TAMIL

ஜியோ vs ஏர்டெல் vs வோடபோன்: தினமும் 2.5ஜிபி டேட்டா வேணுமா? யாருடைய பிளான் விலை கம்மி?

Jio vs Airtel vs Vodafone Idea, 2.5GB Data Plans: இந்தியாவில் தொலைத்தொடர்பு துறையில் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் தற்போது அதன் வாடிக்கையாளர் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது எனலாம். மற்ற நிறுவனங்களை காட்டினாலும் மலிவான விலையில் பிஎஸ்என்எல் பல்வேறு ரீசார்ஜ் திட்டங்களை வைத்திருந்தாலும், மற்ற மூன்று நிறுவனங்கள் பிஎஸ்என்எல் நிறுவனம் கொடுக்காத சில அம்சங்களையும் வழங்கி வருகிறது. அதில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய ஒன்று 5ஜி இணைய சேவையை பிஎஸ்என்எல் நிறுவனம் இன்னும் தொடங்கவில்லை. வோடபோன் நிறுவனம் தற்போதுதான் 5ஜி இணைய சேவையை தொடங்கியிருக்கிறது. இன்னும் முழுமையாக 5ஜி சேவை அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் விரிவாக்கப்படவில்லை. ஜியோ vs ஏர்டெல் vs வோடபோன் ஐடியா - 2.5ஜிபி டேட்டா ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் மட்டுமே முழுமையாக 5ஜி இணைய சேவையை நாட்டில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. முதலில் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வரம்பற்ற வகையில் 5ஜி சேவையை ஜியோ மற்றும் ஏர்டெல் வழங்கிய நிலையில், தற்போது தினமும் 2ஜிபி டேட்டாவுக்கு மேல் உள்ள பிரீபெய்ட் திட்டங்களை ரீசார்ஜ் செய்தவர்களுக்கு மட்டுமே 5ஜி சேவை வழங்கப்படுகிறது. அதுவும் வரம்பற்ற வகையில் வழங்கப்படுகிறது. எனவே, ஜியோ மற்றும் ஏர்டெல் பயனர்கள் தினமும் 2ஜிபிக்கு மேல் உள்ள ரீசார்ஜ் திட்டங்களையே விரும்புகின்றனர். அந்த வகையில், ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் தினமும் 2.5ஜிபி டேட்டாவை வழங்கும் ரீசார்ஜ் திட்டங்கள் இங்கு காணலாம். இவற்றின் விலையும், பயன்களும் சற்றே மாறுபடும் என்பதால் அவற்றை இங்கு விரிவாக காணலாம். மேலும் படிக்க | Jio Vs Airtel... ரூ.3599 ஒரு வருட ப்ரீபெய்ட் திட்டம்... அதிக பலன்கள் கொடுப்பது எது? ஏர்டெல் ஏர்டெல் நிறுவனம் தற்போது 1 மாத வேலிடிட்டியில் இந்த திட்டத்தை வழங்கி வருகிறது. தினமும் 2.5ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ் ஆகியவை கிடைக்கும் இந்த திட்டத்தில் 5ஜி இணைய சேவை வரம்பற்ற வகையில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ரீசார்ஜ் திட்டத்தின் விலை ரூ.429 ஆகும். வோடபோன் ஐடியா வோடபோன் ஐடியா தினமும் 2.5ஜிபி டேட்டாவையும் 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றையும் வழங்கும் இந்த திட்டத்தின் விலை 409 ரூபாய் ஆகும். இதன் வேலிடிட்டி 28 நாள்களாகும். இதில் வீக்எண்ட் டேட்டா ரோல்ஓவர் போன்ற பிற வசதிகளும் கிடைக்கின்றன. ஜியோ ஜியோ தினமும் 2.5ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்கும் இந்த திட்டத்தின் விலை ரூ.399 ஆகும். மற்ற நிறுவனங்களை விட ஜியோ சற்று குறைவான விலையில் கிடைக்கிறது. இதன் வேலிடிட்டி 28 நாள்களாகும். மொத்தம் 70ஜிபி டேட்டாவும், வரம்பற்ற காலிங் வசதியும் கிடைக்கிறது. ஜியோ டிவி, ஜியோ கிளவுட், ஜியோ சினிமா வசதியும் இதில் கிடைக்கின்றன. மேலும் படிக்க | OnePlus 13R... இன்னும் சில நாட்களில் அறிமுகம்... முழு விபரம் இதோ சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.