TAMIL

மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற டாப் 5 மத்திய அரசு நலத்திட்டங்கள்

Central Government Schemes: நாட்டு மக்களின் நலனுக்காக மத்தியில் உள்ள மோடி அரசாங்கம் பல்வேறு நலத்திட்டங்களை நடத்தி வருகின்றது. நரேந்திர மோடி 2014 முதல் இந்தியப் பிரதமராகப் பணியாற்றி வருகிறார். அவரது பதவிக்காலத்தில், இந்திய குடிமக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்கில் பல திட்டங்களை அவர் தொடங்கியுள்ளார். இந்த முன்முயற்சிகள் மக்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளன. பெண்கள், குழந்தைகள், மாணவர்கள், விவசாயிகள் என பல்வெறு பிரிவினருக்கு தனித்துவமான பல திட்டங்கள் தொடங்கப்படுள்ளன. இதில் இலவச மருத்துவ சிகிச்சை அளிப்பது, தாழ்த்தப்பட்டோருக்கு வீடுகள், இலவச எரிவாயு இணைப்புகள், பெண் குழந்தைகளுக்கான திட்டங்கள் ஆகியவை அடங்கும். தாக்கத்தை ஏற்படுத்தும் இத்தகைய திட்டங்களால், இந்தியாவில் உள்ள தொலைதூர கிராமங்களைச் சேர்ந்த மக்களும் மோடியை ஒரு சிறந்த தலைவராக அங்கீகரிக்கின்றனர். நாட்டு மக்களிடையே பிரதமருக்கு பரவலான பாராட்டுகளைப் பெற்று தந்த, அதிக நன்மைகளை அளிக்கக்கூடிய சில பிரபலமான மத்திய அரசு நலத் திட்டங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம். PM Awas Yojana: பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் ஏழைகளுக்கு வீடு வழங்குவதற்காக பிரதமர் மோடியால் 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், இதுவரை 4 கோடி வீடுகள் பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அடிப்படை தேவையான வீட்டிற்கான தேவையை பூர்த்தி செய்யும் இந்த திட்டம் ஏழை மக்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளது. PM Ujjwala Yojana: பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா கிராமப்புற வீடுகளுக்கு இலவச எல்பிஜி சிலிண்டர்களை வழங்குவதற்காக பிரதமர் உஜ்வாலா யோஜனா திட்டம் 2016 இல் பிரதமரால் அறிமுகப்படுத்தப்பட்டது. இன்றுவரை, 10 கோடி மக்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர். இது நாடு முழுவதும் உள்ள ஏழைப் பெண்களின் வாழ்க்கையை கணிசமாக மேம்படுத்துகிறது. அடுப்பு புகையில் தினமும் உழன்று பல வகையான உடல் உபாதைகளுக்கு ஆளான பல பெண்களுக்கு இந்த திட்டத்தின் மூலம் எல்பிஜி சிலிண்டர்கள் கிடைத்தன. இதனால், இது நாட்டு மக்களிடையே, குறிப்பாக பெண்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளது. மேலும் படிக்க | நாட்டையே உலுக்கிய பிபின் ராவத் மரணம்... மனித தவறால் ஏற்பட்ட விபத்து - ஷாக் ரிப்போர்ட் Atal Pension Yojana:அடல் பென்ஷன் யோஜனா அடல் ஓய்வூதியத் திட்டம் 2015 இல் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டம் அதில் முதலீடு செய்யும் பயனாளர்களுக்கு ஓய்வூதியத்தை உறுதி செய்கிறது. 18 முதல் 40 வயது வரை உள்ள அனைவரும் இந்த திட்டத்தில் பங்கேற்று ஓய்வு பெற்ற பிறகு மாதம் ரூ.5,000 வரை ஓய்வூதியம் பெறலாம். PM Suraksha Bima Yojana: பிரதம மந்திர் சுரக்ஷா பீமா யோஜனா பிரதம மந்திர் சுரக்ஷா பீமா யோஜனா 2015 ஆம் ஆண்டு பிரதமர் மோடியால் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டம் 18 முதல் 70 வயது வரை உள்ளவர்களுக்கு காப்பீடு வழங்குகிறது. வெறும் ரூ.20 ஆண்டு பிரீமியத்திற்கு, இந்தத் திட்டத்தின் கீழ் அரசாங்கம் ரூ.2 லட்சம் காப்பீட்டுத் தொகையை வழங்குகிறது. PM Jan Dhan Yojana: பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா 2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா இந்தியாவின் குடிமக்கள் அனைவரையும் வங்கி சேவைகளுடன் இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், ஏழை மக்களும் ஜீரோ பேலன்ஸ் கணக்குகளை திறக்கலாம். இந்த திட்டம் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பல்வேறு சலுகைகள் மற்றும் வசதிகளை வழங்குகிறது. மேலும் படிக்க | தேங்காய் எண்ணெய்... குக்கிங் ஆயிலா அல்லது ஹேர் ஆயிலா... 15 வருட வழக்கை முடித்து வைத்த உச்சநீதிமன்றம் சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.