TAMIL

சுதந்திர தினம், குடியரசு தினம் கொடியேற்றுவதில் இந்த வித்தியாசத்தை கவனிச்சீங்களா?

Independence Day, flag hoisting : நாட்டின் 78வது சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனால் நாடு முழுவதும் உள்ள முக்கிய அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் எல்லாம் வண்ண விளக்குகளாலும், தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றன. இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். தமிழ்நாட்டின் தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.ஸ்டாலின் கொடியேற்றுகிறார். தேசிய கொடியேற்றுவதில் வித்தியாசம் இந்த நாளில் முக்கியமான ஒரு தகவலை அறிந்து கொள்ள வேண்டும். சுதந்திர தினம், குடியரசு தினம் என இரண்டு நாட்களிலும் தேசியக்கொடியை ஏற்றுவதாகவே எல்லோரும் குறிப்பிடுகிறோம். ஆனால் அது தவறு. சுதந்திர தினத்தன்று கொடியேற்றப்படும், குடியரசு தின நாளில் கொடி அவிழ்க்கப்படும். இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது. மேலும் படிக்க | இது 77ஆவது சுதந்திர தினமா? அல்லது 78ஆவதா?... குழப்பமே வேண்டாம் - ஈஸியா புரிந்துகொள்ளலாம்! கொடி ஏற்றுவது மற்றும் அவிழ்ப்பதற்கான காரணங்கள் சுதந்திர தினத்தன்று பிரதமர் டெல்லி செங்கோட்டையிலும், மாநிலங்களில் அந்தந்த முதலமைச்சர்களும் கொடியேற்றுவார்கள். குடியரசு நாளில் டெல்லியில் குடியரசு தலைவரும், மாநிலங்களில் அந்தந்த மாநில ஆளுநர்களும் கொடியேற்றுவார்கள். சுதந்திர தினத்தன்று தேசியக்கொடி கொடிக்கம்பத்தின் கீழிருந்து மேலேற்றப்படும். காலனி ஆதிக்கத்தில் இருந்து இந்தியா முழு சுதந்திரம் பெற்றதை நினைவு கூறும் வகையில் தேசியக்கொடி கீழிருந்து பறந்தவாறு மேலேற்றப்படும். ஆனால் குடியரசு நாளில் கொடிக்கம்பத்தின் மேல் கொடி மூடப்பட்டு கட்டப்பட்டிருக்கும். அதனை அவிழ்க்கும்போது கொடி பறக்கும். காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி இறையாண்மை மற்றும் ஜனநாயக குடியரசு நாடாக செயல்படுவோம் என்பதை தெரிவிக்கும் பொருட்டு கொடி அவிழ்க்கப்படும். முதல் முறையாக கொடியேற்றியவர்கள் இந்தியா சுதந்திரம் அடைந்ததும் அப்போதைய பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு இந்திய தேசியக் கொடியை ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஏற்றினார். 1950 ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு, குடியரசு நாடாக மலந்த ஜனவரி 26 ஆம் தேதி முதல் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் தேசியக் கொடியை அவிழ்த்தார். சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையிலும், குடிரயரசு தினத்தன்று ராஜ்பாத்திலும் கொடியேற்றப்படும். மேலும் படிக்க | சிறையில் முதல்வர் கெஜ்ரிவால்... டெல்லியில் தேசிய கொடியை ஏற்றப்போவது யார் தெரியுமா? சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.