TAMIL

மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்.. 2025-26 பட்ஜெட்டில் 5 முக்கிய அறிவிப்புகள் எனத்தகவல்

Senior Citizen Benefits In Budget Updates: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை பிப்ரவரி 1, 2025 சனிக்கிழமை அன்று தாக்கல் செய்ய உள்ளார். இந்த நிலையில் 2025 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் என்ன மாதிரியான தகவலை வெளியிட இருக்கிறார் என்பது குறித்து அனைவரும் ஆர்வமாக உள்ளனர். குறிப்பாக வரி செலுத்துபவர்கள் வருமான வரி விலக்கு குறித்து என்ன அறிவிப்பு வரும் என எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள். அதேநேரத்தில் நிதி சவால்களை எதிர்கொண்டு இருக்கும் மூத்த குடிமக்களுக்கு பயன் அளிக்கும் வகையில் இந்த 2025 பட்ஜெட்டில் என்ன மாதிரியான அறிவிப்புக்கள் வரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், மூத்த குடிமக்களுக்கு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஐந்து முக்கிய நடவடிக்கைகள் குறித்து 2025 பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாக உள்ளதாக தகவல். அது என்ன என்பது குறித்து அறிந்துக்கொள்ளுவோம். 75 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மூத்த குடிமக்கள், ஓய்வூதியம் மற்றும் குறிப்பிட்ட வங்கிகளின் வட்டி மூலம் மட்டுமே வருமானம் பெற்றால் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதிலிருந்து விலக்குகளை பெறுகின்றனர். இந்த விலக்குக்கான வயது வரம்பை குறைப்பதும், பல்வேறு வருமான ஆதாரங்களை கொண்டவர்களுக்கு எளிமைப்படுத்தப்பட்ட வரி அறிக்கை படிவங்களை அறிமுகப்படுத்துவதும் சிக்கல்களை குறைக்கும். மூத்த குடிமக்களுக்கான அடிப்படை விலக்கு வரம்பு சில காலமாக மாறாமல் உள்ளது. புதிய வரிமுறையின் கீழ் இந்த வரம்புகள் அதிகரிப்பது குறிப்பிடத்தக்க நிவாரணத்தை அளிக்கும் மற்றும் எளிமையான வரி கட்டமைப்பை பின்பற்றுவதற்கு அதிகமான மூத்த குடிமக்களை ஊக்குவிக்கும் என்றும் எதிர் பார்க்கப்படுகிறது. மேலும் இது சிறந்த நிதி பாதுகாப்பை உறுதி செய்யும். வங்கிகளும், நிதி நிறுவனங்களும் ஒரு குறிப்பிட்ட வரம்புக்கு மேல் உள்ள வட்டி வருமானத்தின் மீது வரியை கழிக்கின்றன. இந்த வரம்புகளை அடிப்படை விலக்கு வரம்புடன் சீரமைப்பது என்பது, தேவையற்ற விலக்குகளை குறைக்கவும், பணத்தை திரும்பப் பெறுவதற்கான அவசியத்தை குறைக்கவும், மூத்த குடிமக்கள் மீதான நிதி நெருக்கடியை எளிதாக்கவும் உதவுகிறது. மூத்த குடிமக்களின் சேமிப்பு திட்டங்கள் மற்றும் அஞ்சலக சேமிப்புக் கணக்குகளில் இருந்து கிடைக்கும் வட்டி அவர்களின் வருமானத்தில் முக்கியமான பகுதியாக உள்ளது. இந்த ஆதாரங்களின் மீதான வரி விலக்குகளை அதிகரிப்பது நிதி அழுத்தத்தை நேரடியாக குறைக்கும், இது தேவையான நிவாரணத்தை வழங்கும். மூத்த குடிமக்களின் செலவினங்களில் சுகாதார செலவுகள் கணிசமான பகுதியாக உள்ளது. உடல்நல காப்பீடு பிரீமியங்கள் மற்றும் மருத்துவ செலவுகளுக்கான விலக்குகளை அதிகரிப்பதன் மூலம் மூத்த குடிமக்களின் நிதி தேவைகளை நிவர்த்தி செய்ய முடியும் என எதிர் பார்க்கப்படுகிறது. எனவே 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட் மூத்த குடிமக்களின் பிரச்சனை தீர்க்க முக்கிய வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. அதாவது அதிக விலக்குகள், நெறிப்படுத்தப்பட்ட இணைக்க செயல்முறைகள் மற்றும் இலக்கு வரிச்சலுகைகள் ஆகியவற்றை அறிமுகப்படுத்துவதன் மூலம் முதியோர்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கையை உறுதிப்படுத்த அரசு தேவையான நிவாரணங்களை வழங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்: வட்டியில் மட்டும் 3 மாதத்துக்கு 1 முறை ரூ.60,150 கிடைக்கும் மேலும் படிக்க | ஓய்வூதியதாரர்களுக்கு 20%-100% ஓய்வூதிய உயர்வு: மத்திய அரசு புதிய வழிகாட்டுதல்கள், முழு விவரம் இதோ மேலும் படிக்க | ஓய்வூதியதாரர்களுக்கு புத்தாண்டில் குட் நியூஸ்: அதிரடி ஓய்வூதிய உயர்வு விரைவில் சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.