இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் தொடரின் கடைசி மற்றும் ஐந்தாவது டெஸ்ட் போட்டி நாளை சிட்னியில் நடைபெற உள்ளது. தற்போது இந்த தொடர் 1-2 என்ற நிலையில் உள்ளது. இந்திய அணி ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றால் பார்டர் கவாஸ்கர் கோப்பையை தங்கள் வசம் வைத்துக் கொள்ளலாம். மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்வதற்கு சிறிய வாய்ப்பு உள்ளது. மறுபுறம் தோல்வியடைந்தால் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு பார்டர் கவாஸ்கர் கோப்பையை இழக்க நேரிடும், மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் கனமும் சரிந்து விடும். மேலும் படிக்க | இந்திய அணிக்குள் பெரும் பஞ்சாயத்து... டிரெஸ்ஸிங் ரூம் தகவல்களை வெளியே சொல்வது யார்? இப்படி ஒரு இக்கட்டான நிலையில் தற்போது இந்திய அணி உள்ளது. இதற்கு அணியில் உள்ள சீனியர் வீரர்களின் பேட்டிங்தான் முக்கிய காரணம். குறிப்பாக கேப்டன் ரோஹித் சர்மா இந்த தொடர் முழுவதும் ரன்கள் அடிக்க மிகவும் சிரமப்பட்டு வருகிறார். இந்த தொடரில் இதுவரை மொத்தமாக 31 ரன்கள் மட்டுமே ரோகித் சர்மா அடித்துள்ளார். இதனால் ஐந்தாவது போட்டியில் இருந்து அவருக்கு ஓய்வு வழங்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த இந்தியாவின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஆடுகளம் மற்றும் நிலைமையை பொருத்து ரோகித் சர்மாவின் தேர்வு இருக்கும் என்று தெரிவித்தார். Rohit Sharma not part of the potentially new-look slip cordon. With Kohli at first, KL at second and Reddy at third. While Shubman Gill was taking catches at slip for a spinner. The massive intrigue of Indian cricket #AusvInd pic.twitter.com/aynUip01Om — Bharat Sundaresan (@beastieboy07) January 2, 2025 இது தற்போது பெரிய சர்ச்சையாக மாறி உள்ளது. கேப்டனையே நீக்கும் அளவிற்கு பிசிசிஐ தயாராக உள்ளது என்பது கவுதம் கம்பீரின் இந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிய வந்துள்ளது. ஒருவேளை ரோகித் சர்மா நீக்கப்பட்டால் சுப்மான் கில் அவருக்கு பதில் இடம் பெறலாம். இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்டில் சுமாரான பேட்டிங் செய்த சுப்மான் கில் நான்காவது டெஸ்ட் நீக்கப்பட்டார். அவருக்கு பதில் கேஎல் ராகுல் 3வது இடத்தில் பேட்டிங் செய்தார். இன்று இந்திய அணியின் பயிற்சி அமர்விலும் கேப்டன் ரோகித் சர்மா பங்கேற்கவில்லை. ஜெய்ஸ்வால், விராட் கோலி, கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா, ஷுப்மான் கில், துருவ் ஜூரல் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் பேட்டிங் பயிற்சி செய்தனர். ரோகித் சர்மா நீக்கப்படும் பட்சத்தில் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா அணிக்கு கேப்டனாக நியமிக்கப்படலாம். இந்த தொடரின் முதல் டெஸ்டில் பும்ராவின் தலைமையில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்றில் வெற்றியை பதிவு செய்து இருந்தது. மேலும் படிக்க | நிதிஷ் ரெட்டியை போட்டுத்தாக்க... உள்ளே வரும் இந்த வீரர் - இந்திய அணிக்கு மேலும் தலைவலி! சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None
Popular Tags:
Share This Post:
What’s New
Spotlight
Today’s Hot
தங்கையை திருமணம் செய்து கொண்ட அண்ணன்? வைரலான வீடியோவால பரபரப்பு!
- By Sarkai Info
- January 6, 2025
Featured News
வாழ்வில் வெற்றி பெற..ஏ.ஆர்.ரஹ்மானிடம் இருந்து கற்க வேண்டிய பாடங்கள்!
- By Sarkai Info
- January 6, 2025
Latest From This Week
சென்னையில் HMPV வைரஸ்... 2 குழந்தைகளுக்கு பாதிப்பு... மக்களே ஜாக்கிரதை!
TAMIL
- by Sarkai Info
- January 6, 2025
ரியல்மி 14 ப்ரோ சீரிஸ் அறிமுகம்... விலை.... சிறப்பு அம்சங்கள் உள்ளிட்ட விபரங்கள்
TAMIL
- by Sarkai Info
- January 6, 2025
வலது கையில் ஏன் நகம் வளர்க்க கூடாது? ‘இந்த’ 7 பிரச்சனைகள் வரும்..
TAMIL
- by Sarkai Info
- January 6, 2025
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.