TAMIL

பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2000 கிடைக்குமா? சென்னை ஐகோர்ட்டில் வழக்கு!

Pongal Gift Package Latest News: தமிழக குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் வருகிற பொங்கல் பண்டிகை முன்னிட்டு பொங்கல் பரிசு தொகுப்போடு ரொக்க பணம் வழங்குவது குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளன. பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கப் பணம் தொடர்பாக வழக்கு போடப்பட்டுள்ளது. அதுக்குறித்து பார்ப்போம். தமிழக கூட்டுறவுத்துறை முக்கிய அறிவிப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்காக இன்று முதல் டோக்கன் வழங்கப்பட உள்ள நிலையில் ஜனவரி 3 ஆம் தேதி மற்றும் 10 தேதிகளில் ரேஷன் கடைகள் திறந்திருக்கும் என கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது மேலும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ஒவ்வொரு ரேஷன் கார்டுதாரருக்கும் ரூ. 2000 வழங்க வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டும் பொங்கல் பரிசுத் தொகை வழங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. பொங்கல் பரிசு அறிவிப்பு தமிழர் திருநாளம் இப்பொங்கலை தமிழர்கள் சிறப்பாக கொண்டாடும் விதமாக அனைத்து அரிசி பெறும் குடும்ப ஆட்டதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம் அதன்படி குடும்பங்களுக்கு தலா 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் ஒரு முழுநீளக் கரும்பு வழங்க ஆணையிடப்பட்டு உள்ளது. இந்த பொங்கல் தொகுப்பு நியாய விலை கடைகள் மூலம் வழங்கப்பட உள்ள நிலையில், அதற்கான டோக்கன் விநியோகம் தொடங்கி உள்ளது. நியாய விலை கடை விடுமுறை கிடையாது? இந்நிலையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வினியோகப் பணியில் எவ்வித இடையூறும் இன்றி குறிப்பிட்ட தினங்களுக்குள் அனைத்து அரிசு பெறும் குடும்ப அட்டைக்காதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வினியோகம் செய்யப்பட வேண்டும் என்பதால் அனைத்து நியாய விலை கடைகளும் விடுமுறை தினங்களில் இயங்க கூட்டுறவுத் துறை உத்தரவு பிறப்பித்து உள்ளது. அதன்படி ஜனவரி 3 மற்றும் 10 ஆம் தேதிகளில் நியாய விலை கடைகள் செயல்படும் என கூற்றவுத் துறை அறிவித்துள்ளது. ரேஷன் கடைகளுக்கு கூட்டுறவுத் துறை உத்தரவு இந்த இரண்டு நாட்களை ஈடு செய்யும் விதமாக ஜனவரி 15 ஆம் தேதி (புதன்கிழமை) மற்றும் ஜனவரி 22 ஆம் தேதி (சனிக்கிழமை) ஆகிய நாட்கள் நியாய விலை கடைகள் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது அனைத்து ரேஷன் கடைகளுக்கும் பரிசுத் தொகுப்புகள் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். பரிசுத் தொகுப்பு வினியோக அட்டவணை விவரத்தை காவல் துறைக்கு முன்கூட்டியே தெரிவித்து ரேஷன் கடைகளுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும். இதில் எந்தவித புகாருக்கும் இடமின்றி பரிசுத் தொகுப்பை வினியோகம் செய்ய வேண்டும் என்று ரேஷன் கடைகளுக்கு கூட்டுறவுத் துறை அறிவுறுத்தி உள்ளது. சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு இந்த நிலையில் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.2000 வழங்க வேண்டுமென பாஜாக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. அதில், "மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பொங்கல் பரிசு கொடுக்கும் வழக்கத்தை துவங்கி வைத்தார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் பலமுறை பொங்கல் பரிசு பொருட்களோடு ரொக்கப் பணமும் கொடுக்கப்பட்டது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சியில் 2020 ஆம் ஆண்டுக்கான பொங்கல் பரிசு பொருட்களோடு ரூ.2000 ரொக்க பணம் கொடுக்கப்பட்டது. எனவே பொங்கல் பரிசு தொகுப்போடு இந்த ஆண்டும் பொங்கல் திருநாளை கொண்டாட ரேஷன் கார்டு அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2000 பணத்தை பொங்கல் பரிசு தொகுப்போடு கொடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.2000 கிடைக்குமா? இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. இந்த வழக்கில் சென்னை ஹைகோர்ட் உத்தரவு பிறப்பிக்கும் பட்சத்தில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு மக்களுக்கு பொங்கல் தொகுப்போடு ரொக்கப் பணமும் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் படிக்க - Pongal Bonus | அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவித்த முதலமைச்சர்.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? மேலும் படிக்க - பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கன் இன்று முதல் விநியோகம் - பெறுவது எப்படி? மேலும் படிக்க - இந்த காரணத்திற்காக தான் பொங்கல் பரிசில் ரூ. 1000 இல்லை! அமைச்சர் கொடுத்த விளக்கம்! சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.