TAMIL

எங்கள் விமானிகளுக்கு இந்திய விமானங்களை இயக்கும் திறன் இல்லை... ஒப்புக் கொண்ட மாலத்தீவு!

மாலத்தீவின் மொஹமத் முய்ஸு (Maldives President Mohamed Muizzu ) தலைமையிலான சீன சார்பு அரசு, இந்தியாவுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வருவதால், இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையே கடந்த சில காலமாக மோதல் போக்கு நிலவி வருவது அனைவரும் அறிந்த விஷயம் தான். இந்நிலையில், மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவம் முழுமையாக வெளியேற வேண்டும் என்பதை அந்நாட்டின் அதிபர் முய்சு தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இந்நிலையில், மாலத்தீவில் இருந்த அனைத்து இந்திய ராணுவத்தினரும் சமீபத்தில் வெளியேறி விட்டனர். இது தொடர்பாக விளக்கம் அளிக்க மாலத்தீவின் பாதுகாப்பு அமைச்சர் காசன் மௌமூன் இந்தியா வழங்கிய விமானங்களை இயக்கும் திறன் மாலத்தீவு ( Maldives ) ராணுவத்திடம் இல்லை என்பதை ஒப்புக் கொண்டார். மாலத்தீவு பாதுகாப்பு அமைச்சர் மேலும் கூறுகையில், 'பல கட்டங்களைக் கடக்க வேண்டிய பயிற்சியாக இருந்ததால், பல்வேறு காரணங்களால் எங்களது ராணுவ வீரர்களால் பயிற்சியை முடிக்க முடியவில்லை. எனவே, தற்போது நமது ராணுவத்தில் HAL விமானம் மற்றும் டோர்னியர் விமானத்தை (Dornier Aircraft) ஓட்ட உரிமம் பெற்ற அல்லது முழுமையாக பறக்கும் திறன் கொண்ட ராணுவ வீரர் இல்லை என்றார். இருப்பினும், முய்ஸூ எதிர்க்கட்சியாக இருந்தபோது, ​​அவரது கட்சியின் மூத்த அதிகாரிகள் முந்தைய அரசாங்கத்தை விமர்சித்து, மாலத்தீவு இராணுவத்தில் திறமையான விமானிகள் இருப்பதாகவும், ஆனால் விமானங்களை ஓட்டுவதற்கு இந்திய வீரர்கள் பணியமர்த்தப்பட்டதாகவும் கூறி வந்தனர். ஆனால் தற்போது முய்சு அரசாங்கத்தின் அமைச்சரே இந்த விஷயத்தை அம்பலப்படுத்தியுள்ளார். மௌமூனின் கருத்துக்கு ஒரு நாள் முன்பு, மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் மூசா ஜமீர், 76 இந்திய வீரர்கள் மாலத்தீவினை விட்டு வெளியேறிய நிலையில், அவர்களுக்குப் பதிலாக ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் அனுப்பிய தொழில்நுட்ப வல்லுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார். மாலத்தீவுக்கு இந்தியா அனுப்பிய ஹெலிகாப்டர்களை ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் தயாரித்திருந்தது குறிப்பிடட்தக்கது. மேலும் படிக்க | மாலத்தீவுக்கு சுற்றுலா வாங்க... இந்தியர்களிடம் கெஞ்சும் மாலத்தீவு அமைச்சர்! மாலத்தீவுக்கு இந்திய வீரர்கள் செல்வதற்கு முக்கிய காரணம், இந்தியா கொடுத்த விமானங்களை இயக்குவதற்கு அங்குள்ள ராணுவத்துக்கு பயிற்சி அளிக்கத் தான். மாலத்தீவின் முன்னாள் அதிபர்கள் முகமது நஷீத் மற்றும் அப்துல்லா யாமீன் ஆட்சியின் போது இந்தியா இரண்டு ஹெச்ஏஎல் ஹெலிகாப்டர்களை மாலத்தீவுக்கு வழங்கியது. அதே நேரத்தில், முன்னாள் ஜனாதிபதி இப்ராஹிம் சோலியின் அரசாங்கத்தின் போது, ​​இந்தியாவில் இருந்து டோர்னியர் விமானம் மாலத்தீவுக்கு கொடுக்கப்பட்டது. இந்தியாவுடனான சமீபத்திய ஒப்பந்தத்தில், ராணுவ வீரர்களுக்கு பதிலாக விமானங்களை இயக்க தொழில்நுட்ப வல்லுனர்களை வைத்து, மாலத்தீவு ராணுவ வீரர்களுக்கு பயிற்சியும் உள்ளதாக மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் ஜமீன் தெரிவித்துள்ளார். இந்த விமானங்கள் மாலத்தீவில் மனிதாபிமான பணி மற்றும் அவசர மருத்துவ சூழ்நிலைகளில் பயன்படுத்தப்படுகின்றன. மாலத்தீவில் 89 இந்திய வீரர்கள் இருந்த நிலையில், மே 10 அன்று, இந்தியப் படைகள் மாலத்தீவில் இருந்து திரும்பியதையும், அவர்களுக்குப் பதிலாக தொழில்நுட்ப வல்லுநர்கள் நியமிக்கப்பட்டதையும் வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியது. சீனாவுக்கு ஆதரவாகக் கருதப்படும் அதிபர் முய்ஸு, ஆட்சிக்கு வந்தவுடன் இந்தியா தனது ராணுவத்தை வாபஸ் பெறுமாறு கேட்டுக் கொண்டார். கடந்த ஆண்டு நவம்பரில் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போது, ​​தீவு நாட்டிலிருந்து இந்திய துருப்புக்கள் திருப்பி அனுப்பப்படும் என்று மக்களுக்கு உறுதியளித்திருந்த நிலையில், அதனை நிறைவேற்றியுள்ளார். ஆனால், ராணுவ வீரர்களுக்குப் பதிலாக தொழில்நுட்ப நிபுணர்களை மாலத்தீவுக்கு அனுப்பியதன் மூலம் இந்தியா ராஜதந்திர வெற்றியைப் பெற்றுள்ளது என்கின்றனர் அரசியல் வல்லுநர்கள். மேலும் படிக்க | மாலத்தீவு நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் முகம்மது முய்சுவின் கட்சி அமோக வெற்றி..!! சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.