற்கு கண்டனம் தெரிவித்து காமராஜருக்கு கடிதம் எழுதினார். 'மத அடையாளத்தை அழிப்பதா...' நெல்லையில் பூணூல் அறுப்பு போராட்டத்தில் பங்கேற்ற சுப. வீரபாண்டியன், நெல்லையை சேர்ந்த கிழக்கு பதிப்பகத்தின் பத்ரி சேஷாத்திரி கழுத்தில் வெளியே தெரியும் பூணூலை கட் பண்ணி விடுவேன் என்று கூறுகிறார். ஒரு மத அடையாளத்தை கட் பண்ணி விடுவேன் என்று சொல்கிறார். என்ன ஒரு அநாகரிகம்... இன்று தமிழகத்தில் முக்கியமான பிரச்சனையாக உள்ளது போதை பொருள், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை. அண்ணா பல்கலைக்கழகத்தின் பாலியல் வன்கொடுமை சம்பவத்தை தமிழக காவல்துறை யாரும் தவறாக சித்தரித்து பேச வேண்டாம் என கூறியுள்ளது. அண்ணா பல்கலைக்கழக குற்ற சம்பவத்தில் ஈடுபட்டது ஒருவர்தான் என்று காவல்துறை அதிகாரி கூறியிருக்கிறார். ஆனால் இன்று அதை மூன்று பெண் அதிகாரிகள் கொண்ட குழு விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் படிக்க | கல்லூரி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை - தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு அதிகரிக்கும் குற்றச் சம்பவங்கள் அண்ணா பல்கலைக்கழக செனட் குழுவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இருக்கிறார் ஆனால் இது குறித்து அவர் வாய் திறக்கவில்லை. இதற்கு முன் பத்து வயது சிறுமி பாலியல் வன்கொடுமையால் கொல்லப்பட்டார். அதன் விசாரணை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என நீதிமன்ற உத்தரவிட்டது, முடியாது எனக் கூறி உச்சநீதிமன்றத்தை நாடினார் தமிழக முதல்வர். கள்ளக்குறிச்சியில் பால் கொடுக்கச் சென்ற பெண் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். அதற்கு "நான்கு பேர் மது போதையில் அந்த பெண்ணை வன்கொடுமைக்கு ஆளாக்கி, கொலை செய்து தூக்கி எறிந்து விட்டு சென்றுவிட்டார்கள்" என காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தமிழக அரசு மதுபானத்தை விற்று வரும் சூழலில் தமிழக முதல்வர் 'போதைக்கு இடம் கொடுக்காதீர்கள் என தகப்பனாக இருந்து சொல்கிறேன்' என கூறுகிறார். இது என்ன நியாயம். 'அரசு என்ன கிழித்து கொண்டிருக்கிறது' தமிழகம் இன்று அழிவின் விளிம்பில் இருந்து கொண்டிருக்கிறது. எல்லா சமுதாயத்தினரும் சாதி, மத வேறுபாடு இல்லாமல் நம்முடைய குழந்தைகளை காப்பாற்ற வேண்டும். பள்ளியில் இருந்து வரக்கூடிய குழந்தைகளின் பைகளை சோதனை செய்யும் அளவிற்கு ஸ்டாலின் அரசு மாறிவிட்டது. கோடிக்கணக்கில் போதைப்பொருள் கடத்தினால் அவர்களுக்கு கட்சி பதவி வழங்குகிறது திமுக அரசு. திமுக அரசை போதை அணி, வன்கொடுமை அணி என இரண்டாக பிரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வேங்கை வயலில் தண்ணீர் தொட்டியில் மலம் கலந்த சம்பவம் இரண்டு வருடம் ஆகிவிட்டது. ஆனால் என்ன கிழித்து கொண்டிருக்கிறது இந்த அரசாங்கம். நான் சொன்னால் பாஜக காழ்ப்புணர்ச்சியால் பேசுகிறார் என கூறலாம். ஆனால் திமுக கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளே குற்றஞ்சாட்டி உள்ளது. ஏற்ற தாழ்வுக்கென்றே பிறந்தவர்கள் திராவிட மாடல் அரசு" என்றார். சென்னையில் முதல்வர் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சிக்கு மாணவிகள் கருப்பு துப்பட்டா அணிந்து வந்ததற்கு அனுமதி கிடையாது என போலீசார் தெரிவித்தது குறித்த கேள்விக்கு "இது வன்மையாக கண்டிக்கத்தக்கது" என ஹெச். ராஜா பேசினார். மேலும் படிக்க | கார் வைத்திருந்து கலைஞர் உரிமைத் தொகை வாங்குகிறார்களா? ஆன்லைனில் புகார் அளிக்கலாம் சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.