TAMIL

வைரல் வீடியோ: மசோதாவை கிழித்து எரிந்து.. நாடாளுமன்றத்தில் ஹக்கா நடனமாடிய எம்.பி.

Indigenous Treaty Bill In New Zealand: நேற்று (நவம்பர் 14, வியாழக்கிழமை) நியூசிலாந்து பாராளுமன்றத்தில் பெரும் அமளி ஏற்பட்டது. எங்களுக்கு பிடிக்காத சட்டத்தையா கொண்டு வரப்பாக்குறீங்களா எனக்கூறி சட்டத்திருத்த நகலைக் கிழித்துப் போட்டு எதிர்ப்பு தெரிவித்த எதிர்கட்சியை சேர்ந்த இளைய எம்.பி. ஹானா ரவ்ஹிடி வீடியோ உலக அளவில் ட்ரென்டாகி வருகிறது. மாவோரி ஹக்கா நடமாடிய எம்.பி. ஹானா ரவ்ஹிடி நியுசிலாந்து பாராளுமன்றத்தில் மாவோரி ஒப்பந்தக் கோட்பாடுகள் மசோதா மீது வாக்கெடுப்பு நடந்தது. அப்பொழுது மாவோரி உரிமைகளைப் பாதுகாப்பதில் நியுசிலாந்து அரசாங்கம் பின்வாங்கி விட்டது எனக்கூறி, மாவோரி மக்களுக்கு எதிரான சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டத்திருத்த நகலைக் கிழித்துப் போட்டு, "மாவோரி ஹக்கா" பழங்குடி பாடல் பாடி நடனமாடிய 22 வயதான மவோரி எம்.பி. ஹானா ரவ்ஹிடி. நியுசிலாந்து பாராளுமன்றம் ஒத்தி வைப்பு அவரிடன் சேர்ந்து அமர்ந்திருந்த சபையின் மற்ற உறுப்பினர்கள் மற்றும் கேலரியில் அமர்ந்திருந்த பார்வையாளர்களும் ஹாக்கா நடனம் ஆடத் தொடங்கினர். இதனால் சபாநாயகர் ஜெர்ரி பிரவுன்லீ சபை அமர்வை சிறிது நேரம் ஒத்தி வைத்தார். New Zealand MPs shook the Parliament with a Powerful Haka New Zealand's Youngest MP #HanaRawhiti , leads a Powerful Haka Protest in Parliament, Tearing up the Treaty Principles Bill. Could this spark a turning point for Indigenous rights #NewZealand #HanaRawhiti … pic.twitter.com/jRlzlZgDTm — The Herd (@TheHerd_z) November 15, 2024 வைதாங்கி ஒப்பந்தம் என்றால் என்ன? 1840 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட வைதாங்கி ஒப்பந்தம் (Treaty of Waitangi) அடிப்படையில் மாவோரி பழங்குடி மக்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. வைதாங்கி ஒப்பந்தம் என்பது அரசாங்கத்திற்கும் மாவோரிக்கும் இடையிலான உறவுகளை வழிநடத்துகிறது. இதில், பிரிட்டிஷ் நிர்வாகத்திடம் தங்கள் அதிகாரத்தை ஒப்படைத்தற்குப் பதிலாக, பழங்குடியினர் தங்கள் நிலத்தைத் தக்கவைத்துக் கொள்ளவும், தங்கள் நலன்களைப் பாதுகாக்கவும் அனைத்து உரிமைகளைப் பெறுகின்றனர். இந்த உரிமைகள் அனைத்து நியூசிலாந்து மக்களுக்கும் பொருந்தும் என்று ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. 200 ஆண்டுகால வரலாற்றில் மிக இளம் வயது எம்.பி. தற்போது வைதாங்கி ஒப்பந்தத்தில் மாற்றம் செய்து நியூசிலாந்து பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு நியூசிலாந்தின் இளம் எம்.பி. 22 வயதான எம்.பி., ஹானா ரவ்ஹிடி கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் மாவோரி பழங்குடி மக்களை ஹானா ரவ்ஹிடி பிரதிநிதித்துவப்படுத்துகிறார். நியூசிலாந்தின் இருநூறு ஆண்டுகால வரலாற்றில் மிக இளம் வயது எம்பி என்ற பெருமையை ஹானா ரவ்ஹிடி பெற்றுள்ளார். 2023 தேர்தலில் வெற்றி பெற்றார். 2023 தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் நியூசிலாந்தின் தலைப்புச் செய்திகள் இடம்பெற்று வருகிறார் மற்றும் தனது முதல் உரையின் போது பாராளுமன்றத்தில் பாரம்பரிய ஹாக்கா நடனத்தை நிகழ்த்தி உள்ளார். மிக நீண்ட காலம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்த நானியா மஹுதாவை தோற்கடித்து வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க - எலும்பும் தோலுமான சுனிதா வில்லியம்ஸ்... அவரே சொன்ன காரணம் மேலும் படிக்க - 'நிர்வாண திருமணம்' 29 தம்பதிகளும் உடம்பில் ஒட்டுத் துணிக்கூட இல்லாமல்... உறைய வைக்கும் வினோத நிகழ்வு மேலும் படிக்க - 35 பேரை கார் ஏற்றிக் கொன்ற 'கொடூர' முதியவர்... துரத்தி துரத்தி கொலை - சீனாவில் அதிர்ச்சி சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.