TAMIL

2026 விக்கிரவாண்டியா? விருதாச்சலமா? விஜய்யின் V செண்டிமெண்ட் வர்க்-அவுட் ஆகுமா?

TVK Vijay V Sentiment : ஒவ்வொரு கட்சித் தலைவரும் அவருக்கு ஏற்ற தொகுதி எது என ஆய்வு செய்து அதில்தான் போட்டியிடுவார்கள். அதன்படி முன்னாள் மற்றும் இந்நாள் தலைவர்கள் பலரும் தொடர்ந்து ஒரே தொகுதியில் போட்டியிட்டு வருகின்றனர். இந்நிலையில் புதிதாக கட்சி துவங்கியிருக்கும் தவெக தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்லில் எந்த தொகுதியில் போட்டியிடப் போகிறார் என்ற கேள்வி அக்கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது. “வி.சாலை எனும் வெற்றிச்சாலையில் விரைவில் சந்திப்போம்” என நடிகர் விஜய் மாநாட்டுக்கு முன்பாக வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டு இருந்த வாசகம்தான் அவரின் V செண்டிமெண்ட்டை வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறது. நடிகர் விஜய் எப்போதுமே ‘வி’ சென்டிமென்டை கடைபிடித்து வருவதாக ஒரு பேச்சு இருக்கிறது. அவருடைய, பெயர் ‘விஜய்’ அதைப்போல அவர் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அறிமுகமான படம் ‘வெற்றி’. அந்த படத்தில் அவருடைய பெயர் விஜய் தான். எனவே, சினிமாவிற்குள் வரும் போதே வி சென்டிமென்டில் தான் அறிமுகம் ஆகி இருக்கிறார். சினிமாவை தொடர்ந்து அரசியலில் நுழைந்த பிறகும் தனது கட்சியின் பெயரிலும் V சென்டிமென்டை வைத்து இருக்கிறார். அதைப்போல, தன்னுடைய முதல் மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியில் உள்ள வி.சாலையில் நடத்தி முடித்திருக்கிறார். V சென்டிமென்ட்டை முழுமையாக நம்பும் நடிகர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடக்கூடிய தொகுதியும் வி செண்டிமெண்டிலேயே இருக்கும் என அவரது தொண்டர்கள் எதிர்பார்க்கிறார்கள். குறிப்பாக விக்கிரவாண்டியா? விருதாச்சலமா? என்பதுதான் தற்போது தவெக தொண்டர்களிடையே பேசு பொருளாக இருக்கிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெற்ற வி.சாலை, விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டது. எனவே அவர் விக்கிரவாண்டி தொகுதியில் நிற்கலாம் எனவும் தவெக நிர்வாகிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதற்க்கு காரணமாக விக்கிரவாண்டி தொகுதியைச் சேர்ந்த நிர்வாகிகள் சொல்வது மாநாட்டுக்கு இடம் கொடுத்தவர்களின் குடும்பத்தினரை கட்சி அலுவலகத்துக்கு அழைத்து வந்து அவர்களுக்கு விருந்தும் பரிசுகளும் வழங்கி தன்னை அத்தொகுதியில் பேசு பொருளாக ஆக்கியிருக்கிறார். வெளி நிகழ்ச்சிகளில் அதிகம் கலந்து கொள்ளாத விஜய், விக்கிரவாண்டியை மனதில் வைத்து தான்கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தின் போது நேரில் சென்று பார்வையிட்டதாக கூறப்படுகிறது. ஒருவேளை விக்கிரவாண்டிக்கு அடுத்து விஜயின் தேர்வு விருதாச்சலமாக இருக்கலாம் எனவும் அத்தொகுதி தவெக நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள். விஜய்க்கு முன்னர் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து மிகப்பெரிய ஆளுமையாக பார்க்கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த், அரசியல் ஜோதிட ஆலோசனை படி, 'V' என்கிற எழுத்தில் துவங்கும் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதாக கூறப்படுவது உண்டு. எனவே மறைந்த நடிகர் விஜயகாந்தை மிகவும் மதிக்கக்கூடிய நடிகர் விஜய் அவரை போலவே சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்திருக்கிறார். அவர் மீது உள்ள அன்பின் காரணமாகவும் தனது வி சென்டிமென்ட்டும் ஒத்துப் போகக்கூடிய விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிடலாம் என தவெக தொண்டர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில், விஜய் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டமன்றத் தொகுதிகளில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என தர்மபுரி மாவட்ட தவெக வழக்கறிஞர் அணி பிரிவு ஆலோசனைக் கூட்டத்தில் தர்மபுரி மாவட்டத் தலைவர் சிவா தெரிவித்திருக்கிறார். தலைவரின் ‘V’ சென்டிமென்டே வெல்லும் என சொல்கிறாரகள் தவெக தொண்டர்கள். மேலும் படிக்க | தவெக பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைது!! காரணம் என்ன? மேலும் படிக்க | சொன்ன சொல் தவறும் விஜய்...? ஆளுநர் சந்திப்புக்கு பின்... அரசியல் களத்தில் சலசலப்பு சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.