TAMIL

டொனால்டு டிரம்ப் vs கமலா ஹாரிஸ்: வெற்றியை தீர்மானிக்கும் இந்த 7 மாகாணங்கள்... யார் பக்கம் அதிபர் நாற்காலி?

US Presidential Election 2024 Latest News Updates: உலகமே இப்போது அமெரிக்க அதிபர் தேர்தலை உற்றுநோக்கி வருகிறது. நவம்பர் மாத முதல் வார செவ்வாய்கிழமைதான் அங்கு 'தேர்தல் நாள்' ஆகும். அதன்பேரில் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று (நவ. 5) நடைபெறுகிறது. இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு தொடங்கி நாளை காலை 5.30 மணிக்கு நிறைவடையும். வாக்குப் பதிவு முடிந்த உடனேயே மொத்தமுள்ள 50 மாகாணங்களிலும் வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. ஆனால், யார் வெற்றியாளர் என்ற முடிவுகள் எப்போது உறுதியாகும் என்பதை கணிப்பது கடினம் ஆகும். தேர்தல் முடிந்த உடனேயோ அல்லது அடுத்த நாளோ அல்லது அடுத்த வாரமோ அல்லது அடுத்த மாதமோ கூட யார் வெற்றியாளர் என்ற முடிவுகள் வெளியாகலாம். இருப்பினும், தற்போதைய நிலவரப்படி குடியரசு கட்சியின் வேட்பாளரும், முன்னாள் அமெரிக்க அதிபருமான டொனால்டு டிரம்ப் (Donald Trump) தான் தேர்தல் வெற்றியில் முன்னணியில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிலும் குறிப்பாக swing states என்றழைகப்படும் அமெரிக்க அதிபர் தேர்தலை தீர்மானிக்கும் இந்த 7 மாகாணங்களில் டொனால்ட் டிரம்பிற்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கூறப்படுகிறது. ஜனநாயக கட்சியின் வேட்பாளரும், தற்போதைய துணை அதிபரான கமலா ஹாரிஸிற்கு (Kamala Harris) வெற்றி வாய்ப்பு குறைவாக உள்லதாகவே கூறப்படுகிறது. வெற்றியை தீர்மானிக்கும் 7 மாகாணங்கள் மேலும் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில் டொனால்ட் டிரம்பிற்கு 49% மக்கள் வாக்களிப்பதாக தெரிவித்துள்ளனர். அதாவது, கமலா ஹாரிஸை விட டிரம்ப் 1.8% வாக்குகள் முன்னணியில் இருப்பதாக கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. நவம்பர் முதலிரண்டு நாள்களில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் சுமார் 2,500 பேரிடம் கருத்துக் கேட்கப்பட்டுள்ளது. அதில் பெரும்பாலானவர்கள் மகளிர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே போட்டி கடுமையாக இருக்கும் என்பதால் இந்த 7 Swing States மீது அனைவரின் கவனம் குவிந்துள்ளது. மேலும் படிக்க | அமெரிக்க அரசியலில் ஏ.ஆர். ரஹ்மான்... கமலா ஹாரிஸிற்கு ஆதரவு - என்ன செய்தார் தெரியுமா? அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, வட கரோலினா, பென்சில்வேனியா மற்றும் விஸ்கான்சின் ஆகிய 7 மாகாணங்கள்தான் Swing States என்றழைக்கப்படுகின்றன. இங்கு வெற்றித் தோல்விகள் மிக குறைந்த அளவிலான வாக்கு வித்தியாசத்திலேயே முடிவாகும். இங்கு இரு தரப்புக்கும் கடினமான போட்டி நிலவும் எனலாம். தற்போது வெளியான தகவல்களின்படி, குடியரசு கட்சியின் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் இங்கு முன்னணியில் இருப்பதாக தெரியவருகிறது. இந்த 7 மாகாணங்களின் கருத்துக்கணிப்பு முடிவுகளை தொடர்ந்து காணலாம். கருத்துக்கணிப்பில் டிரம்ப் முன்னணி அரிசோனா மாகாணத்தின் கருத்துக்கணிப்பில், டிரம்ப் 51.9% வாக்குகளையும், கமலா ஹாரிஸ் 45.1% வாக்குகளையும் பெற்று, டிரம்ப் முன்னணியில் இருப்பதாக கூறப்படுகிறது. நெவாடாவிலும் டிரம்ப் முன்னணியில் இருக்கிறார். அங்கு டிரம்ப் 51.4% மற்றும் கமலா ஹாரிஸ் 45.9% வாக்குகளையும் பெற்றுள்ளனர். வடக்கு கரோலினாவில் டிரம்ப் 50.4%, கமலா ஹாரிஸ் 46.8% வாக்குகளையும் பெற்றுள்ளனர். யார் பக்கம் அதிபர் நாற்காலி? அமெரிக்க அதிபர் தேர்தலை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், ஒட்டுமொத்த 50 மாகாணங்களையும் மூன்று விதமாக பிரிக்கலாம். Red States, Blue States, Swing States என மூன்றாக பிரிக்கலாம். Red States என்பது குடியரசு கட்சியினர் தொடர்ந்து கைப்பற்றும் மாகாணங்களை குறிக்கும். 1980ஆம் ஆண்டு முதல் Red States மாகாணங்களை குடியரசு கட்சி வெற்றி பெற்று வருகிறது. 1992ஆம் ஆண்டு முதல் ஜனநாயக கட்சி ஆதிக்கம் செலுத்தும் மாகாணங்களை Blue States என்றழைப்பார்கள். எனவே, Red States மற்றும் Blue States மாகாணங்களில் தேர்தல் வெற்றி தோல்விகள் எளிதில் கணிக்கப்படும். Swing States என்ற 7 மாகாணங்களில்தான் குடியரசு மற்றும் ஜனநாயக கட்சிகளின் வெற்றி, தோல்விகளை அவ்வளவு எளிதில் கணிக்க இயலாது. முன் சொன்னது போல் வெற்றி தோல்விகள் மிக குறைவான வாக்கு வித்தியாசத்திலேயே முடிவாகும். உதாரணத்திற்கு கடந்த 2020ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் ஜோ பைடன் அரிசோனா மாகாணத்தில் வெறும் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றார் என்பது இங்கு கவனிக்கத்தக்கது. மேலும் Reuters/Ipsos கருத்துக்கணிப்பு கடந்த வாரம் அக். 29ஆம் தேதி வெளியாகின. அதில் டொனால்டு டிரம்பை விட கமலா ஹாரிஸ் 1% முன்னணியில் இருக்கிறார் என கணிக்கப்பட்டது. கமலா ஹாரிஸ் 44% மற்றும் டிரம்ப் 43% என கணிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து Reuters/Ipsos கருத்துக்கணிப்பில் முன்னணியில் இருந்து வருகிறார். ஆனால் அவருக்கான ஆதரவு தொடர்ச்சியாக குறைந்துகொண்டே வந்ததும் இங்கு கவனிக்கத்தக்கது. மேலும் படிக்க | அமெரிக்க அரசியல் வரை போன 'அணில்' மேட்டர்... சிக்கலில் கமலா ஹாரிஸ் - என்ன பிரச்னை? சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.