TAMIL

முதலிரவில் அதிர்ச்சி... மனைவி கேட்ட அந்த விஷயம்... ஷாக்கான கணவன் போலீஸில் புகார்

Uttar Pradesh Bizarre Incident: புதுமண தம்பதிக்கு திருமணத்திற்கு பின்னான முதலிரவு என்பது மிக முக்கியமானது. பெரும்பாலும் வீட்டில் நிச்சயிக்கப்படும் திருமணங்களில் தம்பதிகள் ஒருவருக்கொருவர் நல்ல புரிதலுக்கு வர இந்த முதலிரவு மிகவும் முக்கியம் எனலாம். தம்பதிகள் மனசுவிட்டு பேசவும், திருமணத்திற்கு பின் தனிமையில் பேசவும் இதுதான் அவர்களுக்கு சிறந்த சந்தர்ப்பமாகவும் இருக்கும். முதலிரவில் ஒருவரின் பேச்சும், நடத்தையும்தான் அவர்களின் நீண்ட கால திருமண வாழ்க்கைக்கு பலமான அஸ்திவாரமாக அமையும். அதுவும் பெரும்பாலும் முதலிரவில் கணவர்கள் தங்களது மனைவிமார்களிடம் என்ன பரிசு வேண்டும் என கேட்டால் பெரும்பாலும் சேலை வேண்டும், மொபைல் வேண்டும், நகை அல்லது தனக்கு விருப்பமான ஏதாவது ஒன்றைக் கேட்பதுதான் வழக்கமானதாக இருக்கும். ஆனால் உத்தரபிரதேசம் மாநிலம் சஹாரன்பூர் மாவட்டத்தில் முதலிரவில் கணவரிடம் மனைவி கேட்ட பரிசுகளை அவரை திக்குமுக்காட வைத்துள்ளது எனலாம். அதிர்ச்சியான கணவன் திருமணமான உற்சாகத்தில் இருந்த கணவன், அவனது முதலிரவில் முக்காடு போட்டு அமர்ந்திருந்த மணமகளிடம் என்ன வேண்டும் என கேட்க, அதற்கு அவர் கஞ்சாவும், பீரும் வேண்டும் என கேட்டது அவருக்கு இருந்த மொத்த உற்சாகமும் அப்படியே வடிந்துவிட்டது. இதனால் நள்ளிரவிலேயே மனமுடைந்த கணவன், உடனே தனது குடும்பத்தினரிடம் சென்று அனைத்து விஷயங்களையும் கூறியுள்ளார். மணமகனை போன்று குடும்பத்தினரும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். மேலும் படிக்க | நாட்டையே உலுக்கிய பிபின் ராவத் மரணம்... மனித தவறால் ஏற்பட்ட விபத்து - ஷாக் ரிப்போர்ட் இதுகுறித்து குடும்பத்தினர் காவல் நிலையத்தில் மணமகள் குறித்து புகார் அளித்தனர். பீர், கஞ்சா, இறைச்சி சாப்பிடும் பெண்ணுடன் தனக்கு வாழ விரும்பவில்லை என மணமகன் போலீசாரிடம் அளித்த புகாரில் தெரிவித்துள்ளார். மணமகன் சொன்னதை கேட்டு போலீசாரும் அதிர்ச்சி அடைந்தனர். அடுத்தடுத்து குற்றச்சாட்டு தற்போது, ​​திருமணம் முறிந்து விடக்கூடாது என்பதற்காக, காவல் நிலையத்தில் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர். இந்த வழக்கு சஹாரன்பூர் டிபி நகர் பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் விசாரணையில் உள்ளது. முதலிரவில் மணப்பெண்ணுக்கு பீர் கொண்டு வர முதலில் சம்மதித்ததாக கூறிய மணமகன், ஆனால் தொடர்ந்து மணமகள் கஞ்சா மற்றும் இறைச்சி ஆகியவற்றை கேட்டபோது தனக்கு அதிர்ச்சி ஏற்பட்டதாகவும் கூறினார். மேலும், இதுகுறித்து தனது குடும்ப உறுப்பினர்களிடம் தெரிவித்ததாக மணமகன் காவல்துறையிடம் தெரிவித்தார். எனினும், மணப்பெண் கணவர் மற்றும் அவரது வீட்டார் வைத்த குற்றச்சாட்டை போலீசாரிடம் மறுத்ததாக கூறப்படுகிறது. இரு தரப்பினரும் காவல்நிலையத்தில் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டினர், ஆனால் பெண் தனது கணவரிடம் சில கோரிக்கைகளை வைத்ததாக மணமகள் தரப்பு கூறியுள்ளது. மேலும், மணப்பெண் மூன்றாம் பாலினத்தவர் என்றும் மணமகன் தரப்பு குற்றம் சாட்டியுள்ளது. இந்த விவகாரத்தின் தீவிரத்தை கண்ட போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். மேலும் படிக்க | தேங்காய் எண்ணெய்... குக்கிங் ஆயிலா அல்லது ஹேர் ஆயிலா... 15 வருட வழக்கை முடித்து வைத்த உச்சநீதிமன்றம் சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.