TAMIL

சட்டப்பேரவையில் பரபரப்பு - உரையாற்றாமல் புறப்பட்ட ஆளுநர் - முழு பின்னணி இதோ!

Tamil Nadu Assembly Latest Updates 2025: ஆண்டின் முதல் கூட்டத்தொடராக தமிழக சட்டப்பேரவை இன்று கூடிய நிலையில், அரசு தயாரித்து கொடுத்து உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றாமல் பேரவையில் இருந்து வெளியேறினார். முதலில் தமிழ்த் தாய் வாழ்த்துக்கு பதில் தேசிய கீதத்தை பாட வேண்டும் என ஆளுநர் கோரிக்கை வைத்ததாகவும், ஆனால் முதலில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடியதால் ஆளுநர் ஆர்.என். ரவி பேரவை தொடங்கியதும் தனது உரையை வாசிக்காமல் அவர் புறப்பட்டுச் சென்றார். தொடர்ந்து, ஆளுநர் மாளிகையின் அதிகாரப்பூர்வ X பக்கத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி வெளியேறியது குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டது. நீக்கப்பட்ட பதிவுக்கும், புதிய பதிவுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? முதலில் 9.43 மணிக்கு போட்ட பதிவில் 'Chief Ministet' போன்ற பிழைகள் இருந்தன. பின்னர் அந்த பதிவு நீக்கப்பட்டு புதிதாக காலை 10.03 மணிக்கு மற்றொரு பதிவு போடப்பட்டது. குறிப்பாக, நாடாளுமன்ற கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் உரையின் போது தொடக்கத்தின் போதும், முடியும் போதும் தேசிய கீதம் பாடப்படும் அல்லது இசைக்கப்படும் என முதல் பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது இரண்டாவது பதிவில் அந்த வரிகள் நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆளுநர் மாளிகை விளக்கம் மேலும், புதிய பதிவில், "தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மீண்டும் நாட்டின் அரசியலமைப்பு மற்றும் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டது. தேசிய கீதத்தை மதித்தல் என்பது நமது அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள முதல் அடிப்படைக் கடமையாகும். குடியரசு தலைவர் உரையின் தொடக்கத்திலும் சரி, முடிவிலும் சரி நாடாளுமன்றத்தில் பாடப்படுகிறது அல்லது இசைக்கப்படுகிறது. 2025 பொங்கலுக்கு மாஸான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு! The Constitution of Bharat and the National Anthem were once again insulted in the Tamil Nadu Assembly today. Respecting the National Anthem is among the first Fundamental Duty as enshrined in our Constitution. It is sung in all the state legislatures at the beginning and the end… — RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) January 6, 2025 இதேபோல் அனைத்து மாநில சட்டமன்றங்களிலும் ஆளுநர் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும் தேசிய கீதமே பாடப்படுகிறது. இன்று ஆளுநர் சட்டப்பேரவையின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடப்பட்டது. ஆளுநர் அவர்கள் அரசியலமைப்பு கடமையை மரியாதையுடன் நினைவூட்டியதுடன், தேசிய கீதத்தைப் பாடுவதற்காக அவைத் தலைவர், முதலமைச்சர் ஆகியோருக்கு மரியாதையுடன் வேண்டுகோள் விடுத்தார். ஆனால், அவர்கள் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். இது மிகவும் கவலைக்குரிய விஷயம் ஆகும். அரசியல் சாசனம் மற்றும் தேசிய கீதத்தை அவமதிக்கும் செயல்களில் ஈடுபடக்கூடாது என்பதற்காக கவர்னர் கடும் வேதனையுடன் சட்டப்பேரவையை விட்டு வெளியேறினார்" என குறிப்பிடப்பட்டிருந்தது. எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக யார் அந்த சார்? என்ற பேட்ஜ்ஜை அணிந்து சட்டப்பேரவைக்கு வருகை தந்தனர். சட்டப்பேரவையில் பதாகைகள் ஏந்தி அதிமுகவினர் கோஷங்களை எழுப்பியதால் அவர்களை வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். இதை தொடர்ந்து, அதிமுக, பாஜக, பாமக உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். ஆளுநர் வெளியேறிய நிலையில், அரசு தயாரித்த ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு சட்டப்பேரவையில் வாசித்து வருகிறார். பாஜக நிர்வாகி கைது: சாலை மறியலில் தொண்டர்கள் போலீசாருடன் தள்ளுமுள்ளு - பழனியில் பரபரப்பு சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.