TAMIL

வார ராசிபலன்: 2024-ன் கடைசி வாரத்தில் 4 ராசிகளுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம்!! யாருக்கு?

Weekly Horoscope December 23rd To 29th : மேஷம் முதல் மீனம் வரை இருக்கும் 12 ராசிகளுள், அனைத்திற்கும் அதற்கு ஏற்றவாறான பலன்கள் அமையும். அந்த வகையில், இந்த வாரம் உங்கள் ராசிக்கான பலன்கள் என்னென்ன என்பதை இங்கு பார்க்கலாம் வாங்க. மேஷம்: மேஷ ராசியை சேர்ந்தவர்களுக்கு இந்த வாரம் சவாலான வாரமாக இருக்கலாம். தனிப்பட்ட வாழ்க்கையிலும், தொழில் ரீதியான வாழ்விலும் நீங்கள் எடுக்கும் முடிவுகள் தெளிவானதாக இருக்க வேண்டும். பெரிய இடங்களில் இருந்து வரும் சில தொடர்புகள் உங்களை வளர வைக்க உதவும். இதுவரை நீங்கள் செய்ய நினைத்த சில விஷயங்கள் தள்ளி போயிருக்கலாம். அது இந்த வாரத்தில் நடந்து முடியலாம். ரிஷபம்: இந்த வாரம் உங்களுக்கு சவாலான சில வேலைகள் வரலாம். அவற்றை செய்து முடிக்க உங்களுக்கு அதிக கவனம் தேவைப்படும். உங்கள் பொறுமை மற்றும் சோதனை காலத்திற்கான தகுந்த பிரதி பலனை இந்த வாரத்தில் அடைவீர்கள். உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டியது நல்லது. மிதுனம்: எங்கு சென்றாலும் அதற்கு ஏற்றவாறு உங்களை மாற்றிக் கொள்வீர்கள். எதிர்பாராத திருப்பங்கள் ஏற்பட்டாலும் அதற்கு தகுந்தார் போல் முடிவெடுப்பீர்கள். எந்த வாய்ப்பு வந்தாலும் அதை திறந்த மனதுடன் பயன்படுத்திக் கொள்வீர்கள். உங்களுக்கும் உங்கள் துணைக்குமான நெருக்கம் அதிகரிக்கும். செலவு செய்யும்போது கவனம் அவசியம். கடகம்: பல நாட்களாக வராமல் இருந்த கடன் தொகை அடுத்த வாரத்தில் உங்கள் கையில் வந்து சேரலாம். உடல் நலனையும் மனநலனையும் காத்துக் கொள்ள வேண்டியது அவசியம். எப்போதோ செய்த முதலீட்டினால் அடுத்த வாரம் லாபம் கிடைக்கலாம். திடீர் பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. சிம்மம்: உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் பல நாட்களாக செய்ய நினைத்த விஷயத்தை அடுத்த வாரம் செய்து முடிப்பீர்கள். நீங்கள் சாதிக்க நினைக்கும் துறையில் கைதேர்ந்த ஆசிரியர்கள் வழி நடத்துவர். காதல் உறவில் கவனத்துடன் பேச வேண்டியது நல்லது. கன்னி: குடும்பத்தில் சில சச்சரவுகள் உண்டாக்கலாம். இந்த பிரச்சினையாக இருந்தாலும் அதற்கு சரியான கவனம் கொடுக்க வேண்டியது நல்லது. வேலை செய்யும் இடத்தில் உங்களது பேச்சை பலர் மதிப்பு கொடுத்து கேட்பர். தீறாமல் இருந்த கடன் தொகையை இந்த வாரம் திருப்பிக் கொடுக்க வாய்ப்புள்ளது. செரிமான பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதால் சாப்பிடும் விஷயத்தில் கவனம் அவசியம். துலாம்: அடுத்த வாரம் உங்கள் மனதில் நீண்ட