TAMIL

பொள்ளாச்சி பாலியல் வழக்கின் போது அதிமுக என்ன செய்தது? திமுக அமைச்சர் கேள்வி!

சென்னை கிண்டியில் அமைந்துள்ள கத்திபாரா விளையாட்டு சதுக்கம் (urban square) பகுதியில் தமிழ்நாடு கைத்தறி தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் காந்தி சில்ப் பஜார் என்ற பெயரில் கைவினைப் பொருட்கள் மற்றும் கைத்தறி துணிகள் பிரத்யேக கண்காட்சி மற்றும் விற்பனை நிகழ்ச்சி தொடக்க விழா நடைபெற்றது. இந்த கண்காட்சியின் தொடக்க விழா நிகழ்ச்சியினை குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா மோ அன்பரசன் துவக்கி வைத்தார். இன்று முதல் 12ம் தேதி வரை 9 நாட்களுக்கு நடைபெறும் இந்த கைவினைப் பொருட்கள் கண்காட்சியில் பல்வேறு இடங்களில் இருந்து வடவலைக்கப்பட்ட 70 கைவினை கலைஞர்கள் அவர்களது பாரம்பரியமிக்க கைத்தறி பொருட்கள் மற்றும் கைத்தறி துணி வகைகள் போன்றவற்றை பார்வைக்கும் விற்பனைக்கும் வைத்துள்ளனர். மேலும் படிக்க | புதிய ரேஷன் கார்டு : இனி சீக்கிரம் கிடைக்கும்... தமிழ்நாடு அரசு வெளியிட்ட குட் நியூஸ்..! கண்காட்சியில் மக்கள் பார்வையிட அனுமதி இலவசம் ஒன்பது நாட்களுக்கு தினசரி காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை கண்காட்சி இயங்கும். இக்கண்காட்சியில் பஞ்சலோக சிலைகள், கற்சிற்பங்கள், மரச் சிற்பங்கள், பித்தளை விளக்குகள், தஞ்சாவூர் ஓவியங்கள், காகித கூழ் பொருட்கள், நூல் தையல் வேலைகள், தேங்காய் ஓடு கலைப் பொருட்கள், ஓவியங்கள், இயற்கை நார் பொருட்கள் மற்றும் பல வகையான கைவினைப் பொருட்கள் காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளது. தொடக்க விழா நிகழ்ச்சியை தொடர்ந்து சிறு குறி தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா மோ அன்பரசன் செய்தியாளர்கள் சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், "சென்னை கிண்டி கத்திப்பாரா விளையாட்டு சதுக்கத்தில் பூம்புகார் நிலையத்தின் மூலமாக கைவினை பொருட்கள் மற்றும் கைத்தறி துணிகள் கண்காட்சி இன்றைய முதல் வருகின்ற 17 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தொடக்க விழா நிகழ்ச்சி இன்றைய தினம் நடைபெற்றது, இந்த கண்காட்சியில் கைவினை கவிஞர்கள் செய்கிற பொருட்களுக்கு மக்களிடம் நல்ல விலை கிடைக்க வேண்டும் எனவும் நமது நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்கள் சந்தைப்படுத்த வேண்டும் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த கண்காட்சியில் 70க்கும் மேற்பட்ட கவிஞர்கள் தயாரித்துள்ள கைவினைப் பொருட்கள் மற்றும் கைத்தறி துணிகள் காடையலிக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில் சிலைகள் ஓவியங்கள் கைத்தறி துணி வகைகள் காட்சியலிக்கப்பட்டுள்ளது. பொங்கல் திருவிழாவை ஒட்டி ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் நபர்கள் இந்த கண்காட்சிக்கு வருகை அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டு பொங்கல் திருவிழாவினை தொடர்ந்து இந்த கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. பூம்புகார் நிலையத்தின் சார்பில் ஏழு இடங்களில் உற்பத்தி நிலையங்கள் மற்றும் 21 இடங்களில் விற்பனை நிலையங்கள் கொண்டுள்ளது. திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்த மூன்று வருடங்களில் 136 கோடியே 8 லட்சம் ரூபாய் மதிப்பிற்கு கலைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 48 கோடியே 36 லட்சம் ரூபாய் மதிப்பிற்கு கைவினை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மூன்று கோடியே 97 லட்சம் ரூபாய்க்கு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை சௌமியா அன்புமணி கூறிய கருத்து தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு அமைச்சர் பதில், எதிர்கட்சி என்றாலே அப்படி தான் கூறுவார்கள். அண்ணா பல்கலைகழகம் விவகாரத்துக்கு திராவிட மாடல அரசு 2 மணி நேரத்திலேயே பிரச்சினையை கண்டுபிடித்து சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்தது. கடந்த ஆட்சியில் பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக நாங்களும் போராட்டம் நடத்திய பொழுதும் எதிர்க்கட்சியினர் எந்தவிதமான நடவடிக்கை எடுக்கவில்லை, இந்தியாவில் பெண்களுக்கு மிக பாதுகாப்பான மாநிலமாக திகழ்வது தமிழ்நாடு மட்டும்தான். எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் வழக்கினை நாங்கள் சிபிஐக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று மேல்முறையீடு செய்த பொழுது அவர் ஏன் நீதிமன்றத்திற்கு சென்று சிபிஐ விசாரணைக்கு தடை கேட்டார்?" என்று கூறினார். மேலும் படிக்க - Pongal Bonus | அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவித்த முதலமைச்சர்.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.