TAMIL

இந்தியாவின் பணக்கார முதல்வர்கள்! முக ஸ்டாலின் எத்தனையாவது இடம் தெரியுமா?

இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களை ஆளும் தற்போதைய முதல்வர்கள் குறித்து குறிப்பிடத்தக்க தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு மாநில முதல்வர்களின் சொத்து மதிப்புகள் தொடர்பான விரிவான தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு (ஏடிஆர்) இந்த விரிவான சொத்துப் பட்டியலை வெளியிட்டுள்ளது, இது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநில முதலமைச்சர்களின் நிதி நிலையை எடுத்துக்காட்டுகிறது. நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த முதலமைச்சர்களின் சராசரி நிகர மதிப்பு சுமார் ரூ.52.59 கோடி என்று தரவுகள் தெரிவிக்கின்றன. மேலும் படிக்க - வருகிறது புதிய விதி! இனி வங்கிகள் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே செயல்படும்! அதில் தமிழக முதல்வர் முக ஸ்டாலினின் சொத்து மதிப்பு சுமார் ரூ.8 கோடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் இந்த சொத்து தரவரிசையில் 14வது இடத்தில் உள்ளார். அவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.8,88,75,339 ஆகும். முக ஸ்டாலின் பெயரில் எந்த கடன்களும் நிலுவையில் இல்லை என்று கூறப்படுகிறது. மேலும், முதல்வர் ஸ்டாலினின் தனிநபர் வருமானம் ரூ.28 லட்சமாக உள்ளது தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ. 38 கோடி சொத்துக்களுடன் இந்தப் பட்டியலில் 6வது இடத்தைப் பிடித்துள்ளார் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி. நமது அண்டை மாநிலமான ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு இந்தியாவின் பணக்கார முதலமைச்சராகத் தனித்து நிற்கிறார். இவரின் மொத்த சொத்து மதிப்பு ரூபாய் 931 கோடி என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது பெயரில் 10 கோடி ரூபாய் கடன் உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவரைத் தொடர்ந்து, அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா குண்டு 332 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களுடன் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். மூன்றாவது இடத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையா உள்ளார், இவரது சொத்து மதிப்பு ரூ.51 கோடி ஆகும். நாடு முழுவதும் உள்ள 31 முதல்வர்களின் மொத்த சொத்து மதிப்பு சுமார் ரூ.1,630 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இந்த பட்டியலில் கடைசி இடத்தை பிடித்துள்ளார், அவரது சொத்து மதிப்பு வெறும் ரூ. 15 லட்சமாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லாவும், கேரள முதல்வர் பினராயி விஜயனும் மம்தாவுக்கு அடுத்தபடியாக, முறையே 30 மற்றும் 29வது இடத்தைப் பிடித்துள்ளனர். அப்துல்லாவின் சொத்து மதிப்பு சுமார் ரூ.55 லட்சம் என்றும், பினராயி விஜயனின் சொத்து மதிப்பு சுமார் ரூ.1 கோடி என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்திடம் மாநில முதல்வர்கள் சமர்ப்பித்த வேட்பு மனுக்களில் உள்ள தகவல்களின் அடிப்படையில் இந்தத் தரவுகள் தொகுக்கப்பட்டுள்ளதாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது .2023-24 நிதியாண்டின்படி, இந்தியாவில் மதிப்பிடப்பட்ட தனிநபர் நிகர வருமானம் ரூ. 1,85,854 ஆக உள்ளது, அதே சமயம் மாநில முதல்வர்களின் சராசரி தனிநபர் வருமானம் ரூ.13,64,310 ஆக உள்ளது. இந்த எண்ணிக்கை நாட்டின் பொது மக்களின் சராசரி தனிநபர் வருமானத்தை விட தோராயமாக 7.3 மடங்கு அதிகம். மேலும் படிக்க - 5 Rupees Coin | 5 ரூபாய் நாணயத்தை தடை செய்கிறதா ரிசர்வ் வங்கி.. உண்மை என்ன தெரியுமா? சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.