TAMIL

நாடாளுமன்றத்தில் மோதல்! ராகுல் காந்தி தான் தள்ளிவிட்டார்.. பாஜக புகார்!

Rahul Gandhi Latest News: பி.ஆர்.அம்பேத்கர் குறித்து அமித் ஷா கூறிய கருத்துக்கு எதிராக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகர் துவாரின் சுவர்களில் ஏறி மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். உள்துறை அமைச்சர் மன்னிப்பு கேட்டு ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். ராஜ்யசபா ஒத்திவைக்கப்பட்டது பி.ஆர்.அம்பேத்கர் குறித்து அமித் ஷா பேசியது குறித்து விவாதிக்கக் கோரிய நோட்டீஸ்களை அவைத் தலைவர் ஜகதீப் தன்கர் நிராகரித்ததை அடுத்து, எதிர்க்கட்சிகளின் அமளியால் மாநிலங்களவை இன்று பிற்பகல் 2 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. ராகுல் காந்தி என்னை தள்ளிவிட்டார் பாஜக எம்.பி. குற்றசாட்டு நாடாளுமன்ற வளாகத்திற்குள் இந்தியா கூட்டணி எதிர்க்கட்சியினர் நடத்திய போராட்டத்தின் போது, ​​ காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பிரதாப் சாரங்கியை தள்ளிவிட்டதாகவும், அதனால் அவருக்கு காயம் ஏற்பட்டதாகவும் பாஜக குற்றம்சாட்டியுள்ளது. நான் ஒரு பக்கம் ஓரமாக நின்றுக்கொண்டு இருந்தேன். அப்பொழுது எம்.பி. ராகுல் காந்தி என்னை தள்ளி விட்டார். நான் தரையில் விழுந்து காயம் அடைந்தேன் என்று பாஜக எம்.பி. பிரதாப் சாரங்கி கூறியுள்ளார். VIDEO | BJP MP Pratap Sarangi reportedly sustains injury during INDIA bloc's protest inside Parliament premises. #ParliamentWinterSession2024 (Full video available on PTI Videos - ) pic.twitter.com/koaphQ9nqz — Press Trust of India (@PTI_News) December 19, 2024 விசாரணை நடத்த கோரிக்கை இந்த சம்பவத்தை அடுத்து, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து பாஜக எம்பி பிரதாப் சாரங்கி காயமடைந்ததாகக் கூறப்படும் விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. பாஜக எம்பிக்கள் குறித்து புகார் ராகுல் காந்திக்கு எதிராக பாஜக எம்பிக்கள் நடத்திய "அடக்கமற்ற" நடத்தை குறித்து காங்கிரஸ் எம்பிக்கள் சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் புகார் அளிப்பார்கள் என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க - அம்பேத்கர் குறித்த சர்ச்சை! முடங்கிய அவை.. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் மேலும் படிக்க - அம்பேத்கரை அவமதித்தாரா அமித் ஷா? பதவி விலக கோரிக்கை... அப்படி என்ன பேசினார் அவர்...? மேலும் படிக்க - ஒரே நாடு ஒரே தேர்தல் நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் இடம்பெற்ற முக்கிய எம்.பி.க்கள் லிஸ்ட் சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.