TAMIL

IRCTC மட்டுமல்ல... இந்த செயலிகள் மூலமும் டிக்கெட் புக் செய்யலாம்... சலுகைகளும் உண்டு

நமது நாட்டின் போக்குவரத்தின் உயிர்நாடியாக கருதப்படும் இந்திய இரயில்வே உலகின் நான்காவது பெரிய இரயில் நெட்வொர்க் ஆக உள்ளது. தினம் கோடிக்கணக்கான மக்கள் இந்திய ரயில்வேயில் பயணம் செய்து தங்கள் இலக்கை அடைகின்றனர். முன்னதாக டிக்கெட் முன்பதிவு செய்ய ரயில்வே கவுண்டரில் நீண்ட வரிசையில் நிற்க வேண்டியிருந்தது. ஆனால் இன்றைய டிஜிட்டல் யுகம் டிக்கெட் புக்கிங் வேலையை மிகவும் எளிதாக்கியுள்ளது. இப்போது ஆன்லைன் மூலம் எந்த இடத்திற்கு செல்லவும், எந்த ரயிலிலும் டிக்கெட்டை (ஆன்லைன் ரயில் டிக்கெட் புக்கிங்) எந்த நேரத்திலும் உங்கள் மொபைல் ஃபோனிலிருந்து வீட்டில் உட்கார்ந்து பதிவு செய்யலாம். செயலிகள் மூலம் டிக்கெட் புக் செய்யலாம் டிக்கெட்டை முன்பதிவு செய்ய ஐஆர்சிடிசி (இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன்) என்னும் இந்திய ரயில்வேயின் இணையதளம் அல்லது மொபைல் செயலியைப் பயன்படுத்தலானம் என்றாலும், இன்று ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை வழங்கும் பல மொபைல் செயலிகள் உள்ளன. இந்த செயலிகளை பயன்படுத்தும் போது சில சமயங்களில் மலிவாக டிக்கெட் புக் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். Paytm Paytm மூலம் ரயில் டிக்கெட் புக் செய்யலாம். மேலும் இந்த ஆப் மூலம் பண பரிமாற்றம் தொடங்கி பொருட்களையும் வாங்கி கொள்ள முடியும். இந்த ஆப் மூலம் சில சமயங்களில் கேஷ்பேக் சலுகைகளை பெறும் வாய்ப்பு கிடைக்கும். நீங்கள் டிக்கெட் முன்பதிவுசெய்யும் ரயிலில் இருக்கைகள் இல்லை என்றால், உங்களின் வெயிடிங் லிஸ்ட் டிக்கெட் , கன்பர்ம் ஆகி உறுதி செய்யப்படுமா என்பதை கணிக்கவும் உதவுகிறது. Confirmtkt Confirmtkt என்னும் செயலியும் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய உதவுகிறது. இந்த செயலியை பயன்படுத்தி நீங்கள் விரைவாக டிக்கெட்டுகளை புக் செய்யலாம். பேடிஎம் செயலியை போலவே, உங்கள் டிக்கெட் வெயிடிங் லிஸ்ட் பட்டியலில் இருந்தால், உங்களுக்கு கன்பர்ம் டிக்கெட் கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகளையும் எடுத்துச் சொல்லும். MakeMyTrip MakeMyTrip செயலி மூலம் விமானங்கள், ஹோட்டல்கள் போன்றவற்றை தேர்வு செய்து உங்கள் பயணத் திட்டங்களை எளிதாக்க உதவுகிறது. இந்த செயலி மூலம் ரயில் டிக்கெட்டுகள், விமானங்கள், பேருந்து பயணங்கள் மற்றும் நீங்கள் தங்கக்கூடிய ஹோட்டல்களை முன்பதிவு செய்யலாம். இந்த செயலி மூலம் டிக்கெட் புக் செய்யும் போது பல்வேறு தள்ளுபடிகளை பெறலாம். மேலும் படிக்க | இந்திய ரயில்வேயின் WhatsApp சேவை... உணவு ஆர்டர் முதல் PNR நிலை வரை IRCTC Train Link App ரயில்வே இணையதளமான IRCTC இணைய தளத்திற்கு பதிலாக IRCTC Rail Connect ஆப்ஸைப் பயன்படுத்தலாம். இந்த செயலி நீங்கள் தினசரி பயணம் செய்யும் டிக்கெட்டுகளை புக் செய்ய, அவசரகால டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய, உங்கள் டிக்கெட் உறுதி செய்யப்பட்டுள்ளதா என சரிபார்க்க, உங்கள் இருக்கையைத் தேர்வுசெய்ய, ரயில் எங்கே வந்து கொண்டு இருக்கிறது என்று சரிபார்க்க மற்றும் உங்கள் PNR நிலையை கண்டறிய உதவுகிறது. இருப்பினும், சில சமயங்களில் இந்த ஆப்ஸில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது, ​​முகவர் சேவை கட்டணம் மற்றும் பேமெண்ட் கேட்வே கட்டணம் போன்ற பல கூடுதல் கட்டணங்களை நீங்கள் செலுத்த நேரிடலாம். எனவே கவனம் தேவை. இதனால் டிக்கெட் விலை கணிசமாக அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது. டிக்கெட்டை முன்பதிவு செய்ய ஐஆர்சிடிசி (இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன்) என்னும் இந்திய ரயில்வேயின் இணையதளம் அல்லது மொபைல் செயலியைப் பயன்படுத்தி முன்பதிவு செய்ய கூடுதல் கட்டணம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க | இந்திய ரயில்வே விதிகள்... இந்த ஆவணம் இல்லை என்றால்... உங்கள் டிக்கெட் செல்லாது... கவனமாக இருங்க சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.