TAMIL

உங்கள் உயிரை ஆபத்திற்கு உள்ளாக்காமல் இருக்க முக்கியமான கார் பாதுகாப்பு டிப்ஸ்!

கார் வாங்கும் முன் உயிர்காக்கும் பாதுகாப்பு அம்சங்களைச் சரிபார்த்து வாங்குவது அவசியம் ஆகும். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துக்களில் 1.5 லட்சத்திற்கும் அதிகமான மரணங்கள் ஏற்படுகின்றன. இந்த உயிரிழப்புகளைக் குறைப்பதில் வாகனப் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. ஒவ்வொரு காரிலும் இருக்க வேண்டியஉயிர்காக்கும் பாதுகாப்பு அம்சங்கள் பற்றித் தெரிந்துக் கொள்வோம். இந்தியாவில் 3.5 டன் எடை வரையிலான மோட்டாா் வாகனங்களின் பாதுகாப்பு தரத்தை மேம்படுத்து நோக்கத்தில் ‘பாரத் என்சிஏபி (புதிய காா் பாதுகாப்பு அம்சங்கள் சோதனைத் திட்டம்)’ என்ற நாட்டின் சொந்த காா் பாதுகாப்பு அம்சங்கள் சோதனைத் திட்டம் கடந்த ஆண்டு செயல்படுத்தப்பட்டது. புதிதாக உற்பத்தி செய்யப்படும் காா், சந்தைக்கு விற்பனைக்கு வருவதற்கு முன்பாக அதில் பாதுகாப்பு அம்சங்கள் எந்த அளவுக்கு இடம்பெற்றுள்ளன என்பதை வாடிக்கையாளா்கள் அறிந்துகொள்ளும் வகையில் ஒன்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் பாதுகாப்பு சோதனைக்கு உள்படுத்தப்பட வேண்டும். காரின் முன்பகுதி, பக்கவாட்டுப் பகுதி மற்றும் பின்பகுதிகளை அதிவேகமாக மோத வைத்து, காரின் உள் பகுதியில் எந்த அளவுக்கு தாக்கம் ஏற்படுகிறது என்பது சோதிக்கப்படும். காரின் உள்ளிருப்பவா்களின் பாதுகாப்புக்காக பொருத்தப்பட்டிருக்கும் பாதுகாப்பு ‘ஏா்பேகுகள்’ முறையாக விரிகின்றனவா என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் ஆய்வு செய்யப்பட்டு அந்த காா் வகைக்கு 0 முதல் 5 நட்சத்திரங்கள் வரையிலான பாதுகாப்பு தரக் குறியீடு வழங்கப்படுகிறது. இந்தியாவுக்கென பிரத்யேக காா் பாதுகாப்பு சோதனைத் திட்டமான, ‘பாரத் என்சிஏபி’ வாகனங்களின் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்துகிறது. அனைத்து தரப்பினரின் நலனையும் கருத்தில் கொண்டு அரசு இந்த சோதனைத் திட்டத்தை உருவாக்கியுள்ளது. இந்த நிலையில், பொதுமக்கள் தங்களுடைய காரில் கவனிக்க வேண்டிய முக்கியமான பாதுகாப்பு அம்சங்களைப் பற்றித் தெரிந்துக் கொள்வோம். கார் வாங்குவதற்கு முன்னரே இந்த அம்சங்களின் அடிப்படையில் காரை தேர்ந்தெடுப்பது நல்லது. கார் பாதுகாப்பு அம்சங்கள் ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் ( Anti-lock Braking System (ABS என்பது பெரும்பாலான நவீன கார்களில் நிலையான அம்சமாக மாறிவிட்டது. அவசரகால பிரேக்கிங்கின் போது சக்கரங்கள் பூட்டப்படுவதை ஏபிஎஸ் தடுக்கிறது. இது காரின் டயர்கள் சறுக்குவதைத் தவிர்க்கவும், பாதுகாப்பாக கார் நிறுத்துவதை உறுதி செய்யவும் உதவுகிறது. கார் பாதுகாப்பு அம்சங்கள் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (Electronic Stability Control (ESC)): இது, கார் தனது கட்டுப்பாட்டை இழப்பதைக் கண்டறியும் போது பிரேக்குகள் மற்றும் இயந்திர சக்தியை சரிசெய்வதன் மூலம் காரை நிலையாக வைத்திருக்கும். இது காரின் சக்கரங்கள் சறுக்குவதையோ அல்லது கட்டுப்பாட்டை மீறி சுழலுவதையோ தடுக்க உதவுகிறது வாகனத்தை அதன் இலக்குப் பாதையில் வைத்திருக்க உதவுகிறது. ஏர்பேக்குகள் (Airbags): காரில் ஏர்பேக்குகள் இருந்தால், விபத்து நேரிட்டாலும் உயிரிழக்கும் வாய்ப்புகளும் காயங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் குறைவு. விபத்தின் போது காற்றுப் பைகள் விரிவடைந்து, உள்ளிருப்பவர்களை சூழ்ந்துக் கொள்ளும் என்பதால், அடிபடுவதில் இருந்து பயணிகள் பாதுகாக்கப்படுவார்கள். கடுமையான காயங்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கவும் ஏர்பேக்குகல் உதவுகின்றன. சீட் பெல்ட்கள் (Seat Belts): இந்தியாவில் காரில் பயணிக்கும் அனைத்து பயணிகளும் சீட் பெல்ட் அணிவது கட்டாயம். இது பயணிகள் பயணிக்கும்போது அவர்களை பாதுகாக்கிறது, விபத்து நடைபெற்றால், அவர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு சீட் பெல்ட் அவசியமாகிறது. சீட் பெல்ட்கள் பெரும்பாலும் ப்ரீ-டென்ஷனர்கள் மற்றும் கூடுதல் பாதுகாப்பிற்காக லோட் லிமிட்டர்களுடன் வருகின்றன. ISOFIX குழந்தைகளுக்கான சைல்ட் லாக்: குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் இந்த அம்சம், சிறாருக்கான பாதுகாப்பை கவனித்துக் கொள்கிறது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.