TAMIL

iPhone 16E .... விரைவில் வருகிறது ஆப்பிளின் பட்ஜெட் ஐபோன்... லேடஸ்ட் அப்டேட் இதோ

iPhone SE 4/ iPhone 16E: பிரீமியம் வகை போன்களில் முதலிடம் வகிக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களை வாங்குவது என்பது பலரின் கனவாக இருக்கும். ஐபோன்கள் வைத்திருப்பது பெருமை தரும் விஷயமாக பார்க்கப்படுவதே இதற்கு காரணம். எனினும், ஐபோன்களின் விலை உச்சத்தில் இருப்பதால் எல்லோராலும் வாங்க முடியும் நிலையில் இருப்பதில்லை. பட்ஜெட் போன் வாங்க நினைப்பவர்களுக்கு சந்தோஷத்தை கொடுக்கும் வகையில் ஆப்பிள் பட்ஜெட் விலையில், தனது புதிய iPhone SE வகை போன்களை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக செய்திகள் வெளியானது. ஆப்பிளின் நான்காவது தலைமுறை iPhone SE, 2025 மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், இப்போது இந்த போன் iPhone 16E என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்படலாம் என தகவல் கசிந்துள்ளது. அறிமுக தேதி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், புதிதாக அறிமுகப்படுத்தப்படும் போன் ( Smart Phones ), கடந்த 2022ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட iPhone SE 3 மாடலை விட சிறந்த அம்சங்களை கொண்டதாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேம்பட்ட ஆப்பிள் நுண்ணறிவு அம்சங்களுடன் SE 4 மாடல், ஆப்பிளின் மிகவும் மலிவு விலை போனாக இருக்கலாம். புதிய போனின் வடிவமைப்பில் பெரிய மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. இது இப்போது iPhone 14 போன்ற புதிய வடிவமைப்பில் வரலாம் என கூறப்படுகிறது.,பழைய iPhone 8 வடிவமைப்பிலிருந்து வேறுபட்டதாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இதில் 6.1 இன்ச் OLED டிஸ்ப்ளே, ஃபேஸ் ஐடி அங்கீகாரம் மற்றும் USB-C போர்ட் வழங்கப்படலாம். டச் ஐடி பட்டன் மற்றும் லைட்னிங் கனெக்டர் ஆகியவை தற்போதைய மாடலில் வழங்கப்பட்டுள்ளன, ஆனால் புதிய மாடலில் இந்த புதிய அம்சங்கள் அவற்றின் இடத்தில் கொடுக்கப்படும். மேலும் படிக்க| புது போன் வாங்க பிளானா....2025 ஜனவரியில் அறிமுகமாகும் சில சூப்பர் போன்கள் விபரம் இதோ சுவாரஸ்யமான AI அம்சங்கள் கொண்ட இந்த ஃபோன், 48 மெகாபிக்சல் பின்புற கேமரா, 8 ஜிபி ரேம் மற்றும் ஆப்பிளின் சமீபத்திய A-சீரிஸ் சிப் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். இது புதிய AI அம்சங்களை ஆதரிக்கும் திறன் கொண்டதாக இருக்கும். நிறுவனம் தனது முதல் உள்-வடிவமைக்கப்பட்ட 5G மோடத்தை இந்த சாதனத்தில் நிறுவவும் திட்டமிட்டுள்ளது. சீன சமூக ஊடக தளமான Weibo பயனர் Fixed Focus Digital தளத்தில், பட்ஜெட் போனின் பெயர் மாற்றம் பற்றிய ஊகங்கள் வெளியான நிலையில் பின்னர் X தளத்தில் லீக்கர் Majin Bu உறுதி செய்தார் . புதிய மாடலின் விலை தற்போதைய iPhone SE மாடலின் ஆரம்ப விலையான $429 என்பதை விட அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் ஆரம்ப விலை $499 என்ற அளவில் இருக்கலாம். இந்த சாதனம் வரையறுக்கப்பட்ட வண்ண விருப்பங்களில் கிடைக்கும், இதில் கருப்பு மற்றும் வெள்ளை நிறங்கள் முக்கிய விருப்பங்களாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. மேலும் படிக்க | Flipkart Big Bachat Days Sale: பிராண்டட் ஸ்மார்ட்போன்களில் சர்ப்ரைஸ் ஆஃபர்... மிஸ் பண்ணிடாதீங்க சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.