TAMIL

58 வயதிலும் அழகான ஆண் மகனின் தோற்றம்! ஷாருக்கானின் Fitness சீக்ரெட்ஸ்!

Shah Rukh Khan Diet And Fitness Tips : இந்தி திரையுலகில் பிரபல நாயகனாக விளங்குபவர், ஷாருக்கான். 50களை கடந்தும் இன்னும் தனது உடலை ஃபிட்டாக வைத்திருக்கும் நடிகர்கள், வெகு சிலரே இருக்கின்றனர். யார், என்ன முயற்சி செய்தாலும் வயதாகும் போது அவர்களின் உடலும், முகமும் முதுமையை காட்டி விடும். ஆனால், ஷாருக்கானுக்கு இன்னும் அவர் உடற்பயிற்சி செய்து உருவாக்கிய சிக்ஸ் பேக்கும் கட்டுமஸ்தான உடலும் அப்படியே இருக்கின்றது. இதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன? டயட்: நடிகர் ஷாருக்கான் , பிற நடிகர்கள் போல அல்லாமல் மிகவும் சிம்பிளான டயட்டையே ஃபாலோ செய்கிறாராம். இது குறித்து ஒரு நேர்காணலில் பேசியிருக்கும் அவர், தான் ஒரு நாளைக்கு 2 வேளைகள் சாப்பிடுவதாகவும் இடையில் எந்த விதமான ஸ்நாக்ஸையும் எடுத்துக்கொள்வதில்லை என்றும் கூறியிருக்கிறார். சாதாரண வீட்டு சாப்பாட்டை மட்டும் சாப்பிடும் அவர், புரதம் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வாராம். இது அவருக்கு அதிகமாக பசி ஏற்படாமல் தடுக்குமாம். தினசரி நடைமுறை: ஷாருக்கானின் ஃபிட்னஸிற்கு இன்னொரு காரணம், அவரதி தினசரி பழக்க வழக்கங்களாகும். தினமும் தனது டயட்டிற்கும் உடற்பயிற்சிகளுக்கும் விடை கொடுக்கமாட்டாராம். தன் உடலுக்கு தேவையான உடற்பயிற்சிகளை எவ்வளவு நேரம் எடுத்துக்கொண்டாலும் செய்து முடிப்பாராம். நீர்ச்சத்து: ஷாருக்கான், உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்வதற்கு உடலில் நீர்ச்சத்து இருப்பது அவசியம் என்று கருதுகிறார். மேலும், உடலில் நீர்ச்சத்து இருப்பது உடலில் அஜீரண கோளாரை வராமல் தடுக்குமாம். இதனால், உடலுக்கு நாள் முழுவதும் எனர்ஜி இருக்குமாம். மேலும் படிக்க | நிறைய சாப்பிட்டும் ஒல்லியாக ‘இதை’ பண்ணனும்! பிரியா பவானி சங்கரின் வெயிட் லாஸ் சீக்ரெட்.. சாப்பிடும் போது கவனம்: ஷாருக்கான், தான் சாப்பிடும் போது முழு மனதுடன் சாப்பிடுவாராம். கொழுப்பு உணவுகளை தவிர்த்து, புரத உணவுகளை மட்டும் டயட்டில் சேர்க்கும் இவர், சாப்பிடும் போது டிவி பார்த்துக்கொண்டு அல்லது போன் பார்த்துக்கொண்டு சாப்பிடாமல் கவனத்துடன் சாப்பிடுவாராம். ஆக்டிவான வாழ்க்கை: ஷாருக்கான், ஜிம்மில் மட்டுமல்ல தனது நாளில் பெரும்பாலான மணி நேரங்களில் ஆக்டிவாக இருப்பாராம். தான் வர்க்-அவுட் செய்யாத நாட்களிலும் கூட, உடலுக்கு உழைப்பு கொடுத்துக்கொண்டே இருப்பாராம். சுய ஒழுக்கத்துடன், முழு மனதுடன் தனது உடலை நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு உடல் கண்டிப்பாக ஃபிட் ஆக இருக்கும். மேலும் படிக்க | Vikram Diet : எடையை சட்டென குறைக்க நடிகர் விக்ரம் செய்யும் விஷயம்! சிம்பிளா இருக்கே.. சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.