TAMIL

Flipkart Big Bachat Days Sale: ஐபோன் 16 மற்றும் பல ஸ்மார்ட்போன்களில் நம்ப முடியாத தள்ளுபடி

Flipkart Big Bachat Days Sale: பிராண்டட் ஸ்மார்ட்போனை குறைந்த விலையில் வாங்கும் எண்ணம் கொண்டுள்ள அனைவருக்கும் ஒரு நல்ல வாய்ப்பு வந்துள்ளது. 2025 ஆம் ஆண்டின் முதல் மாதத்திலேயே விலையுயர்ந்த ஸ்மார்ட்போன்களை மலிவாக வாங்கலாம். Apple, Vivo, Motorola மற்றும் Poco போன்ற நிறுவனங்களின் விலையுயர்ந்த போன்கள் மலிவான விலையில் கிடைக்கின்றன. ரூ.80 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரையிலான ஸ்மார்ட்போன்கள் பெரிய சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளுடன் பட்டியலிடப்பட்டுள்ளன. இவற்றை எப்படி, எங்கு வாங்குவது? இந்த பதிவில் முழு விவரத்தையும் தெரிந்துகொள்ளலாம். பிளிப்கார்ட்டில் பிக் பசத் சேல் ஆன்லைன் விற்பனை தளமான ஃபிளிப்கார்ட்டில் ஜனவரி 1 முதல் Big Bachat Sale தொடங்கப்பட்டுள்ளது. இது ஜனவரி 5, 2025 வரை தொடரும். இந்த விற்பனையில் விலை உயர்ந்த போன்களை பாதி விலையில் வாங்கலாம். ஸ்மார்ட்போன்களின் விலையில் நேரடியாக தள்ளுபடி பெறுவது தவிர, வங்கி மற்றும் பரிமாற்ற தள்ளுபடி சலுகைகளும் கிடைக்கின்றன. iPhone 16: ஐபோன் 16 பிளிப்கார்டின் இந்த விற்பனையில், ஆப்பிளின் ஐபோன் 16ஐ பெரும் தள்ளுபடியுடன் வாங்கலாம். Flipkart Big Savings Days சேலில் ரூ.79,900 விலை கொண்ட iPhone 16 ரூ.74,900க்கு விற்கப்படுகிறது. நீங்கள் அதன் விலையில் கூடுதல் தள்ளுபடியைப் பெற விரும்பினால், தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி அட்டைகளில் கிடைக்கும் சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். UPI மூலம் பரிவர்த்தனை செய்தால் 2000 ரூபாய் வரை தள்ளுபடி பெறலாம். ஐசிஐசிஐ கிரெடிட் கார்டில் ரூ.4000 வரை தள்ளுபடி கிடைக்கும். Vivo V40e: விவோ வி40இ வாடிக்கையாளர்கள் இந்த சேலில், Vivo V40e ஸ்மார்ட்போனை மலிவான விலையில் வாங்கலாம். Flipkart விற்பனையில், ​​Vivo V40e இன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மாறுபாட்டை ரூ.26,999க்கு வாங்கலாம். வங்கி சலுகையின் கீழ், 2500 ரூபாய் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஃபோனின் விலை இன்னும் மலிவாகும். ரூ.25 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் இதை வாங்க முடியும். Motorola Edge 50 Neo: மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ பிளிப்கார்ட் விற்பனையில், மோட்டோரோலா எட்ஜ் 50 நியோவை மலிவான விலையில் வாங்கலாம். பிளிப்கார்ட் பிக் சேவிங்ஸ் விற்பனையின் போது இந்த போன் ரூ.9,000 தள்ளுபடியுடன் கிடைக்கிறது. இந்த போனின் அசல் விலை ரூ.20,999. ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி ரூ.1000 தள்ளுபடி பெறலாம். HDFC வங்கி கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.1250 வரை தள்ளுபடியும், IDFC வங்கி கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.1500 வரையிலும் தள்ளுபடி கிடைக்கும். OPPO K12x 5G: ஓப்போ கெ12எக்ஸ் 5ஜி பட்ஜெட் 15,000 ரூபாய்க்கு குறைவாக உள்ள வாடிக்கையாளர்கள், Oppo K12x 5G ஐ இந்த சேலில் வாங்கலாம். இதன் 6ஜிபி ரேம் + 128 ஜிபி சேமிப்பு மாறுபாடு ரூ.16,999க்கு பதிலாக ரூ.12,999க்கு கிடைக்கிறது. வங்கி சலுகையை பயன்படுத்திக்கொண்டால், Oppo K12x 5G ஐ இன்னும் அதிக தள்ளுபடியுடன் வாங்கலாம். இதன் மூலம் 4,000 ரூபாய் வரையிலான தள்ளுபடியின் பலனைப் பெற முடியும். இது தொலைபேசியின் விலையை இன்னும் குறைக்கும். மேலும் படிக்க | Jio Vs Airtel... ஒரு வருட ப்ரீபெய்ட் திட்டத்தில் டேட்டாவுடன் OTT பலன்கள் கொடுக்கும் திட்டம் எது? மேலும் படிக்க | Flipkart Big Saving Days Sale: 30% தள்ளுபடியில் லேட்டஸ் மோட்டோரோலா போனை வாங்க சூப்பர் வாய்ப்பு சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.