TAMIL

உலக முத்தமிழ் முருகன் மாநாடு வெற்றிபெற்றுள்ளது - அமைச்சர் சேகர் பாபு!

தமிழக அரசு தமிழக முதல்வர் முருகனுக்கு எடுக்கின்ற இந்த மாநாட்டை அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக்கொண்டனர், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாநாடு வெற்றி பெற்றது என்று பழநியில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு பேட்டி அளித்துள்ளார். "ஆட்சிக்கு வந்து 39 மாதங்களில் இந்து சமய அறநிலைத்துறை வரலாற்றில் இல்லாத வரை திருக்கோயில் பூர்ணமைக்கவும், ஆன்மீகம் அன்பர்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவும் முதல்வர் தலைமையில் உள்ள ஆலோசனை குழு கூட்டத்தை கூட்டி அதில் எடுக்க இருக்கக்கூடிய பல்வேறு முடிவுகளை பல பல திட்டங்களை தீட்டி செயல்படுத்து வருகிறார் முதலமைச்சர் . அந்தக் குழுவின் முடிவின்படி 24,25 தேதிகளில் பழனியில் அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாடு முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு துவங்கியது. மேலும் படிக்க | கிருஷ்ணகிரி : பாலியல் வழக்கில் கைதான முன்னாள் நாதக நிர்வாகி சிவராமன் தற்கொலை இதற்காக 11 குழுக்கள் அமைக்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. நேற்று துவங்கிய மாநாடு மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. நேற்று நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை மட்டும் 600க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிகழ்ச்சியில் 4 நீதி அரசர்கள், அனைத்து ஆதீனங்களும் கலந்து கொண்டனர். முன்னணியில் இருக்கின்ற ஆன்றோர்கள், சான்றோர்கள் , தமிழ் பெருமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். ஜப்பான், ஜெர்மன், ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து உட்பட 300-க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். காணொளி காட்சி மூலமாக தமிழக முதல்வர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். நாங்கள் திட்டமிட்டது 25000 பேர் மட்டும் தான் ஆனால் நேற்றைய மாநாட்டில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர். தமிழக அரசு, தமிழக முதல்வர் முருகனுக்கு எடுக்கின்ற இந்த மாநாட்டை அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக்கொண்டனர். 160 முருகன் தொடர்பான புகைப்பட கண்காட்சி, 3D திரையரங்கம், VR கலையரங்கம், புத்தக கண்காட்சி லட்சக்கணக்கான மக்கள் பார்வையிட்டனர். மாநாட்டிற்கு வருகை தந்த 50,000 மேற்பட்டவர்களுக்கு பக்தர்கள் பொதுமக்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. ஒன்னேகால் லட்சம் பக்தர்கள் உணவு அருந்தி உள்ளனர். இன்று இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் சான்றோர்கள், ஆதினங்கள், நீதி அரசர்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் இன்றைய நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளனர். மாநாட்டில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. இரண்டாவது நாள் மாநாடும் வெற்றி பெறும். கண்காட்சியைப் பொறுத்தவரை பொதுமக்கள் பார்வை விட மேலும் ஐந்து நாட்கள் நீடிக்கப்படுகிறது" என்று தெரிவித்துள்ளார். இது குறித்து சிபிஎம் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கூறியதாவது, "எல்லோருக்கும் எல்லாம் என்பது இந்த அரசு. நிறைவாக அனைவரும் மகிழ்ச்சியோடு இருக்கும்போது எங்கோ ஒரு மூளையில் இருந்ததை கேள்வியாக கேட்பது மகிழ்ச்சியை தவிர்ப்பதாகும். இந்த முருகன் மாநாட்டைப் பொறுத்தவரை தமிழக அரசு இந்து சமய அறநிலைத்துறை இணைந்து நடத்துகின்ற நிகழ்ச்சி முருக பக்தர்களால் கொண்டாடப்பட கூடிய நிகழ்ச்சி. இந்த மாநாட்டில் 16 முருக பக்தர்களுக்கு 1 பவுன் தங்க நாணயம் மற்றும் விருதுகள் வழங்கப்படுகிறது. இது முழுக்க முழுக்க அரசியல் சார்பற்ற அரசும் இந்து சமய அறநிலைத்துறை சேர்ந்து நடத்துகின்ற நிகழ்வு என செய்தியாளரிடம் தெரிவித்தார். மேலும் படிக்க | அமைச்சர் உதயநிதியை வம்புக்கு இழுத்த பிக்பாஸ் டைட்டில் வின்னர் சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.