TAMIL

2024இல் அதிக காண்டத்தை ஆர்டர் செய்தது எந்த ஊர்? அதிவேக டெலிவரி - Swiggy Instamart தகவல்கள்

Swiggy Instamart Trends 2024: பாதுகாப்பான பாலுறவுக்கு ஆணுறை மிகவும் முக்கியமான ஒன்றாகும். அப்படியிருக்க ஆணுறை போன்று பாதுகாப்பான பாலுறவுக்கு பல விஷயங்கள் தற்போது சந்தையில் கிடைக்கின்றன. அவற்றை விரைவாக வீட்டிலேயே வந்து டெலிவரி செய்யும் வழிமுறைகளும் தற்போது வழக்கத்திற்கு வந்துவிட்டது. அதில் Swiggy Instamart முன்னணியில் உள்ளது எனலாம். பால், தயிர் போன்ற 10-15 நிமிடத்திற்கு Swiggy Instamart நிறுவனம் ஆணுறை போன்ற பாலுறவு சார்ந்த விஷயங்களையும் விரைவாக டெலிவரி செய்து வருகிறது. அப்படியிருக்க இந்தாண்டு தங்கள் விற்பனையில் இந்த பாலுறவு பாதுகாப்பு சார்ந்த பொருள்களின் நிலவரம் குறித்து Swiggy Instamart தகவல் தெரிவித்துள்ளது. அதில் Instamartஇல் ஒவ்வொரு 140 ஆர்டர்களில் 1 ஆர்டர் இதுபோன்ற பாலுறவு பாதுகாப்பு சார்ந்த பொருள்களின் ஆர்டராக இருப்பதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், வீட்டு சமையலுக்கு தேவைப்படும் பால், மாவு, தயிர், உருளைக்கிழங்கு சிப்ஸை போன்று ஆணுறையையும் இந்தியர்கள் வாங்குவதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆணுறை ஆர்டர்... எந்த நகரத்தில் அதிகம்? Swiggy Instamart வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில் அதன் விற்பனை குறித்த பல்வேறு விவரங்களை அறிந்துகொள்ள முடிகிறது. குறிப்பாக, பெங்களூரு நிறுவனம் பெரும் கவனத்தை ஈர்த்திருக்கிறது. அதாவது, ஆணுறையை ஆர்டர் செய்ததில் 2024ஆம் ஆண்டில் பெங்களூரு நகரம்தான் முன்னணியில் இருக்கிறது என்றால் பாருங்களேன்... மேலும் படிக்க | கேஸ் சிலிண்டருக்கும் காலாவதி தேதி இருக்கா? கண்டுபிடிப்பது எப்படி? மேலும், Swiggy Instamart வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில், பின்னரவுகளில் ஆர்டர் செய்யும் பழக்கம் இந்தியர்களிடம் அதிகரித்திருப்பதாக தெரிகிறது. குறிப்பாக இரவு 10 மணிமுதல் இரவு 11 மணிவரை தான் அதிக ஆர்டர்கள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த நேரத்தில்தான் பல்வேறு வகை ஆணுறைகளும், மசாலா சிப்ஸான குர்குர்ரே பாக்கெட்டுகளும் அதிகம் விற்பனையாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி, ஹைதராபாத், பெங்களூரு நகரங்கள்தான் இந்த பின்னிரவு ஆர்டர்களில் முன்னணி வகிப்பதாகவும் தெரிகிறது. Swiggy Instamart மூலம் அதிக ஆர்டர்களை செய்த நகரங்கள் என்றால் டெல்லியும், உத்தரகாண்ட் தலைநகர் டேராடூனும் தானாம். இங்கிருந்து ஆட்டா, பால் மற்றும் எண்ணெய் போன்று வீட்டு உபயோக பொருள்கள் அதிகம் ஆர்டர் செய்யப்பட்டிருக்கிறது. குறிப்பாக, மும்பையை சேர்ந்த ஒருவர் ரூ.15 லட்சத்திற்கு பூனை, நாய் உள்ளிட்ட செல்லப்பிராணிகளுக்கான தீவனங்களை Instamart மூலம் வாங்கி உள்ளார். அதிவேக டெலிவரி என்ன தெரியுமா? மும்பை நகரில் ஒரே நாளில் ரூ.8 லட்சத்து 20 ஆயிரத்து 360 மதிப்பில் டானிக் வாட்டரை வாங்கியுள்ளது. மேலும், டிசம்பர் 1ஆம் தேதி இரவு 7-8 மணிக்கு 14 ஆயிரத்து 500 கிலோ வெங்காயம் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. கொச்சியில் நேந்தரம் பழம் மற்றும் கீரைகளை ஒருவர் ஆர்டர் செய்துள்ளார், அதனை வெறும் 89 வினாடிகளில் டெலிவரி செய்துள்ளனர். மேலும் மிகவும் மலிவான ஒரு பொருள் டெலிவரி செய்யப்பட்டது என்றால் ஹைதராபாத்தில் 3 ரூபாய் மதிப்பிலான பென்சில் ஷார்ப்பனர் டெலிவரி ஆகியுள்ளது. தந்தேராஸ் பண்டிகையின் மூலம் அகமதாபாத்தில் ஒருவர் 8 லட்சத்து 32 ஆயிரத்து 32 ரூபாய் மதிப்பிலான தங்க நாணயங்களை வாங்கியுள்ளார். ஹைதராபாத்தில் ஒருவர் ஒரு மாதத்தில் மட்டும் 35 ஆயிரம் ரூபாய் மதிப்பில் மாம்பழத்தை வாங்கியுள்ளார். மேலும் படிக்க | குளிர்காலத்தில் துணிகள் காயவில்லையா? இந்த வழிகளை முயற்சி செய்து பாருங்கள்! சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.