TAMIL

ஐரோப்பா செல்லும் இந்தியர்கள்... ஒரே விசாவில் 29 நாடுகளுக்கு பயணம் செய்யலாம்!

Schengen Visa For Indians: வேலை, கல்வி, சுற்றுலா என இந்தியர்கள் பல்வேறு காரணங்களுக்காக இந்தியர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வது அதிகரித்து வருகிறது. அதிலும், குறிப்பாக ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லும் இந்தியர்கள் எண்ணிக்கை பல ஆண்டுகளாகவே தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இந்நிலையில், ஷெங்கன் என்று அழைக்கப்படும் 29 ஐரோப்பிய நாடுகளுக்கு எளிதாகச் செல்ல வழிவகை செய்யும் மல்டிபிள் என்ட்ரி அனுமதியுடன் கூடிய ஷெங்கன் விசாவிற்கு இனி இப்போது இந்தியர்கள் விண்ணப்பிக்கலாம் என ஐரோப்பா கூறியுள்ளது. ஐரோப்பா செல்லும் இந்தியர்களுக்கு இது மகிழ்ச்சி அளிக்கும் செய்தி. ஷெங்கன் விசாவைப் பெற விரும்பும் இந்தியப் பிரஜைகளுக்கு புதிய விசா நடைமுறையை ஐரோப்பிய ஆணையம் தொடங்கியுள்ளது. இது நீண்ட காலத்திற்கு பல முறை செல்ல அனுமதிக்கிறது. ஏப்ரல் 18 முதல் நடைமுறைக்கு வரும் இந்த புதிய ஏற்பாடு, இந்திய பயணிகளுக்கு பயனளிக்கும் விசா குறியீட்டின் நிலையான விதிகளை மாற்றுகிறது. புதிய விதியின்படி, இந்திய குடிமக்கள் கடந்த மூன்று ஆண்டுகளுக்குள் இரண்டு விசாக்களை சட்டப்பூர்வமாகப் பெற்று பயன்படுத்தி இருந்தால், அவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மல்டிபிள் என்ட்ரி ஷெங்கன் விசா கிடைக்கும். விசா முதலில் இரண்டு ஆண்டுகளுக்கானதாக இருக்கும். அதன் பிறகு, அதை ஐந்து ஆண்டுகள் வரை நீட்டிக்கலா. அதற்கு உங்கள் பாஸ்போர்ட் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு செல்லுபடியாக உள்ளதாக இருக்க வேண்டும். புதிய விசா வழங்கப்பட்டவுடன், பயணிகள் 90 நாட்கள் வரை சிறிது காலம் தங்குவதற்கு ஷெங்கன் பகுதிக்குள் சுதந்திரமாக செல்ல முடியும். இருப்பினும், ஒரு பயணத்திற்கும், அடுத்த பயணத்திற்கு, ஆன இடைவெளி 180 நாட்கள். ஆனால் இதன் மிகப்பெரிய வசதி என்னவென்றால், நீங்கள் மீண்டும் மீண்டும் விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டியதில்லை. ஷெங்கன் பகுதி ஐரோப்பிய ஒன்றியத்தின் 25 உறுப்பு நாடுகளுடன் 29 ஐரோப்பிய நாடுகளைக் கொண்டுள்ளது. அதாவது ஒரே ஒரு விசா மூலம் இந்த நாடுகளுக்குச் செல்ல முடியும். ஷெங்கன் பகுதியில் பெல்ஜியம், பல்கேரியா, குரோஷியா, செக் குடியரசு, டென்மார்க், ஜெர்மனி, எஸ்டோனியா, கிரீஸ், ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி, லாட்வியா, லிதுவேனியா, லக்சம்பர்க், ஹங்கேரி, மால்டா, நெதர்லாந்து, ஆஸ்திரியா, போலந்து, போர்ச்சுகல், ருமேனியா, ஸ்லோவேனியா, ஸ்லோவாக்கியா, ஐஸ்லாந்து, லிச்சென்ஸ்டீன், நார்வே மற்றும் சுவிட்சர்லாந்து ஆகியவை அடங்கும். மேலும் படிக்க | இந்தியாவின் மீன் கறி மசாலாவில் நச்சுப் பொருள்...? திருப்பி அனுப்பும் சிங்கப்பூர் - முழு விவரம்! குடிபெயர்வு மற்றும் இரு நாடுகளுக்கு இடையேயான மக்கள் தொடர்பு தொடர்பான ஐரோப்பிய ஒன்றிய-இந்தியா பொதுவான நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மக்கள்-மக்கள் தொடர்புகளை எளிதாக்கும் அதே வேளையில் இடம்பெயர்வு கொள்கையில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இந்தியாவிற்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை இந்த புதிய விதி நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான உறவுகள் தொடர்ந்து வலுவடைந்து வருகின்றன. விசா விதிகளில் மாற்றம் ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய நட்பு நாடாக இந்தியாவின் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கிறது. இது தவிர, இருவருக்குமான ஆழமான உறவையும் இது எடுத்து காட்டுகிறது. இந்த ஷெங்கன் விசாக்கள் மூலம் ஐரோப்பிய பிராந்தியத்திற்குள் பயணிக்க அனுமதி கிடைத்தாலும், அவை வேலை செய்வதற்கான அனுமதியை கொடுக்காது என்பது குறிப்பிடத்தக்கது. வேலை செய்ய விரும்புபவர், ஷெங்கன் பகுதியில் உள்ள சம்பந்தப்பட்ட நாடுகளின் விதிகளைப் பின்பற்ற வேண்டும். மேலும் படிக்க | பாரபட்சம் காட்டும் நெஸ்லே... இந்தியாவில் விற்கப்படும் குழந்தை உணவுகளில் சர்க்கரை! சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.