TAMIL

ஹமாஸ் தலைவர் சின்வார் உயிரிழந்தது எப்படி...? விரலை வெட்டி டிஎன்ஏ டெஸ்ட் - பரபரப்பு தகவல்கள்!

Hamas Leader Yahya Sinwar Death: ஹமாஸ் பயங்கரவாத குழு தலைவர் யாஹ்யா சின்வார் நேற்று முன்தினம் (அக். 17) சுட்டுக்கொல்லப்பட்டார் என இஸ்ரேல் ராணுவத்தால் அறிவிக்கப்பட்டது. அவரை சுட்டு வீழ்த்துவதற்கு முன்னர் அவரது முன்கை பகுதியில் காயம் ஏற்பட்டது. தொடர்ந்து அவரது தலையில் குண்டடியும்பட்ட நிலையில், கடுமையான ரத்தப்போக்கை தொடர்ந்து அவர் உயிரிழந்தார் என சின்வாரின் உடலை உடற்கூராய்வு மேற்கொண்ட மருத்துவர் கூறினார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. துப்பாக்கிக் குண்டு அவரது தலையை தாக்குவதற்கு முன்னரே பல்வேறு காயங்களால் சின்வார் அவதிப்பட்டிருப்பதாகவும் உடற்கூராய்வு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவரது உடலை கண்டறிந்த இஸ்ரேல் ராணுவம் அவரது கையின் கட்டைவிரலை வெட்டி எடுத்து, மரபணு சோதனை மேற்கொண்டனர். அதில் அவர் யாஹ்யா சின்வார் என்பதும் உறுதியானது. இஸ்ரேல் ராணுவத்திடம் உடல் ஒப்படைப்பு யாஹ்யா சின்வாரின் பிரேத பரிசோதனையை மேற்பார்வையிட்ட இஸ்ரேலின் தேசிய தடயவியல் நிறுவனத்தின் இயக்குநர் மருத்துவர் சென் குகேல் நியூயார்க் டைம்ஸ் ஊடகத்திடம் கூறுகையில், சின்வார் தலையில் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதாகவும். ஒரு சிறிய ஏவுகணை அல்லது பீரங்கி குண்டுகள் தாக்குதலால் அவரது முன்கை உடைந்து ரத்தப்போக்கு ஏற்பட்டதாக மருத்துவர் குறிப்பிட்டார். Eliminated: Yahya Sinwar. — Israel Defense Forces (@IDF) October 17, 2024 மேலும் படிக்க | ஹமாஸ் தலைவர் மரணத்தின் மூலம் நீதி வழங்கப்பட்டுள்ளது: கமலா ஹாரிஸ் மேலும், அந்த ரத்தப்போக்கை மின்சார கம்பியை வைத்து அடைக்க சின்வார் முயற்சித்துள்ளார் என்றும் இருப்பினும் அது போதுமான அளவு வலுவாக இல்லாததால் ரத்தப்போக்கு நிற்கவில்லை என்றும் மருத்துவர் கூறினார். சின்வார் உயிரிழந்து 24 முதல் 36 மணிநேரத்திற்குள் அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பிரதே பரிசோதனை முடிந்த பின்னர் உடல் இஸ்ரேல் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் அதனை ரகசிய இடத்திற்கு கொண்டு சென்றனர். டிஎன்ஏ மூலம் உறுதி உயிரிழந்தது சின்வார்தான் என்பது மரபணு சோதனை மூலம் உறுதியானது. இஸ்ரேல் ராணுவம் அவரது விரலை வெட்டி எடுத்து அதனை மரபணு சோதனைக்கு பயன்படுத்தியதாகவும் மருத்துவர் CNN ஊடகத்திடம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் விரிவாக கூறுகையில்,"சின்வார் சிறைக்கைதியாக இருக்கும்போது அவரிடம் இருந்து பெறப்பட்ட அடையாளங்களையும், தற்போதைய பரிசோதனை கூடம் மூலம் கிடைத்த அடையாளங்களையும் ஒப்பிட்டோம். அதன்மூலம் உயிரிழந்தது அவர்தான் என்பது உறுதியானது" என்றார். இஸ்ரேல் ராணுவம் யாஹ்யா சின்வாரின் மரணத்தை நேற்று முன்தினம் அறிவித்தாலும், ஹமாஸ் பயங்கரவாத குழு நேற்றுதான் உறுதிசெய்தது. அக.7ஆம் தேதி இஸ்ரேல் நடத்திய பயங்கர தாக்குததலல் சுமார் 1200 பேர் கொல்லப்பட்டனர். அதில் ஹமாஸ் தலைவராக இருந்த யாஹ்யா சின்வார்தான் முக்கியமானவர்கள் லிஸ்டில் இருந்தார். இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட டிரோன் வீடியோ கடுமையாக காயமடைந்து, இஸ்ரேல் ராணுவ தாக்குதல்களால் இடிந்தபோன ஒரு கட்டடத்தில் யாஹ்யா சின்வார் மறைந்திருந்ததை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட டிரோன் வீடியோவில் பார்க்க முடிந்தது. டிரோனை பார்த்ததும் அடிபடாத மற்றொரு கையால் அருகில் இருந்த குச்சியை தூக்கி டிரோனை நோக்கி வீசினார் சின்வார், இதுவும் வீடியோவில் பதிவாகி உள்ளது. அவர்தான் என அறிந்த பின்னர் அந்த கட்டடத்தில் பீரங்கி குண்டுகள் தாக்கின. பின்னர் அவர் தலையில் குண்டுகள் பாய்ந்து உயிரிழந்து கிடந்தார் என அறிவிக்கப்பட்டது. Raw footage of Yahya Sinwar’s last moments: pic.twitter.com/GJGDlu7bie — LTC Nadav Shoshani (@LTC_Shoshani) October 17, 2024 மேலும் படிக்க | ஹமாஸ் அமைப்பால் பணயக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும்: மேக்ரான் சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.