TAMIL

நன்றாக காதலிக்க தெரிந்த 5 ராசிகள்! எந்தெந்த ராசிக்காரர்கள் தெரியுமா?

5 Astrological Signs That Will Make Best Partners : 12 ராசிகளுக்கும் அவர்களின் கிரகப்பலன்களின் படி எதிர்காலம் அமையும். அவரவர் பிறந்த நேரத்தை பொருத்தும் இது அமையும். அதே போல, ஒரு சில ராசிகள் காதலில் சிறந்தவர்களாகவும், சிறந்த கணவன் அல்லது மனைவியாகவும் இருப்பார்களாம். அவர்கள் யார் யார் தெரியுமா? கடகம்: கடக ராசிக்காரர்கள், தன்னை சுற்றி இருப்பவர்களின் மீது அன்பும் அக்கறையும் கொண்டவர்களாக இருப்பார்கள். இதனால் இவர்கள் காதலிக்கவும், காதலிக்கப்படுவதற்கும் ஏதுவான ஆளாக இருப்பார்களாம். யாருக்காகவும் தங்களது காதலை தெரிவிக்க பயப்படாதவர்களாக இருக்கும் இவர்கள், தனது மகிழ்ச்சியை விட தனது துணையின் மகிழ்ச்சியை இவர்கள் பெரிதாக கருதுவார்களாம். இவர்கள் காதலில் இருக்கும் போது அவர்களின் பார்ட்னரின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பவர்களாக இருப்பார்களாம். கடக ராசிக்காரர்கள் குடும்பத்துக்கு ஏற்றவர்களாக, பாதுகாப்பவர்களாக, மிகவும் கண்ணியமானவர்களாகவும் இருப்பார்களாம். ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்கள், தங்களின் துணைக்கு எப்போதும் உறுதுணையாக இருக்க வேண்டும் என நினைப்பார்களாம். தங்கள் பார்ட்னர் மீது மிகுந்த பாசம் வைத்திருக்கும் இவர்கள், தங்களின் காதலை வெளிப்படுத்தவும் தயங்காத ஆளாக இருப்பர். பொறுமையுடன் செயல்பட தெரிந்த இவர்கள், தனக்கு துணையாக வேகமாக பேசிவிடுபவர் வந்தாலும், அவரை சரியாக கையாள்வார்களாம். மேலும், எந்த பிரச்சனை வந்தாலும் அதை பொறுமையுடன் கடைப்பிடித்து உறவினை சரியாக நகர்த்திச்செல்லும் ஆளாகவும் இருப்பர். துலாம்: துலாம் ராசிக்காரர்கள், தன்னை சுற்றி இருக்கும் அனைத்தையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பார்களாம். தங்களை பற்றி ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்றாலும் தன்னை சுற்றி இருப்பவர்களை பற்றியும் இவர்கள் யோசிப்பதாக கூறப்படுகிறது. எந்த சண்டை ஏற்பட்டாலும் அதனை சரியாக முடிக்க தெரிந்த இவர்கள், தங்கள் உறவில் இருவருக்கும் சம உரிமை கிடைக்க வேண்டும் என நினைப்பார்களாம். இவர்கள் தனக்கு மதிப்பு கொடுத்துக்கொள்வதோடு தன்னை சுற்றி இருப்பவர்களுக்கும் தகுந்த மரியாதை கொடுப்பர். மீனம்: மீன ராசியை சேர்ந்தவர்கள், தன்னலம் இல்லாத எண்ணத்தை அதிகமாக கொண்டவர்களாக இருப்பார்களாம். பிறரை நன்றாக புரிந்து கொள்ளும் தன்மை கொண்ட இவர்கள், தன் துணை எதையும் கூறாமலேயே அவரது எண்ணத்தினை புரிந்து நடந்து கொள்வர். இந்த ராசியை சேர்ந்தவர்கள், நன்றாக கனவு காணுபவர்களாக இருப்பர். மேலும், படைப்பாற்றல் மிக்கவர்களாகவும் இருப்பார்களாம். மேலும், தங்களின் உறவில் விதவிதமாக தங்களின் காதலை வெளிப்படுத்த தெரிந்தவர்களாகவும் இருப்பராம். மேலும், சரியான புரிதல், இரக்கம், உணர்ச்சி நெருக்கம் ஆகியவற்றை அதிகம் கொண்டவர்களாக இருப்பார்களாம். தனுசு: தனுசு ராசிக்காரர்கள் சாகச விரும்பிகளாக இருப்பார்கள். ஆனால் அதே சமயத்தில் தன்னுடன் இருப்பவர்களையும் நன்றாக கண்ணும் கருத்துமாய் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றும் நினைப்பர். இவர்கள், இதே மாதிரியான ஆளுமைத்திறனை தங்களின் வாழ்க்கைத்துணையிடமும் காண்பிப்பர். ஆழமாக காதலிக்க தெரிந்த இவர்கள், சிறந்த கணவன் அல்லது மனைவியாகவும் இருப்பார்களாம். பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை. சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.