TAMIL

Jio Vs Airtel... ரூ.3599 ஒரு வருட ப்ரீபெய்ட் திட்டம்... அதிக பலன்கள் கொடுப்பது எது?

Reliance Jio vs Airtel: 2024 ஆம் ஆண்டு விரைவில் நிறைவடைந்து, புத்தாண்டு பிறக்க உள்ள நிலையில், உங்கள் போனை அடிக்கடி ரீசார்ஜ் செய்யும் டென்ஷனில் இருந்து விடுபட வேண்டுமானால், உங்கள் போனை ஒரு வருடத்திற்கான ரீசார்ஜ் செய்வதன் மூலம் வருடம் முழுவதும் டென்ஷன் இல்லாமல் இருக்கலாம். தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பல வருடாந்திர ரீசார்ஜ் திட்டங்களைக் கொண்டு வருகின்றன. அவ்வபோது ஏற்படுத்தும் கட்டண உயர்வு பாதிப்பில் இருந்து இந்த திட்டங்கள் பாதுகாக்கின்றன. அதோடு, ஒரு வருட காலத்தில் நிறுவனங்கள் தங்கள் திட்டங்களீன் கட்டணங்களை உயர்த்தினாலும், இந்த கட்டண உயர்வால் உங்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படாது. கடந்த ஜூலை மாதம், தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள், ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் கட்டணங்களை அதிகரித்து, வாடிக்கையாளர்களுக்கு ஷாக் கொடுத்தன. இதில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் இரண்டு நிறுவனங்களும் அடங்கும். எனினும், வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள, அவ்வப்போது மலிவான கட்டணத்தில், அதிக நன்மைகளை வழங்கும் திட்டங்களைத் தொடர்ந்து கொடுத்த வண்ணம் தான் உள்ளன. ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவின் வருடாந்திர ரீசார்ஜ் திட்டங்களைப் பற்றிய தகவலையில் அவற்றில் கிடைக்கும் நன்மைகளையும் அறிந்து கொள்ளலாம். புத்தாண்டில் குறைந்த கட்டணத்தில் அதிக நன்மைகளைப் பெற விரும்பினால், எந்த நிறுவனத்தின் திட்டம் உங்களுக்கு லாபகரமான பிளானாக இருக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம். ஜியோவின் ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டம் ரிலையன்ஸ் ஜியோவின் வருடாந்திர ரீசார்ஜ் திட்டமான ரூ.3599 திட்டம் 365 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. அதாவது, இந்தத் திட்டத்தை பெற்றுக் கொண்டால், அடுத்த ஆண்டு வரை ரீசார்ஜ் பற்றி கவலைப்படாமல், நிம்மதியாக இருக்கலாம். மேலும் படிக்க | BSNL வழங்கும் அசத்தலான ப்ராண்ட்பேண்ட் பிளான்... 333 ரூபாயில் மாதம் 1300GB... ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி பேசுகையில், ஏர்டெல்லின் திட்டம் தினசரி 2.5 ஜிபி டேட்டா நன்மைகளுடன் வருகிறது. 365 நாட்களின் வேலிடிட்டியின்படி, இந்த திட்டத்தில் 912.5ஜிபி டேட்டாவை அணுகலாம். இது தவிர, வரம்பற்ற குரல் அழைப்பு வசதியும் இந்த திட்டத்தில் உள்ளது. தவிர, இந்த திட்டத்தின் கீழ் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் அனுப்பலாம். ஏர்டெல் ரூ 3599 ஏர்டெல்லின் வருடாந்திர ரீசார்ஜ் திட்டமான ரூ.3599 திட்டத்தைப் பற்றி பேசுகையில், இது 365 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. பிற நன்மைகளைப் பற்றி பேசுகையில், ஏர்டெல்லின் இந்த திட்டம் மூலம் பயனர்களுக்கு தினசரி 2 ஜிபி டேட்டா கிடைக்கும். 365 நாட்களின் வேலிடிட்டியின் படி, இந்த திட்டம் பயனர்களுக்கு மொத்தம் 730ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இது தவிர, ஏர்டெல்லின் இந்த திட்டத்தில், பயனர்கள் வரம்பற்ற குரல் அழைப்பு வசதியைப் பெறுகின்றனர். மேலும், இந்த திட்டத்தின் கீழ், பயனர் தினமும்100 இலவச எஸ்எம்எஸ் அனுப்ப முடியும். டேட்டா நன்மைகளைப் பொறுத்தவரை, ஜியோவின் திட்டம் உங்களுக்கு அதிக பலன்களை வழங்குகிறது. நீங்கள் ஜியோ வாடிக்கையாளராக இருந்தால், ரூ.3599க்கு ரீசார்ஜ் செய்வதன் மூலம் அதிக டேட்டா பலன்களைப் பெறலாம். மேலும் படிக்க | Reliance Jio AirFiber... சிறப்பு சலுகையுடன்... குறைந்த கட்டணத்தில் அதிவேக இணைய சேவை... சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.