TAMIL

வெளிநாடு வேலை குட் நியூஸ்...! 10ம் வகுப்பு தேர்ச்சி, சம்பளம் ரூ.78,000 - அரசு அறிவிப்பு

Tamilnadu Government Job News | வெளிநாடு வேலை தேடுபவர்களுக்கு தமிழ்நாடு அரசு குட்நியூஸ் வெளியிட்டுள்ளது. இடைத்தரகர்களை நம்பி ஏமாறாமல் அரசு வெளியிட்டிருக்கும் இந்த அறிவிப்பையும், வேலை வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த வேலை வாய்ப்புக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி இருந்தால் போதும். அதிகபட்ச சம்பளம் 78,000 ரூபாய் வரை கிடைக்கும். இந்த வேலை வேண்டும் என்பவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம். வெல்டன், பைபிங், கேஸ் கட்டர் உள்ளிட்ட வேலை வாய்ப்புகள் உள்ளன. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிய Welder, Piping Fabricator, Piping Fitter, Structure Fabricator, Structure Ftter, Milwright Fitter, Grnder/Gas Cutter மற்றும் Piping Foreman ஆகிய பணிகளுக்கான ஆட்கள் தேவைப்படுகிறார்கள். விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணபிக்கலாம் என தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிய Welder (CS- GTAW +SMAW, SS-GTAW +SMAW. CS & SS-GTAW +SMAW, Alloy (P92 & p91)-GTAW+ SMAW. Duplex & Super Duplex - GTAW +SMAW) Piping Fabricator, Poling Fitter. Structure Fabricator. Structure Fitter, Miwright Fitter, Grinder (AG4 &AG7) /Gas cutter மற்றும் Piping Foreman தேவைப்படுகிறார்கள். ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிய குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று 3 வருட பணி அனுபவத்துடன் 44 வயதுக்கு உட்பட்ட Welder பணிக்கு ரூ. 40,000/-முதல் ரூ. 78,000/- வரை சம்பளம் கிடைக்கும். Pping Fabricator ரூ 40,000/- முதல் ரூ. 51,000/- வரை, Pping Fiter ரூ 36,000/- முதல் ரூ. 42.000/- வரை சம்பளம் கிடைக்கும். Structure Fabricator ரூ. 42000/- முதல் ரூ. 51,000/- வரை, Structure Fitter ரூ. 36,000/- முதல் ரூ. 42000/- வரை, Millwright Ftter 42,000/- முதல் ரூ. 51,000/- வரை Grinder/Gas cutter ரூ. 30,000/- முதல் ரூ.32,000/- வரை சம்பளம் கிடைக்கும். மற்றும் Poing Fireman ரூ. 53,000/- முதல் ரூ.60,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும். மேலும் உணவு மற்றும் இருப்பிடம், வேலை அளிப்பவரால் வழங்கப்படும். மேற்குறிப்பிட்ட பணிக்கு செல்பவர்கள் விசா கிடைத்த பின்னர் இந்நிறுவனத்திற்கு சேவைக்கட்டணமாக ரூ. 35,400/- மட்டும் செலுத்தினால் போதும். மேலே குறிப்பிட்டுள்ள பணிகளுக்கு செல்ல விருப்பமுள்ள ஆண் பணியாளர்கள் www.omcmanpower.tn.gov . என்ற இந்நிறுவன இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் gvercnm@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தங்களின் சுய விவர விண்ணப்பபடிவம், கல்வி, பணி அனுபவ சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் (Passport) நகலினை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கூடுதல் விவரங்களுக்கு அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவன தொலைபேசி எண் 044-22502267 மற்றும் whatsapp எண் 9566239685 வாயிலாக அறிந்துகொள்ளலாம். மேலும் படிக்க | வருமான வரி பிடித்தம் | 60-80 வயது ஓய்வூதியர்களுக்கு தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு மேலும் படிக்க | தமிழ்நாடு அரசின் இலவச டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி..! தொழில் முனைவோருக்கு சூப்பர் சான்ஸ் சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.