TAMIL

நடிகர் சித்திக் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்! பிரபல நடிகை குற்றச்சாட்டு!

சமீபத்தில் கேரள திரையுலகை பற்றிய செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஹேமா கமிட்டி அறிக்கையில், கேரள திரையுலகில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், ஒரு சிலரின் கட்டுப்பாட்டில் தான் கேரளா திரையுலகம் இயங்குகிறது என்றும், வாய்ப்பு வேண்டும் என்றால் அட்ஜஸ்ட்மென்ட்க்கு தயாராக இருக்க நடிகைகளை கட்டாயப்படுத்துவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. மிகவும் அமைதியாக இயங்கும் மலையாள திரையுலகில் இப்படியெல்லாம் நடக்கிறதா என்றும் பலரும் அதிர்ச்சியடைந்தனர். இந்த அறிக்கை வெளியான பிறகு பல நடிகர்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் நடிகர், இயக்குனர் மற்றும் கேரள மாநில சலசித்ரா அகாடமி தலைவருமான ரஞ்சித் பாலியல் முறைகேடு புகார்களில் சிக்கியதை அடுத்து, அம்மாநில பொதுச் செயலாளர் சித்திக் மீதும் பரபரப்பு குற்றசாட்டு எழுந்துள்ளது. மேலும் படிக்க | வாழைத்தாரின் வாழ்வை கூறிய வாழை படம்! திரை விமர்சனம்... கேரளாவின் நட்சத்திர அமைப்பான அம்மாவின் பொதுச் செயலாளர் நடிகர் சித்திக் மீது நடிகையும் மாடலுமான ரேவதி பாலியல் புகாரை வைத்துள்ளார். 2019ம் ஆண்டு நடிகையை தாக்கிய வழக்கில் திலீப் கைது செய்யப்பட்டது தொடர்பாக சித்திக் மற்றும் கேபிஏசி லலிதா பேசிய செய்தியாளர் சந்திப்பின் காணொளியை மீண்டும் பகிர்ந்து நடிகை ரேவதி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். சித்திக் மீதான குற்றங்களை பற்றி ரேவதி கூறுகையில், "நடிகர் சித்திக் அவரது மகன் நடிக்கும் தமிழ் படத்தில் தனக்கு வாய்ப்பு தருவதாக கூறினார். இது தொடர்பான என்னிடம் பேசி வந்தார். சித்திக் நடிப்பில் வெளியான ‘சுகமாரியாதே’ படத்தின் முன்னோட்டம் நடைபெற்றது. அது முடிந்ததும் என்னை திருவனந்தபுரத்தில் உள்ள மஸ்கட் ஹோட்டலுக்கு வரச் சொன்னார்கள். அங்கு சித்திக் என்னிடம் அட்ஜஸ்ட் பண்ண தயாரா என்று நேரடியாக கேட்டார். அப்போது எனக்கு 21 வயது என்பதால் இந்த வார்த்தைக்கான அர்த்தம் எனக்கு புரியவில்லை. நான் அவரிடம் இதற்க்கு என்ன அர்த்தம் என்று கேட்டேன். பிறகு நடிகர் சித்திக் நீண்ட நகங்களை கொண்ட பெண்களை எனக்கு பிடிக்கும் என்று என்னிடம் தவறாக நடிக்க முயற்சித்தார். என்னை ஒரு மணி நேரம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினார். இந்த விஷயத்தை வெளியில் சொன்னால் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் சித்திக் அப்போது கூறினார். உன்னால் என்னை எதுவும் செய்ய முடியாது என்று திமிராகவும் பேசினார். சித்திக் மற்றும் லலிதா திலீப்புக்கு ஆதரவாகவும், விமன் இன் சினிமா கலெக்டிவ்க்கு எதிராகவும் பேசும் வீடியோவை 2019ல் பகிர்ந்து எதிர்ப்பு தெரிவித்து இருந்தேன். இனி அமைதியாக இருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. என்னைப் போன்ற பெண்களுக்கு விமன் இன் சினிமா மிகவும் ஆதரவாக உள்ளது. இது குறித்து எனது குடும்பத்தினரிடம் சொன்னேன், அவர்கள் எனக்கு ஆதரவாக நின்றார்கள். எனக்கு திரையுலகை சிறிது தெரிந்தும் எதுவும் செய்ய முடியவில்லை என்றால், மற்ற பெண்களின் நிலையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. சித்திக்குக்கு ஒரு மகள் இருக்கிறார். அவரது மகளுக்கும் இதே போன்ற சம்பவம் ஏற்பட்டால் சும்மா இருப்பாரா? திரையுலகில் இப்படி முகமூடி அணிந்து திரியும் நபர்களை பற்றி நினைக்கும் போது ​​நான் வெட்கப்படுகிறேன்" என்று ரேவதி சம்பத் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க | மிரள வைத்த Climax! கொஞ்சம் கூட எதிர்பார்க்கல..கொட்டுக்காளி விமர்சனம் சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.