TAMIL

கடலுக்குள் மர்ம அமில மண்டலம்! அமிலம் உருவாவதால் நாடுகள் பாதிக்கப்படுமா? காரணம் என்ன?

கடலின் அடிப்பரப்பில் அதாவது 13,000 அடிக்கு கீழே இருக்கும் அமில மண்டலம் விரிவடைகிறது. இதற்கான காரணம் கண்டறியப்படவில்லை. இது மர்மமான அமில மண்டலமாக இருக்கிறது. இந்த அமில மண்டலம் குறைந்த வெப்பநிலை மற்றும் அதிக அழுத்தம் கொண்ட கார்பனேட் இழப்பீட்டு ஆழம் (carbonate compensation depth) என்று அழைக்கப்படுகிறது இந்த அதிர்ச்சிகரமான தகவலை ஒரு புதிய ஆராய்ச்சி வெளியிட்டுள்ளது. விரிவடையும் அமில மண்டலத்தினால் பூமியின் சில பகுதிகளில் கடுமையான தாக்கம் ஏற்படலாம்.இந்த அமில மண்டலம், கார்பனேட் இழப்பீட்டு ஆழம் என்றும் அழைக்கப்படுகிறது, இது கடலின் ஆழமான பகுதிகளில் உள்ளது மற்றும் அதிக அழுத்தத்துடன் இணைந்து குறைந்த வெப்பநிலையைக் கொண்டுள்ளது. தொழில்நுட்ப ரீதியில் பார்த்தால் இது மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம். இந்த அமில மண்டலம், கால்சியம் கார்பனேட்டைக் கரைக்கும் நிலைமையை உருவாக்குவதாக அறியப்படுகிறது. கால்சியம் கார்பனேட் என்பது, கடல் விலங்குகளின் ஓடுகளை உருவாக்க உதவும் ஒரு பொருள் ஆகும். இருப்பினும், புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதில் இருந்து வெளியாகும் கார்பன் டை ஆக்சைடை கடல் உறிஞ்சுவதால், கடல் நீரின் மேற்பரப்பில் அமிலமயமாக்கல் நிகழ்கிறது என்ற கருத்துக்கு மாறாக இந்த கோட்பாடு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க | 78வது சுதந்திர தினம் 2024: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள்..! கடலில் கார்பன் டை ஆக்சைடு செறிவுகளின் அதிகரிப்பு என்பது, நீரில் உள்ள pH அளவைக் குறைக்கிறது. இது ஆழ்கடல் பகுதியில் கால்சியம் கார்பனேட் கரைக்கும் விகிதத்தை அதிகரிப்பதால் இரண்டு கோட்பாடுகளும் இணைக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். கால்சியம் கார்பனேட் வேதியியல் ரீதியாக நிலையற்றதாக மாறுவதும், அது கரைக்கத் தொடங்கும் மாற்றத்தை லைசோக்லைன் (lysocline) என்று அழைக்கின்றனர். கடலின் அடிப்பகுதி கிட்டத்தட்ட தட்டையாக இருப்பதால், லைசோக்லைன் சில மீட்டர்கள் உயர்ந்தால், அது பெரிய கீழ்-நிறைவுற்ற (large under-saturated)அமில பகுதிகளை விரைவாக உருவாக்க காரணமாகிறது. தற்போது வெளியான ஆராய்ச்சியின் படி, இந்த மண்டலம் தொழில்துறைக்கு முந்தைய காலத்திலிருந்து கிட்டத்தட்ட 100 மீட்டர் அதிகரித்துள்ளது என்றும், இந்த நூற்றாண்டில் மேலும் நூற்றுக்கணக்கான மீட்டர் உயரக்கூடும் என கூறப்படுகிறது. கடலின் அடித்தளத்தின் மில்லியன் கணக்கான சதுர கிலோமீட்டர்களில் இந்த அமில மண்டலம் துரிதகதியில் விரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதில் சுண்ணாம்பு வண்டல், வேதியியல் ரீதியாக நிலையற்றதாக மாறி இறுதியில் கரைந்துவிடும். லைசோக்லைன் நிலைமாற்ற மண்டலத்தின் மேல் வரம்பு கால்சைட் செறிவூட்டல் ஆழம் என்று அழைக்கப்படுகிறது, அதற்கு மேல் கடல் அடியில் படிவுகள் கால்சியம் கார்பனேட்டால் நிரப்பப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க | சந்திரனில் லைட் ஹவுஸ் வைக்கப்போகும் நாசா! மாத்தி யோசிக்கும் விஞ்ஞானிகள்! கால்சைட் இழப்பீட்டு ஆழம் என்பது கடற்பரப்பின் கீழ் வரம்பாகும், அதற்குக் கீழே கடற்பரப்பு வண்டல்கள் கார்பனேட் தாதுக்கள் சிறிதளவில் இருக்கும் அல்லது இல்லாமல் போகலாம். இதனால் பல நாடுகளுக்கு பதிப்பு ஏற்படும் என்றும் விஞ்ஞானிகள் அஞ்சுகின்றனர். அமில மண்டலங்களால் பாதிக்கப்படும் நாடுகள் எவை? சில நாடுகளின் பிரத்தியேக பொருளாதார மண்டலங்கள் அமில மண்டலத்தால் பெரிதும் பாதிக்கப்படும். பொதுவாக, பெருங்கடல் மற்றும் தீவு நாடுகள் பெரும் இழப்பை சந்திக்க நேரிடலாம், அதே நேரத்தில் பெரிய கண்டங்களில் அமைந்துள்ள கொண்ட நாடுகள் ஒப்பீட்டளவில் குறைவாகவே பாதிக்கப்படும். பெர்முடாவின் EEZ (Bermuda's EEZ) இன் கால்சைட் இழப்பீட்டு ஆழம் தற்போதைய அளவை விட 980-அடி உயர்வால் மிகவும் பாதிக்கப்படும் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இந்த நாட்டின் கடல் அடிவாரத்தில் 68 சதவிகிதம் லைசோக்லைனுக்கு கீழே மூழ்கிவிடும் என்று அஞ்சப்படுகிறது. அதில் அமெரிக்க EEZ இன் 6 சதவீதமும், ரஷ்ய EEZ இன் 0.39 சதவீதமும் கால்சைட் இழப்பீட்டு ஆழத்தின் அதிகரிப்பால் பாதிக்கப்படும் பகுதிகளாக இருக்கும். மேலும் படிக்க | சிறையில் முதல்வர் கெஜ்ரிவால்... டெல்லியில் தேசிய கொடியை ஏற்றப்போவது யார் தெரியுமா? சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.