TAMIL

கும்பமேளாவுக்கும்... மகா கும்பமேளாவுக்கும்... என்ன வித்தியாசம் தெரியுமா?

Kumbh Mela vs Maha Kumbh Mela: இந்துக்களின் மிகப் புனிதமான விழாக்களில் ஒன்று, மகா கும்பமேளா. 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு மகா கும்பமேளா நடைபெற இருக்கிறது. பிரம்மாண்டமான ஏற்பாடுகளுடன் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த மகா கும்பமேளா விழாவில் பங்கேற்பார்கள். உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் வரும் ஜனவரி 13ஆம் தேதி முதல் பிப்ரவரி 26 ஆம் தேதி வரை இந்த மகா கும்பமேளா நடைபெறுகிறது. மகா கும்பமேளாவின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் உலகம் முழுவதும் இருந்து திருவேணி சங்கமத்தில் ஒன்று கூடுவார்கள். அதாவது கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் இடத்தில் பக்தர்கள் ஒன்று கூடி புனித நீராடுவார்கள். மகா கும்பமேளா நிகழ்வில் பக்தர்கள் புனித நீராடும் இந்த நிகழ்ச்சி பெரும் ஆன்மீக முக்கியத்துவத்தை பெறுகிறது. புராணக்கதை பின்னணி மகா கும்பமேளா நிகழ்ச்சியின் வேர்கள் பண்டைய இந்து புராணங்களில் காணப்படுகிறது. புராணத்தில் உள்ள சமுத்திர மந்தனின் கதையிலும் மகா கும்பமேளா குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. பாற்கடலில் கடையப்பட்ட அமிர்தத்தின் சொட்டுகள் பிரயாக்ராஜ் உட்பட நான்கு இடங்களில் விழுந்ததாக நம்பப்படுகிறது. மேலும் படிக்க | கும்பமேளாவை தீர்மானிக்கும் குரு பெயர்ச்சி... 2025 மகா கும்பமேளா குறித்த அரிய தகவல்கள் கும்பமேளாவின் போது புனித நீரில் நீராடுவது ஆன்மாவைத் தூய்மைப்படுத்துவதாகவும், பாவங்களுக்கு பரிகாரம் செய்வதாகவும் அமையும் என நம்பப்படுகிறது. ஆன்மா மோட்சம் பெற கும்பமேளாவின் போது புனித நீராடுவது உகந்தது என கூறப்படுகிறது. கும்பமேளா vs மகா கும்பமேளா பக்தர்களின் கூற்றுப்படி, கிரகங்களின் பெயர்ச்சி நடைபெறும் இந்த புனிதமான காலகட்டத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் இணையும் திருவேணி சங்கமத்தில் புனித நீராடுவது ஆன்மீக சக்தியை மேம்படுத்தி, முக்தியை அடைய உதவுகிறது. கும்பமேளா மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படுகிறது. அதாவது, ஹரித்வார், உஜ்ஜைன், நாசிக் மற்றும் பிரயாக்ராஜ் ஆகிய நகரங்களில் முறையே மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை கும்பமேளா நடைபெறும். அதாவது, ஹரித்வாரி கும்பமேளா நடைபெறுகிறது என்றால் அடுத்த மூன்றாண்டுகளுக்கு பின் உஜ்ஜைன் நகரிலும், அடுத்த மூன்றாண்டுகளுக்கு பின் நாசிக் நகரிலும், அடுத்த மூன்றாண்டுகளுக்கு பின் பிரயாக்ராஜ் நகரிலும் கும்பமேளா நடைபெறும். இந்த நான்கு நகரங்களிலும் கும்பமேளா நிறைவடைய 12 ஆண்டுகள் ஆகிறது அல்லவா... இந்த 12 ஆண்டுகள் நிறைவடைவதை கொண்டாடும் நிகழ்வே மகா கும்பமேளா ஆகும். பிரயாக்ராஜ் நகரில் நடைபெறும் இந்த நிகழ்வு மகா கும்பமேளா என்றழைக்கப்படுகிறது. மகா கும்பமேளா நிகழ்விற்கு, கும்பமேளாவை விட அதிக பக்தர்கள் வருகை தருவார்கள். மேலும், கும்பமேளாவை விட மகா கும்பமேளா நிகழ்வு அதிக ஆன்மீக முக்கியத்துவம் பெறுகிறது. மேலும் படிக்க | மகா கும்பமேளா வரலாறு, முக்கியத்துவம், முக்கிய தேதிகள்..! சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.