நாட்களாக இருக்கும் குழப்பம் அகல வாய்புள்ளது. துண்டிக்கப்பட்ட சில உறவுகள் நீங்கள் மனம் விட்டு பேசுவதால் மீண்டும் வந்து சேரலாம். வேலை செய்யும் இடத்தில் பார்த்து பேசவும். சொந்த தொழில் செய்பவர்கள் நல்ல லாபத்தை அடுத்த வாரத்தில் எதிர்பார்க்கலாம். மேலும் படிக்க | நன்றாக காதலிக்க தெரிந்த 5 ராசிகள்! எந்தெந்த ராசிக்காரர்கள் தெரியுமா? விருச்சிகம்: தீர்க்கப்படாமல் இருந்த ஒரு பிரச்சனைக்கு அடுத்த வாரம் நீங்கள் தீர்வு காண வாய்ப்புள்ளது. பல நாட்களாக தவிர்த்து வந்த வேலையை ஒருவழியாக செய்து முடிப்பீர்கள். எதிர்பாராமல் கிடக்கும் ஆதரவுகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். நீங்கள் புதிதாக தொடங்கியிருக்கும் நிலையில் நம்ம முன்னோற்றும் காணலாம். உங்கள் கைக்கு வராமல் நிலுவையில் இருந்த சொத்துக்கள் இப்போது கைக்கு வர வாய்ப்புள்ளது. தனுசு: உங்கள் திறன்களை சோதிக்கும் சில விஷயங்கள் அடுத்த வாரத்தில் நடைபெறலாம். மனம் தளராமல் நீங்கள் செய்யும் வேலையை தொடர்ந்து செய்து கொண்டே இருக்கவும். திடீர் பயணங்களால் ஏற்படும் சந்திப்புகள் உங்கள் வாரத்தை மகிழ்ச்சியாகும். உடலையும் மனதையும் மிகவும் வருத்திக் கொள்ளாமல் ஓய்வு தேவைப்படும் போது ஓய்வெடுப்பதே நல்லது. மகரம்: அடுத்த வாரம் நீங்கள் கலந்து கொள்ள ஏதேனும் ஒரு நிகழ்ச்சியால் உங்களுக்கு புதிய கதவுகள் திறக்கலாம். அது உங்கள் தனிப்பட்ட அல்லது தொழில் வாழ்க்கையை மேம்படுத்தும். ஏதேனும் விஷயத்திற்கு தலைமை தாங்கும் வாய்ப்பு வந்து சேரலாம். கலைத்துறையில் இருப்பவர்கள் தங்களின் திறமையை நிரூபிக்க சில வாய்ப்புகளை பெறலாம். கும்பம்: பழைய நண்பர்களை சந்திக்க வாய்ப்புள்ளது.‌ இதனால் உங்கள் மகிழ்ச்சி இரட்டிப்பாகலாம். இந்த வாரம் நீங்கள் குழுவுடன் செயல்பட்டு பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கலாம். புது வேலை வாய்ப்புகள் மற்றும் புதிய வரவுகள் உங்கள் வாழ்க்கைக்குள் வரலாம். தியானம் மற்றும் யோகா உள்ளிட்டவற்றை செய்து மனதை பார்த்துக் கொள்ளவும். மீனம்: அடுத்த வாரம் நீங்கள் உங்கள் மனது சொல்வதைக் கேட்டு நடக்க வேண்டும். தனிப்பட்ட விஷயங்கள் குறித்து முடிவெடுக்கும் போது யாரிடமும் கலந்தாலோசிக்க வேண்டாம். எந்த நேரத்திலும் உங்கள்‌ தூக்கத்தை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க வேண்டாம். சிங்கிளாக இருப்பவர்கள் அடுத்த வாரம் தங்கள் மனதிற்கு பிடித்தவாறு இருப்பவரை பார்க்க. பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை. மேலும் படிக்க | மனைவியை ராணி பாேல் பார்த்துக்கொள்ளும் 5 ராசிக்காரர்கள்! யார் யார் தெரியுமா? சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.