TAMIL

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள்... போராட்டத்தில் ஈடுபடும் மக்கள்!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து தொடர்ந்து அதிர்ச்சிகரமான செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. பாகிஸ்தான் தங்களை மாற்றாந்தாய் போல் நடத்துவதாக அங்குள்ள மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் நிலவி வருகின்றன. பாகிஸ்தான் அரசாங்கமும் மக்களும் தங்களை மாற்றாந்தாய் போல் நடத்துவதாகவும், தங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது போன்ற விஷயங்கள் அந்தப் பகுதியில் இருந்து தொடர்ந்து குரல் எழுப்பபட்டு வருகின்றன. பாகிஸ்தான் ஆகிரமிப்பு காஷ்மீரில் மனித உரிமைகள் மீறப்படுவதாக, மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள தலைவர்கள் இந்த விஷயத்தை மார்ச் மாதம், ஐநா சபைக்கு எடுத்துச் செல்கிறார்கள். ஐக்கிய காஷ்மீர் மக்கள் தேசியக் கட்சியினர், ஐ.நா.வில் இந்தப் பிரச்சினையை எழுப்பினர். தங்கள் பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை நடத்தி வருவதாகவும் குற்றசாட்டை எழுப்பியுள்ளனர். இந்நிலையில், ஐக்கிய காஷ்மீர் மக்கள் தேசியக் கட்சியின் அவாமி நடவடிக்கைக் குழு செய்தியாளர் சந்திப்பில் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மீண்டும் எழுப்பியுள்ளது. பாகிஸ்தான் நிர்வாகம் PoK மக்களை நன்றாக நடத்துவதில்லை என்றும், அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் இது ஏன் நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள, நாம் வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டும். 1947ஆம் ஆண்டில் நாடு சுதந்திரம் பெறும் போது, ​​ஜம்மு காஷ்மீர் மன்னன் மகாராஜா ஹரி சிங்கிற்கு இரண்டு வழிகள் இருந்தன. அவர்கள் தங்கள் ராஜ்யத்தை இந்தியாவிலோ அல்லது பாகிஸ்தானிலோ சேர்த்திருக்கலாம். இந்த முடிவு எடுக்கப்பட்ட நேரத்தில், இப்போது பாகிஸ்தானில் இருக்கும் காஷ்மீரில் இருந்த மக்கள் மன்னருக்கு எதிராக கிளர்ச்சி செய்தனர். பாகிஸ்தானில் இருந்து அனுப்பப்பட்ட பழங்குடியினர் கிளர்ச்சியை தூண்டினர். வன்முறை மூலம் காஷ்மீரின் பல்வேறு பகுதிகளை ஒவ்வொன்றாக கைப்பற்றி வந்தனர். மேலும் படிக்க | ஒருவருக்கு Cheque கொடுக்கும் முன்பு கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்! வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு இந்திய இராணுவம் மன்னருக்கு உதவியது, ஆனால் பதிலுக்கு சில நிபந்தனைகள் இருந்தன. காஷ்மீரின் சில பகுதிகள் கிளர்ச்சியாளர்களால் கைப்பற்றப்பட்டன. இந்தப் பகுதி மக்கள் தங்களை ஆசாத் காஷ்மீர், அதாவது சுதந்திரம் பெற்ற காஷ்மீர் என்று அறிவித்துக் கொண்டனர். ஆனால், இதில் பாகிஸ்தானின் நேரடித் தலையீடு உள்ளது. PoK பகுதியில் உள்ள மற்றொரு பகுதி கில்கிட்-பால்டிஸ்தான் என்று அழைக்கப்படுகிறது. இந்த பகுதி லடாக்கின் எல்லையை ஒட்டி உள்ளது. ஒரு மூலோபாயக் கண்ணோட்டத்தில், PoK பகுதி முழுவதுமே மிகவும் முக்கியமானது. ஏனெனில் அதன் எல்லையானது ஆப்கானிஸ்தான், சீனா மற்றும் பாகிஸ்தான் போன்ற இந்தியாவுடன் நல்ல உறவுகளைக் கொண்டிருக்காத பல நாடுகளுக்கு அருகில் உள்ளது. ஆசாத் காஷ்மீரை பாகிஸ்தான் கைப்பற்றியது. ஆனால் அது சர்ச்சைக்குரிய பகுதி என்பதால் அதில் அதிக கவனம் செலுத்தவில்லை. அது தொடர்பான பாகிஸ்தானின் அணுகுமுறையும், வேறு மாதிரியாக இருந்தது. பாகிஸ்தான் நிரந்தர கட்டமைப்புகளை உருவாக்கவோ அல்லது வேலிகள் கட்டவோ தயாங்கியது. எதிர்காலத்தில் தாங்கள் சிக்கிக்கொள்ளலாம் என்று பாகிஸ்தான் நினைத்தது. எனவே PoK பகுதியின் நிலையும் ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் போல் ஆகிவிட்டது. ஆசாத் காஷ்மீர், சுமார் 13 ஆயிரம் கிலோமீட்டர் பரப்பளவில், 40 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. இங்குள்ள மக்கள் தங்களுக்கென தனை அரசு, அமைச்சரவை தேவை என ஒரு அமைப்பு உருவாக்கியுள்ளனர். PoK பகுதியின் தலைவர் ஜனாதிபதி, பிரதமர் தலைமை நிர்வாக அதிகாரி என நியமிக்கப்பட்டுள்ளனர். 10 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்ட PoK இன் தலைநகரம் முசாபராபாத் ஆகும். இப்பகுதிக்கென உச்ச நீதிமன்றமும் உள்ளது. ஆனால் உண்மையில் பாகிஸ்தானால் ஆளப்படும் பகுதியாகும். மேலும் படிக்க | PAN Aadhaar Link: ‘இவர்கள்’ பான் - ஆதார் அட்டை இணைக்க தேவையில்லை! சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.