TAMIL

உடலுறவு... ஆண்களை விட ரோபோக்களை தான் பெண்கள் அதிகம் நாடுவார்கள் - இளைஞர்களுக்கு ஷாக்!

Sex Robots In Future: எதிர்காலம் குறித்து நம்மூரில் ஜோதிடர்கள் கணிப்பார்கள். திருமணத்திற்கு வரன் பார்ப்பது தொடங்கி தொழில் தொடங்குவது வரை எதிர்காலத்தின் உறவும், தொழிலும் எப்படி இருக்கும் என்பதை கணிக்க மக்கள் பெரும்பாலும் ஜோதிடத்தையும், ஜோதிடர்களையும் நம்புவார்கள். அதேபோல், எதிர்காலத்தை கணிக்கும் வல்லுநர்களை Futurologist என்றழைக்கப்படுகிறார்கள். அந்த வகையில், டாக்டர் இயன் பியர்சன் எனும் எதிர்காலத்தை கணிக்கும் வல்லுநர் (Futurologist Dr. Ian Pearson) ஊடகம் ஒன்றுக்கு அளித்த தகவல் தற்போது இணையத்தையே ஷாக் ஆக்கி உள்ளது. இங்கிலாந்து ஊடகம் ஒன்றுக்கு இயான் பியர்சன் பேட்டி அளித்துள்ளார். அதில் வரும் காலங்களில் பெண்கள் தங்களின் பாலியல் உறவுக்கு ஆண்களை விட ரோபாட்களைதான் அதிகம் சார்ந்திருப்பார்கள் என அதிர்ச்சிகரமான தகவலை அளித்துள்ளார். 2025ஆம் ஆண்டிலேயே, குறிப்பாக செல்வாக்கான நபர்களிடம், ரோபோவை பாலியல் பார்ட்னராக வைத்துக்கொள்ளும் நடைமுறை அதிகரிக்கும் என பியர்சன் எதிர்பார்க்கிறார். மேலும், மாறிவரும் திருமண உறவின்படி, பெண்கள் ஆண்களை விட ரோபோகளிடம்தான் உணர்வு ரீதியாக அதிகம் ஒன்றுவார்கள் என்றும் பியர்சன் கூறினார். இது பலராலும் ஏற்றுக்கொள்ள இயலவில்லை என்றாலும் அதற்கான காரணத்தையும் பியர்சன் விளக்குகிறார். ரோபோட் செக்ஸ் தற்போதைய காலகட்டத்தில் செக்ஸ் டாய்ஸ், செக்ஸ் டால்ஸ்களை பெண்கள் ஏற்றுக்கொண்டு, அதன் பயன்பாடும் அதிகரித்துள்ளதை பியர்சன் கூறுகிறார். அதாவது, பாலியல் நலன்சார் தொழில்களும் பெருகிவிட்ட நிலையில், அதில் செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோட்டிக்ஸ்களின் வருகையும் அதிகரிக்கும் எனவும் இந்த கணிப்புகள் வருங்காலத்தில் நிஜத்திற்கு வரும் எனவும் அவர் கூறுகிறார். மேலும் படிக்க | உணவில் விஷம்.. 13 வயது சிறுமியின் கொடூர செயல்.. காரணம் என்ன? இருப்பினும் இந்த நிலை உடனே ஏற்படும் என அவர் கூறவில்லை. செக்ஸ் டாய்ஸ், வைப்ரேட்டர்கள் உள்ளிட்டவை எப்படி தற்போது பொதுவாகிவிட்டதோ அதேபோன்று வருங்காலத்தில் இதுவும் பொதுவாகிவிடும் என்கிறார். அதேபோல், ரோபாட்களை பாலியல் பார்ட்னராக பெண்கள் வைத்துக்கொள்ளும் நடைமுறையும் இன்னும் வெகுதூரத்தில் இல்லை என்கிறார் பியர்சன். 2050ஆம் ஆண்டில் நிச்சயம் மனிதர்களுக்கு இடையிலான உறவை விட ரோபாட் செக்ஸ்தான் அதிக பிரபலமாகும் என அவர் கணித்துள்ளார். வருங்காலத்தில் இயல்பாகிவிடும் இதுகுறித்து அவர் கூறுவதாவது,"தொடக்கத்தில் ரோபாட்களுடன் உடலுறவு வைத்துக்கொள்வது பல பேருக்கு தயக்கமாகவே இருக்கும். ஆனால், காலம் செல்ல செல்ல அதற்கு மனிதர்கள் பழகிக்கொள்வார்கள். செயற்கை நுண்ணறிவு அதன் இயந்திரத்தன்மையை குறைக்கும். இதனால் தயக்கம் அறவே இல்லாமல் போய் இது மிகவும் இயல்பானதாகிவிடும்" என்கிறார். மேலும், "2030ஆம் ஆண்டளவில் விர்ச்சுவல் ரியாலிட்டி செக்ஸ் பொதுவானதாகிவிடும். செக்ஸ் ரோபோக்கள் உணர்ச்சி ரீதியான தடைகளை போக்கி குற்ற உணர்ச்சிகளை துடைத்தெறிந்துவிடும். இதன்மூலம், மனநலமும் ஆரோக்கியமாக இருக்கும், மனிதர்களும் தங்கள் வாழ்வில் மகிழ்ச்சியாக இருப்பார்கள்" என கூறுகிறார் பியர்சன் இந்த கணிப்புகள் இருந்தபோதிலும், மனிதர்கள் இடையிலான பாரம்பரிய உறவுகள் இன்னும் குறிப்பிடத்தக்க மதிப்பைக் கொண்டிருக்கும் என்று அவர் நம்புகிறார். ரோபோ செக்ஸ் ஒரு அச்சுறுத்தலாக கருதப்படக்கூடாது என்றும் மாறாக மனித பாலுணர்வை அனுபவத்தை மேம்படுத்துவதாகவே நினைக்க வேண்டும் என்றும் வாதிடுகிறார். மேலும் படிக்க | பாலியல் சுற்றுலா: தேவைக்கு திருமணம், உடனே விவாகரத்து... வறுமையால் வலையில் சிக்கும் பெண்கள் - பின்னணி இதோ சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.