TAMIL

செயற்கை கோள்களின் ‘கல்லறை’... காலவதியான செயற்கை கோள்கள் எவ்வாறு அழிக்கப்படுகின்றன..!!

பூமியின் வெவ்வேறு சுற்றுப்பாதைகளில் சுமார் 10 ஆயிரம் செயற்கைக்கோள்கள் செயல்படுகின்றன. அனைத்து செயற்கைக்கோள்களும் ஒரு நாள் அல்லது மற்றொரு நாள், குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு வேலை செய்வதை நிறுத்திவிடும். செயலில் உள்ள செயற்கைக்கோள்கள் உலவும் இடத்தில், செயலற்ற செயற்கைக்கோள்களினால் ஒரு பலனும் இல்லை என்பதோடு, ஒன்றோடு ஒன்று மோதும் அபாயமும் உள்ளதால், பழைய செயற்கைக்கோள்கள் அப்புறப்படுத்தப்படுகின்றன. பழைய செயற்கைக்கோள்களை அப்புறப்படுத்த இரண்டு வழிகள் உள்ளன. பூமியின் மேற்பரப்பில் இருந்து செயற்கைக்கோள்கள் எந்த உயரத்தில் உள்ளன என்பதைப் பொறுத்து அதனை அப்புறப்படுத்தும் முறை செயல்படுத்தப்படும். பூமியில் இருந்து குறைவான தொலைவில் உள்ள செயல்படாத செயற்கைக்கோள்களின் வேகம் குறைக்கப்படுவதன் மூலம் செயற்க்கை கோள்கள் அப்புறப்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக, அவை படிப்படியாக சுற்றுப்பாதையில் இருந்து விழுந்து வளிமண்டலத்தில் எரிகின்றன. பூமியில் இருந்து வெகு தொலைவில் சுற்றுப்பாதையில் செயற்கைக்கோள்களின் வேகத்தை குறைப்பது சற்று நுட்பம் நிறைந்தது. இதற்கு அதிக எரிபொருளும் தேவை. பூமிக்கு வெகு தொலைவில் உள்ள செயற்கைக்கோள்களை பூமிக்கு திருப்பி அனுப்புவதை விட விண்வெளிக்கு ( Space ) அனுப்புவது மிகவும் சிக்கனமானது. அத்தகைய செயற்கைக்கோள்கள் 'கல்லறை சுற்றுப்பாதையில்' அனுப்பப்படுகின்றன. இந்த சுற்றுப்பாதை 22,400 மைல்கள் (36,049 கிலோமீட்டர்) மேலே உள்ளது. பூமிக்கு அருகில் உள்ள செயற்கைக்கோள்கள் நிலை பூமியில் இருந்து குறைந்த தொலையில் உள்ள சுற்றுப்பாதையில் இயங்கும் சிறிய செயற்கைக்கோள்களை அகற்றுவது எளிது. அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா இது குறித்து கூறுகையில், காற்று உராய்வால் உருவாகும் வெப்பம் செயற்கைக்கோளை எரிக்கப்படும் போது, அது மணிக்கு ஆயிரக்கணக்கான மைல் வேகத்தில் பூமியை நோக்கி விழுகிறது எனக் கூறியுள்ளது. பசிபிக் பெருங்கடலில் உள்ள 'விண்கல கல்லறை' விண்வெளி நிலையங்கள் மற்றும் பிற பெரிய செயற்கைக்கோள்கள் தரையை அடையும் முன் முழுமையாக அழிக்கப்படாமல் இருக்கலாம். அவை மக்கள் வாழும் இடத்தில் இருந்து விலகி, மனிதர்கள் இல்லாத இடத்தில் அப்புறப்படுத்தப்படுகின்றன. அந்த இடம் 'விண்கல கல்லறை' என்று அழைக்கப்படுகிறது. பூமியில், இந்த கல்லறை பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ளது, இது மனிதர்கள் வாழும் இடத்திற்கு வெகு தொலைவில் உள்ளது. மேலும் படிக்க | ஏலியன்கள் இருக்கிறார்களா... இல்லையா? - உண்மைகள் உடைக்கும் நாசாவின் அறிக்கை! பூமியைச் சுற்றி வரும் பெரும்பாலான செயற்கைக்கோள்கள் புவிசார் சுற்றுப்பாதையில் உள்ளன. இது ஜியோ என்றும் அழைக்கப்படுகிறது. இது பூமத்திய ரேகைக்கு மேலே 35,786 கிமீ (22,236 மைல்) உயரத்திலும், புவியின் மையத்திலிருந்து 42,164 கிமீ (26,199 மைல்) ஆரத்திலும், பூமியின் சுழற்சியின் திசையிலும் ஒரு வட்டப் பாதையைக் கொண்டுள்ளது. அதிக தொலைவில் அமைந்துள்ள அனைத்து பெரிய செயற்கைக்கோள்களும் 'கல்லறை சுற்றுப்பாதையில்' அனுப்பப்படுகின்றன. இது பூமியில் இருந்து 200 மைல்கள் தொலைவில் உள்ள செயலில் உள்ள செயற்கைக்கோள்களை விடவும், பூமியிலிருந்து 22,400 மைல் தொலைவில் உள்ளது. ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் (ESA) இது குறித்து கூறுகையில், 'மோதல் அபாயத்தை அகற்ற, செயற்கைக்கோள்கள் அவற்றின் பயணத்தின் முடிவில் புவிநிலை வளையத்திலிருந்து வெளியே நகர்த்தப்பட வேண்டும். அவற்றின் சுற்றுப்பாதையை சுமார் 300 கி.மீ வரை அதிகரிக்க வேண்டும். சுற்றுப்பாதையின் உயரத்தை 300 கி.மீ ஆக அதிகரிக்க தேவையான வேகத்தில் மாற்றம் 11 மீ/வி' என்றார். மேலும் படிக்க | நிலவில் ரயில் விட நாசா திட்டம்... ப்ளூ பிரிண்ட் ரெடி..!! சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.