TAMIL

ஒரே நாளில் கொட்டித் தீர்த்த ஓராண்டு மழை... மிதக்கும் துபாய்... தவிக்கும் மக்கள்!

Dubai Rains: ஐக்கிய அரபு அமீரகத்தில் பொதுவாக வறண்ட வானிலையே நிலவும். ஆனால் ஏப்ரல் 16ம் தேதி, அதாவது நேற்று பெய்த வரலாறு காணாத கன மழையால் சாலைகளில் வெள்ளம் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடுகிறது. துபாய் சர்வதேச விமான நிலைய ஓடுபாதை சமுத்திரம் போல் காட்சியளிக்கிறது. உலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான துபாய் சர்வதேச விமான நிலையத்தின் விமான சேவைகள் வெகுவாக பாதிக்கப்பட்டன. மேலும், துபாயின் அடையாளங்களாக கருதப்படும் துபாய் மால், எமிரேட்ஸ் மால் ஆகிய இரு வணிக வளாகங்களுக்கும் மழை நீர் புகுந்தது. துபாயின் மெட்ரோ ரயில் நிலையம் ஒன்றிலும் தண்ணீர் புகுந்தது. ஒரே நாளில் கொட்டித் தீர்த்த ஓராண்டு மழை துபாய் சர்வதேச விமான நிலையத்தில் சேகரிக்கப்பட்ட வானிலைத் தகவல்கள், புயல் காரணமாக திங்கள்கிழமை பிற்பகுதியில் 20 மில்லிமீட்டர் (0.79 அங்குலம்) மழையைக் பெய்ததாக கூறுகின்றன, செவ்வாய் கிழமையில் தீவிரமடைந்த மழை, இறுதியில் 24 மணி நேரத்திற்குள் 142 மில்லிமீட்டர் (5.59 அங்குலம்) மழை பெய்ததால் நகரமே தண்ணீரில் மூழ்கியது. தற்போதைய மழையின் அளவு, விமான நிலையத்தில் பதிவான சராசரி ஆண்டு மழையான 94.7 மில்லிமீட்டர் (3.73 அங்குலம்) அளவை விட அதிகமாக உள்ளது என்று கூறப்படுகிறது. ஓராண்டில் பெய்ய வேண்டிய சராசரி மழையளவு ஒரே நாளில் கொட்டித் தீர்த்ததால் இந்த நிலை ஏற்பட்டதாக துபாய் ( Dubai ) வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கின்றது. அரேபிய தீபகற்ப பகுதியைக் கடந்து சென்ற பெரிய புயலே இந்த பெருமழைக்குக் காரணம் என வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது. இது தற்போது ஓமன் வளைகுடாவில் உலாவும் நிலையில், ஓமன் மற்று தென் கிழக்கு ஈரானிலும் வழக்கத்துக்கு மாறான மழை கொட்டித் தீர்த்துள்ளது. Due to heavy rains in Dubai yesterday, flood situation has arisen, life has been disrupted, airports are submerged in water, the situation is worrying #dubaiflood #heavyrain #BreakingNews‌ pic.twitter.com/vMeQTUdxgt — NR jangid (@NRjangid46) April 17, 2024 வெள்ளக்காடாக காட்சி அளித்த விமான நிலையம் கடுமையான மழை காரணமாக விமான நிலையமே வெள்ளக்காடாக காட்சி அளித்ததைத் தொடர்ந்து, ஏப்ரல் 16 அன்று ஏராளமான விமானங்கள் தாமதமாக அல்லது ரத்து செய்யப்பட்டன. பாதிக்கப்பட்ட வழித்தடங்களில் இந்தியா, பாகிஸ்தான், சவுதி அரேபியா மற்றும் இங்கிலாந்து ஆகியவை அடங்கும். ஓடுபாதைகள் வெள்ள நீரில் மூழ்கியதால், டெர்மினல் கட்டிடங்களை அடைவதற்கு வெள்ளம் சூழ்ந்த சாலைவழிகளில் செல்ல முடியாமல் சிரமப்பட்ட பயணிகள் தவித்தனர். மேலும் படிக்க | அடிடாஸ் ஷூவால் ஏற்பட்ட சிக்கல்... மன்னிப்பு கோரிய ரிஷி சுனக்! ஸ்தம்பித்துப் போயுள்ள வளைகுடா நாடுகள் திடீர் புயல், மழை, வெள்ளத்தால் வளைகுடா நாடுகள் ஸ்தம்பித்துப் போயுள்ளன. பஹ்ரைன், கத்தார் மற்றும் சவுதி அரேபியா போன்ற அண்டை நாடுகளிலும் மழைப்பொழிவு ஏற்பட்டுள்ள நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் எல்லைகளுக்கு அப்பால் கனமழை நீடித்தது. பஹ்ரைனிலும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், கத்தார் ஆகிய நாடுகளிலும் புயல் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓமனில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. மேலும் படிக்க | ஹோட்டலில் மிஞ்சிப்போன உணவை சாப்பிட்டு... லட்சக்கணக்கில் பணத்தை சேமித்த ஐடியா மணி! சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.