TAMIL

வயநாடு நிலச்சரிவிற்கு பசுவதை தான் காரணம் - பாஜக மூத்த தலைவர்!

கடந்த ஜூலை 30-ம் தேதி கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள முண்டகை, சூரலமலை மற்றும் மேப்பாடி ஆகிய கிராமங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவுகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை 358ஐ எட்டியுள்ளது. இன்னும் நிலச்சரிவில் சிக்கியிருக்கும் பலரையும் கண்டுபிடிக்க மீட்புப் பணியாளர்கள் கடுமையாக உழைத்து வருகின்றனர். முண்டக்காய் பகுதியில் 1500க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் தன்னார்வலர்கள் காணமால் போனவர்களை தேடி வருகின்றனர். ராணுவம், கடற்படை, வனத்துறை, மற்றும் போலீசார் இவர்களுக்கு உதவி செய்து வருகின்றனர். இடிபாடுகளுக்கு அடியில் இருப்பவர்களையும், இடிந்து விழுந்த வீடுகளில் சிக்கியவர்களையும் முதலில் தேடி வருகின்றனர். மேலும் படிக்க | வயநாட்டின் நிலைமை ஊட்டிக்கும் வரலாம்... எச்சரிக்கும் வல்லுநர்கள் - ஆக்‌ஷன் எடுக்குமா அரசு? மேலும் வயநாடு, மலப்புரம், கோழிக்கோடு மாவட்டங்களில் உள்ள சாலியார் ஆற்றிலும் தேடுதல் பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. நிலச்சரிவில் முண்டக்காய் மற்றும் சூரல்மலையை சேர்ந்த சுமார் 180 பேர் இன்னும் காணாமல் போயுள்ளனர். அவர்களை தேடும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நிலச்சரிவில் சேதமடைந்த வீடுகளில் உள்ள பொருட்கள் திருடு போவதாக புகார்கள் எழுந்துள்ளது. இதனால் பேரிடர் பாதித்த இடங்களுக்குள் வெளியாட்கள் நுழைய மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சூரல்மலை மற்றும் முண்டக்கை ஊர்களை இணைக்கும் பெய்லி பாலத்தை கடக்க தினசரி 1,500 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியவர்களைக் கண்டறிய ராணுவம் சிறப்பு பறக்கும் கேமராவைப் பயன்படுத்தியது. Wayanad rescue teams who dangerously trekked deep into the forest in hope for survivors, rescued 4 toddlers hiding in a cave Kalpetta Range Forest Officer spotted the mother wandering around dense Attamala forest in search of food for her family who were starve pic.twitter.com/U0luRWNlch — Nabila Jamal (@nabilajamal_) August 3, 2024 பசுவதை தான் காரணம் - பாஜக மூத்த தலைவர் கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டதற்கு அங்குள்ள மக்கள் பசுவை கொன்றது தான் காரணம் என்று ராஜஸ்தான் பாஜக கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்எல்ஏ-வுமான கியான்தேவ் அஹுஜா தெரிவித்துள்ளார். 2018 முதல் பசுக்கள் கொல்லப்படும் இடங்களில் சோகமான நிகழ்வுகள் நடைபெறுவதை நாங்கள் கவனித்து வருகிறோம். மாடுகளை கொல்வதை நிறுத்தாவிட்டால், கேரளாவில் இதுபோன்ற சோகமான சம்பவங்கள் நடந்து கொண்டே தான் இருக்கும். மற்ற இடங்களிலும் நிலச்சரிவுகள் நிகழ்கின்றன, ஆனால் அவை கேரளாவை போல மோசமாக இருக்காது. உத்தரகாண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசம் போன்ற பகுதிகளில் மேக வெடிப்புகள் மற்றும் நிலச்சரிவுகள் போன்ற இயற்கை பேரழிவுகள் அடிக்கடி ஏற்படுகின்றன. இருப்பினும், அங்கு இவ்வளவு பெரிய பாதிப்புகள் ஏற்படுவது இல்லை என்று சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார். மேலும் படிக்க | 'அப்போவே எச்சரித்தோம்... என்ன செய்தது கேரள அரசு...' - திடீரென சூடான அமித் ஷா சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.