TAMIL

பிராட்பேண்ட் சேவையில் அதிரடி காட்டும் BSNL... 399 ரூபாயில் 3300 GB டேட்டா...!

தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள், ஒரு மாத காலத்திற்கு முன்னால், கட்டண உயர்வை அறிவித்து, வாடிக்கையாளர்களுக்கு ஷாக் கொடுத்த நிலையில், அதிருப்தி அடைந்த பல வாடிக்கையாளர்கள், பிஎஸ்என்எல் பக்கம் தங்கள் பார்வையை திருப்பி உள்ளனர். இந்த சந்தர்ப்பத்தை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளும் பிஎஸ்என்எல், தங்கள் நிலையை வலுப்படுத்திக் கொள்ள, தொழில்நுட்ப மேம்பாடு மீது கவனம் செலுத்தி வருகிறது. 15,000 திற்கும் அதிகமான 4ஜி டவர்கள் அரசும், பொது தொல்லை தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் என்னும் பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் நிறுவனத்திற்கு புத்துயிர் ஊட்ட, பட்ஜெட்டில் அதிக அளவிலான நிதியை ஒதுக்கி ஊக்கம் அளித்து வருகிறது. ஆத்ம நிர்பர் பாரத் திட்டத்தின் கீழ், பிஎஸ்என்எல் நிறுவனம் 15,000 திற்கும் அதிகமான 4ஜி டவர்களை சமீபத்தில் நிறுவி, தங்களது நெட்வொர்க் வசதியை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் திட்டம் சாமானிய மக்கள் பலர், பிஎஸ்என்எல் நிறுவனத்தை நோக்கி வரும் இந்த சூழ்நிலையை, சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் வகையில், தனது பிராட்பேண்ட் கட்டணத்தை பெரிதும் குறைக்க முடிவு செய்துள்ளது BSNL நிறுவனம். மாதம் ரூபாய் 499 என்ற அளவில் கட்டணம் கொண்ட பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் திட்டத்தை, ரூபாய் 399 என்ற அளவில் குறைத்துள்ளது. 399 ரூபாய் கட்டண திட்டத்தின் நாளொன்றுக்கு 110 ஜிபி என்ற அளவில் ஒரு மாதத்திற்கு 3,300 ஜிபி டேட்டாவை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் படிக்க | அமேசான் பிரைம் இலவச சந்தா உடன் 168GB டேட்டா ... அசத்தும் ரிலையன்ஸ் ஜியோ... வாடிக்கையாளர்கள் ஹாப்பி தொலைதொடர்பு சந்தையில் பெருகும் வாய்ப்புகள் தொலைதொடர்பு சேவையில் ஏகபோக உரிமையை அனுபவித்து வரும் ஜியோ ஏர்டெல் வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள், பிஎஸ்என்எல் கட்டண குறைப்பால் அச்சத்தில் உள்ளன. ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் வரும் நிலையில், இணைய வசதி பெறுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. எனவே, இதற்கான சந்தையில் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. குறைந்த கட்டணத்துடன் தரமான சேவை வழங்கும் பிஎஸ்என்எல் ஸ்மாட்போனிற்கு தேவையான அடிப்படை இன்டர்நெட் கனெக்ஷன் என்னும் இணைய வசதியைப் பெற, குறைந்த கட்டணத்துடன் தரமான சேவையை வழங்க நினைக்கும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பக்கம் சாமனிய மக்கள் பலர் நகரத் தொடங்கியுள்ளனர். சென்ற மாத தொடக்கத்தில், ஜியோ உள்ளிட்ட தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள் அறிவித்த கட்டண உயர்வை அடுத்து, வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து கணிசமாக அதிகரித்து வருகிறது குறிப்பிடத்தக்கது. BSNL பயனர்களுக்கு மலிவான கட்டணத்தில் பல சிறப்பான திட்டங்களை வழங்குகிறது. அரசு தொலைத் தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் அதன் உள்கட்டமைப்பையும் மிக வேகமாக மேம்படுத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க | கனவுலகிலும் பரபரப்பை ஏற்படுத்த தயாராகும் ஜியோ! விர்சுவல் ரியாலிடியில் முகேஷ் அம்பானி! சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.