TAMIL

BSNL வழங்கும் அசத்தலான ப்ராண்ட்பேண்ட் பிளான்... 333 ரூபாயில் மாதம் 1300GB...

தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள், கடந்த ஜூலை மாதத்தில்க ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்திய நிலையில், அதிருப்தி வாடிக்கையாளர்கள் பலர், மலிவான திட்டங்கள் கொடுக்கும் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு மாறத் தொடங்கினர். ரீசார்ஜ் கட்டணங்களை தவிர, பிராட்பேண்ட் சேவைகளையும் மிக மலிவான கட்டணத்தில் வழங்குகிறது. BSNL அதன் பயனர்களை மகிழ்விக்கும் வகையில் குளிர்கால சலுகையை கொண்டு வந்துள்ளது. இந்த சலுகையின் கீழ் அரசு தொலைத் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் மிகக் குறைந்த கட்டணத்தில், அற்புதமான ப்ராட்பேண்ட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. மாதம்தோறும் 1300 ஜிபி அதிவேக டேட்டா BSNL ப்ராட்பேண்ட் திட்டத்தில், பயனர்கள் மாதம்தோறும் 1300 ஜிபி அதிவேக டேட்டாவைப் பெறுகிறார்கள். ஓடிடி திரைப்படங்கள் அதிகம் பார்க்கும் நபர்களுக்கு, ஆன்லைன் மூலம் கல்வி முறையை பின்பற்றுபவர்கள், மற்றும் அலுவலக வேலை செய்பவர்களுக்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். BSNL இந்தச் சலுகையானது நாட்டின் பெரும்பாலான வட்டங்களில் கிடைக்கிறது. இருப்பினும், டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பயனர்கள் இந்த நன்மையைப் பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.. இந்த, சலுகை திட்டடத்தின் பயனை விபரமாக அறிந்து கொள்ளலாம். BSNL குளிர்கால சலுகை பிஎஸ்என்எல் தனது பிராட்பேண்ட் சேவையான பாரத் ஃபைபருக்காக குளிர்கால சலுகையை கொண்டு வந்துள்ளது. இதில், பயனர்கள் ஆறு மாதங்களுக்கு 2000 ரூபாய்க்கும் குறைவான கட்டணத்தில் சூப்பர்ஃபாஸ்ட் FTTH இணையத்தைப் பெறலாம். பிஎஸ்என்எல் வழங்கும் இந்த சலுகையில், பாரத் ஃபைபர் பயனர்கள் ஒவ்வொரு மாதமும் 1300ஜிபி சூப்பர்ஃபாஸ்ட் FTTH இணையத்தைப் பெறுகிறார்கள். இதில் இணைய வேகம் 25 Mbps ஆக இருக்கும். பயனர்கள் ஒவ்வொரு மாதமும் 1300ஜிபி டேட்டாவை ஆறு மாதங்களுக்குப் பயன்படுத்த முடியும். 1300ஜிபி டேட்டா தீர்ந்த பிறகும் 4 எம்பிபிஎஸ் வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும். இந்த திட்டத்திற்கான கட்டணம் 1,999 ரூபாய். இது மட்டுமின்றி, இந்த காலக்கட்டத்தில் பயனர்கள் இந்த சலுகையின் கீழ் வரம்பற்ற லேண்ட்லைன் அழைப்புகளையும் செய்யலாம். மேலும் படிக்க | BSNL ... இனி எங்க காலம்! ஜியோ, ஏர்டெல், வோடபோனுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த பிஎஸ்என்எல் பிஎஸ்என்எல் வழங்கும் இந்த சலுகையில், பயனர்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.333க்கு 1300ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற லேண்ட்லைன் அழைப்புகளைப் பெறுகிறார்கள். இணையத்தை அதிகமாகப் பயன்படுத்துபவர்கள் மற்றும் அழைப்புகளைச் செய்பவர்களுக்கு இந்தச் சலுகை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். BSNL D2D சேவை சமீபத்தில் BSNL ஒரு புதிய நேரடி சாதன (D2D) சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவையின் கீழ், மொபைல் நெட்வொர்க் இல்லாவிட்டாலும் பயனர்கள் அழைப்பு மற்றும் எஸ் எம் எஸ் செய்தி அனுப்ப முடியும். இந்த சேவை அவசரகால சூழ்நிலைகளில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதன் மூலம் நீங்கள் செயற்கைக்கோள் மூலம் அழைப்புகளை செய்யலாம். தனியார் நிறுவனங்கள் தங்கள் போஸ்பெய்ட் மற்றும் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் கட்டணங்களின் விலைகளை சமீபத்தில் அதிகரித்த நிலையில், மலிவான கட்டணத்தில், அதிவேக இணையத்தை பெற விரும்புபவர்களுக்கு, BSNL சேவை சிறந்த தேர்வாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பிஎஸ்என்எல் பயனர்கள் அதிகரித்துள்ளதால், அதனை மேலும் மேம்படுத்தவும், நவீனப்படுத்தவும், மத்திய அரசும் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க | 84 நாட்களுக்கு தினசரி 3GB டேட்டா இலவசம்! BSNL-ன் அசத்தல் திட்டம்! சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.