TAMIL

44,000 ஆண்டு பழமையான ஓநாய் உடலை போஸ்ட்மார்டம் செய்யும் விஞ்ஞானிகள்... காரணம் இது தான்..!!

ரஷ்யாவின் தொலைதூர வடகிழக்கு யாகுடியா பகுதியில், சுமார் 44,000 ஆண்டுகளாக குளிரில் உறைந்திருந்த ஓநாயின் உடலை உள்ளூர் விஞ்ஞானிகள் பிரேத பரிசோதனை செய்து வருகின்றனர். இதுபோன்ற கண்டுபிடிப்பு இதுவே முதல்முறை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ராய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், 2021 ஆம் ஆண்டில், இந்த ஓநாய் சடலம் யாகுடியாவின் அபிஸ்கி மாவட்டத்தில் உள்ளூர் மக்களால் தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டது. இப்போது அது விஞ்ஞானிகளால் முறையாக ஆராயப்படுகிறது. ‘இதுபோன்ற கண்டுபிடிப்பு இதற்கு முன் நடந்ததில்லை’ ரஷ்யவிஞ்ஞானி ஆல்பர்ட் ப்ரோடோபோபோவ், 'உலகின் பிற்பகுதியில் ப்ளீஸ்டோசீன் காலத்தைச் சேர்ந்த வேட்டை விலங்கின் முதல் கண்டுபிடிப்பு இதுவாகும்' என்றார். அவர், 'இதன் வயது சுமார் 44,000 ஆண்டுகள், இதுபோன்ற கண்டுபிடிப்பு இதற்கு முன் நடந்ததில்லை' என்றார். ப்ரோடோபோபோவ் யாகுடியா அகாடமி ஆஃப் சயின்ஸில் பிரேத உடல் ஆய்வுத் துறையின் தலைவராக உள்ளார். மைனஸ் 64 டிகிரி செல்சியஸுக்குக் குறைவான வெப்பநிலை ஆர்க்டிக் பெருங்கடலுக்கும் ரஷ்யாவின் ஆர்க்டிக் தூர கிழக்கிற்கும் இடையில் அமைந்துள்ள யாகுடியா, டெக்சாஸின் அளவுள்ள சதுப்பு நிலங்கள் மற்றும் காடுகளின் பரந்த பகுதி ஆகும். இதில் 95% நிரந்தர உறைபனியால் மூடப்பட்டிருக்கும். இப்பகுதியில் குளிர்கால வெப்பநிலை மைனஸ் 64 டிகிரி செல்சியஸ் (-83.2°F) வரை குறைகிறது. மேலும் படிக்க | செயற்கை கோள்களின் ‘கல்லறை’... காலவதியான செயற்கை கோள்கள் எவ்வாறு அழிக்கப்படுகின்றன..!! 'முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்டது பெரிய மாமிச உயிரினம்' ராய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், 'பொதுவாக, தாவரவகை விலங்குகள் இறந்து, சதுப்பு நிலத்தில் சிக்கி, உறைந்து, பின்னர் ஏதோ ஒரு வகையில் நம்மை வந்து அடையும். ஒரு பெரிய மாமிச விலங்கு கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல் முறை என குறிப்பிட்டுள்ளது என விஞ்ஞானி புரோட்டோபோவ் கூறினார். பல நூற்றாண்டுகள் பழமையான விலங்குகளின் சடலங்கள் பெர்மாஃப்ரோஸ்டில் ஆழமாக புதைக்கப்பட்டிருப்பதைக் கண்டுபிடிப்பது அசாதாரணமானது அல்ல என்றாலும், ஓநாய் கண்டுபிடிக்கப்பட்டது சிறப்பு என்று புரோட்டோபோவ் கூறினார். ப்ரோடோபோபோவ், 'ஓநாய் மிகவும் சுறுசுறுப்பான வேட்டை விலங்கு, பெரிய அளவிலான வேட்டை விலங்குகளி ஒன்று. 'குகை சிங்கங்கள் மற்றும் கரடிகளை விட சற்று சிறியது, ஆனால் மிகவும் சுறுசுறுப்பான வேட்டை விலங்கு என்றார். செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கின் ஐரோப்பிய பல்கலைக்கழகத்தில் உள்ள பேலியோஜெனெடிக்ஸ் ஆய்வகத்தின் மேம்பாட்டு இயக்குனர் ஆர்டெம் நெடோலுஷ்கோ, ஓநாய் 44,000 ஆண்டுகளுக்கு முன்பு யாகுடியாவைப் பற்றிய ஒரு அரிய பார்வையை வழங்கியதாக நம்புகிறார். "இந்த ஓநாய் என்ன சாப்பிட்டது, யூரேசியாவின் வடகிழக்கு பகுதியில் வாழ்ந்த பழங்கால ஓநாய்களுக்கும், இதற்கும் உள்ள உறவு என்ன என்பதைப் புரிந்துகொள்வதே முக்கிய குறிக்கோள்" என்று கூறினார். மேலும் படிக்க | 12வது முறையாக தந்தையான எலான் மஸ்க்! இது போதாதாம்..இன்னும் வேண்டுமாம். சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.