TAMIL

OnePlus 13R... இன்னும் சில நாட்களில் அறிமுகம்... முழு விபரம் இதோ

OnePlus 13R ஸ்மார்ட்போன் 2025 ஜனவரி மாதத்தில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. OnePlus குளிர்கால வெளியீட்டு நிகழ்வை நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நிகழ்வில் OnePlus 13 தொடர் அறிமுகப்படுத்தப்படும். இந்த தொடரின் கீழ், OnePlus 13 மற்றும் OnePlus 13R ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் நுழையும். இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுடன், ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 3ஐயும் நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது. அறிமுகத்திற்கு முன்பே, ஒன்பிளஸ் நிறுவனம் OnePlus 13R ஸ்மார்போனில் உள்ள அனைத்து சிறப்பு விவரக்குறிப்புகளையும் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் OnePlus 13R அறிமுகம் OnePlus 13R ஸ்மார்ட்போன் ஜனவரி 7, 2025 அன்று அறிமுகப்படுத்தப்படும். இந்த ஸ்மார்ட்போன் பிரபல இ-காமர்ஸ் இணையதளமான அமேசான் மூலம் விற்பனை செய்யப்படும். ஸ்மார்ட்போன் அமேசானில் பட்டியலிடப்பட்டுள்ளது. அமேசான் வெளியிட்டுள்ள பட்டியலின் படி, OnePlus 13R 5G ஸ்மார்ட்போன் இரண்டு வண்ண விருப்பங்களில் கொண்டு வரப்படும். இதில் நெபுலா நோயர் மற்றும் ஆஸ்ட்ரல் ட்ரயல் ஆகியவை அடங்கும். போனின் சிறப்பு விவரக்குறிப்புகளும் பட்டியலில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. OnePlus 13R போனின் டிசைன் OnePlus 13R அதன் முந்தைய மாடலை விட கணிசமாக புதிய வடிவமைப்புடன் வரும். இது மென்மையான வட்டமான மூலைகளுடன் கூடிய பாக்ஸி சேஸைக் கொண்டுள்ளது. போனில் வட்ட வடிவ கேமரா மாட்யூல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாட்யூல் டிரிபிள் கேமரா சிஸ்டம் மற்றும் எல்இடி ப்ளாஷ் ஆகியவற்றைப் பெறுகிறது. முன்பக்கத்தில், மையமாக சீரமைக்கப்பட்ட பஞ்ச்-ஹோல் கட்அவுட் வழங்கப்பட்டுள்ளது, அதில் செல்ஃபி கேமரா உள்ளது. வால்யூம் ராக்கர் மற்றும் பவர் பட்டன் வலது விளிம்பில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் படிக்க | BSNL வழங்கும் அசத்தலான ப்ராண்ட்பேண்ட் பிளான்... 333 ரூபாயில் மாதம் 1300GB... தொலைபேசியின் சிறப்பு விவரக்குறிப்புகள் அறிமுகப்படுத்தப்பட உள்ள புதிய OnePlus ஃபோனில் Snapdragon 8 Gen 3 செயலி இருக்கும். இது தவிர, ஸ்மார்ட்போன் 6000எம்ஏஎச் பேட்டரியுடன் வரும் என்பதை அமேசான் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த போன் SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்தை ஆதரிக்கும். வாட்டர் ப்ரூஃப் அம்சம் OnePlus 13 தண்ணீர் மற்றும் தூசியிலிருந்து முற்றிலும் பாதுகாக்கப்படும் அம்டசம் இதில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த போன் தண்ணீரில் மூழ்கினாலும், வேகத்துடன் தண்ணீர் இதில் கொட்டினாலும், எந்த பாதிப்பும் ஏற்படாது. ஈரமான கைகளை வைத்தாலும் எளிதாக வேலை செய்யும் புதிய கைரேகை சென்சார் இதில் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கேமிங் அனுபவத்தை மேம்படுத்தும் புதிய வைப்ரேஷன் மோட்டாரும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. OnePlus 13 விலை விபரம் இந்தியாவில் OnePlus 13 மாடலின் விலை பற்றி இதுவரை எதுவும் கூறப்படவில்லை. ஆனால் அதன் விலை ரூ.70,000 க்கும் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு OnePlus 12 இந்தியாவில் ரூ.64,999க்கு அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், ஒன்பிளஸ் புதிய போனின் விலை அதை விட சற்று அதிகரித்தாலும் அதன் விலை ரூ.70,000க்கு குறைவாகவே இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் படிக்க | புத்தாண்டில் சோகம்... அமேசான் வீடியோவில் வரும் பெரிய மாற்றம் - என்ன தெரியுமா? சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.